(3634)

(3634)

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் ,

கோளிழைத்தண் முத்தமும் தளிரும் குளிர்வான் பிறையும்,

கோளிழையாவுடைய கொழுஞ் சோதி வட்டங்கொல், கண்ணன்,

கோளிழைவாள் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே?

 

பதவுரை

கோள் இழை தாமரையும்

தன்னுடைய வொளியே தனக்கு ஆபரணமானகப் போரும்படியான தாமரையும் (திருக்கண்களும்)

கொடியும்

கற்பகக் கொடியும் (திருமூக்கும்)

பவளமும்

பவளமும் (திருவதரமும்)

வில்லும்

வில்லும் (திருப்புருவங்களும்)

கோள் இழைதண்முத்தமும்

தன்னுடைய தேஜஸஸையே தனக்கு ஆபரணமாகவுடைத்தும் (தந்தபங்க்தியும்)

தளிரும்

தளிரும் (திருக்காதும்)

குளிர் வான் பிறையும்

குளிர்ந்து பெருத்த பிறையும் (நெற்றியும்) ஆகிய  இவற்றோடே கூடி

கோள் இழையா உடைய

தன்னழகே தனக்கு ஆபரணமாயிருக்கிற

கொழு சோதி வட்டம் கொல்

பூர்ணமான ஜ்யோதிர் மண்டலஸீஉலீ!

கண்ணன்

கண்ணபிரானது

கோள் இழை வாள் முகம் ஆய்

தன்னொளிதானே தனக்காபரணமான அழகிய முகமென்றொரு வியாஜத்தையிட்டு

கொடியேன் உயிர் கொள் கின்றது

கொடியேனான வென்னுடைய உயிரைக் கொள்ளை கொள்ளாநின்றது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கோளிழைத் தாமரையும்) கீழே ஏழு பாட்டுக்கள் கடந்தன. அவ்வேழு பாட்டுக்களிலும் ஏழு அவயவங்கள் நலிந்தன்மை சொல்லிற்று. அவையெல்லாம் திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் சேர்ந்து திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் பாட்டின்.

அலங்கார சாஸ்த்ரத்தில் ரூபகாதிசயோக்தி யென்தொரு அலங்காரமுண்டு பச்ய நீலோபலத்வந்த்வாத் நிஸ்ஸரத்தி சிதாச்சரா: என்று வடநூலார் உதாஹரணம் காட்டுவர். இரண்டு கருநெய்தல் பூக்களிலிருந்து கூர்மையான் அம்புகள் புறம்படுகிறபடி பாராய் என்ற இதனால் சொல்லுகிறது. இரண்டு கண்களிலிருந்து கடாக்ஷ்பாதங்கள் விழுகிறபடியைச் சொன்னவாறு. இந்த வகையிலே இப்பாட்டில்  முன்னிரண்டடிகள் அமைந்துள்ளன. தாமரை, கொடி, பவளம், வில், முத்து, தளிர்; பிறை என்று சொல்லப்பட்டவை உபமேயத்தை மறைந்து உபமானத்தை மாத்திரம். சொன்னபடி. முதற்பாடி;டில் “ஆழியங் கண்ணபிரான் திருக்கண்கள்-தாமரை சொல்லிற்று. இரண்டாம் பாட்டில்  “மாட்டுயர்கற்பகத்தின் வல்லி-ஈட்டிய சொல்லிற்று. வெண்ணெயுண்டான் திருமூக்கு  என்றபடியே இங்;கு  மூக்கைக் கொடியாகச் சொல்லுகிற்று. மூன்றாம் கண்களைத் தாமரையாகச் சொல்லுகிற்று, இரண்டாம் பாட்டில்  “கோலந்திரள் பவளக் கொழுந்துண்டம்-அம்மான் தொண்டைவாய்” என்றபடியே இங்கு அதரத்தைப் பவளமாகச் சொல்லிற்று. நாலாம் பாட்டில் “இன்னுயிர்க் கேழையர்மேல் வளையுமிணை நீலவில் – கண்ணபெருமான் புருவம்” என்றபடியே இங்கு புருவத்தை வில்லாகச் சொல்லிற்று. ஐந்தாம் பாட்டில் “எண்னாவியடுமணிமுத்தம்-குன்றமெடுத்த பிரான் முறுவல் என்றபடியே இங்து முறுவலை முத்தாகச் சொல்லுகிற்று. ஆறாம் பாட்டில் “மகரந்தழைக்குந்தளி’-திருக்குண்டலக் காதுகள்” என்றபடியே இங்குக் காதுகளைத் தளிராகச் சொல்லுற்று. ஏழாம் பாட்டில் “நாண் மன்னு வெண்திங்கள் – பெருமான்தன் திருநுதல்” என்ற படியே இங்குத் திருநெற்றியைப் பறையாகச் சொல்லிற்று. ஆகிய இவற்றையெல்லாம் சேர்த்துக் காணும்போது ‘சோதிகளெல்லாம் ஒன்று சேர்ந்த சேர்த்தியோ!(அதாவது, ஜ்யோதிர்மண்டலஸீஉலீ!) என்னலாம்படி யிருக்கையாலே மூன்றாமடியில் கொழுஞ்சோதி வட்டங்கொல்’ என்றாள். உண்மையில் இவையெல்லாம் ஒன்று சோந்த எம்பெருமானுடைய திருமுகமண்டல மென்று காண்கிறபடியால் அது ஈற்றடியால் சொல்லப்பட்டது.

 

English Translation

The beautiful face of Krishna has taken my soul! His lotus eyes, tendril nose, coral lips, bow-like eyebrows, pearly teeth, ornamented ears and crescent-marked forehead stand like a radiant orb of brilliance

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top