(3655)

(3655)

வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,

செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,

வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,

செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ.

 

பதவுரை

வைகுந்தநாதன்

பரமபதநாதனை எம்பெருமான்

என் வல்வினை மாய்ந்து அற

என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய்

(அதனால்)

குந்தன்

பரிசுத்தி பெற்றவனாய்

தன்னை என் ஆன்கி

என்னேடு ஒரு நீராகக்கலந்து

என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ

என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி

வண் தீம் கவி

உதாரமதுரங்களான பாசுரங்களை

செய் குந்தன் தன்னை

செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை

சிந்தித்து எந்நாள் ஆர்வன்

அநுஸந்தித்து எப்போது த்ருப்தி பிறப்பது?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னைக்கொண்டு பரமபோகயமான கவியைப் பாடுவித்துக்கொண்ட பரமோபகாரத்திற்கு இவனைக் காலமுள்ள தனையும் அநுபவித்தாலும் த்ருப்தி பெறமாட்டேனென்கிறார்.  அயர்வறு மமரர்க ளதிபதியாயிருந்துவைத்து நித்யஸம் ஸாரியான என் பக்கலிலே வந்து மேல்விழா நின்றனே!, என்னுடைய வல்வினைகளையெல்லாம் போக்கி அதனுல் குந்தனென்னும் திருநாமத்தையுடையவனயினனே!, என்னைத் தன்னைப்போலே தூயனக்கி என்னைக்கொண்டு தனனை வைகுண்டநாதனகப் புகழச்செய்து அதனல் தான் ஸந்துஷ்டனகிறனே! இந்த நீர்மையை நான் எத்தனை நாள் சிந்தித்தாலும் த்ருப்திபெறக் கூடியதாக இல்லையே; என்செய்வேன்! என்றராயிற்று.

இப்பாட்டில் குந்தன் என்பதற்குப் பலபடியாகப் பொருள் கொள்ளுவர்கள். “குமுத: குந்த:” என்று ஸஹஸ்ரநாமமாதலால் குந்தனென்று திருநாமஞ் சொன்னபடியாகலாம். அத்திருநாமத்திற்கு சங்கராசார்யர் உரைத்த பொருள்- (1) குந்தமலர்போல் அழகான அங்கமுடையவர்; ஸ்படிகம் போலத் தெளிவாயிருப்பவரென்கை. (2) பரசுராமாவதாரத்தில் பூமியைக் கச்யபருக்கு யாகதக்ஷணையாகக்கொடுத்தவர். (3) பூமியை க்ஷத்ரியர்களில்லாமற் கண்டித்தவர் = என்று. இதற்கு பட்டர் அருளிச்செய்த அர்த்தமாவது-ஞானம் வைராக்யம் முதலிய முற்படிகள் ஏறினவர்களுக்குப் பரபக்திபரஜ்ஞானபரமபக்திகளாகிய மேற்படிகளைக் கொடுப்பவர் என்று. வடமொழியில் குந்தமென்று ஆயுதவிசேஷத்திற்குப் பெயராதலால், வல்வினை மாய்ந்தறச் செய்குந்தன்-விரோதிநிரஸநம் செய்யவல்ல ஆயுத விசேஷத்தையுடையவன் என்றுமாம்.

வண்டீங்கவி என்றவிடத்து, வண் தீம் கவி என்று பதவியாகம். தீம் என்று இனிமை.

 

English Translation

When shall I know to my fill the Lord who destroyed my karmas? He made me his andthrough my words has sung his own songs on Vaikunta

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top