(3633)
காண்மின்கள் அன்னையர் காள்! என்று காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்! நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள் பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன் உயிர் கோளிழைத்தே
பதவுரை
|
அன்னையர் காள காண்மின்கள் என்று |
– |
தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி |
|
காட்டும் வகை அறியேன் |
– |
(உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்; |
|
நாள் மன்னு வெண் திங்கள் கொல் |
– |
பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ! |
|
நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல் |
– |
ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ! |
|
சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன் |
– |
உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது |
|
திரு நுதலே |
– |
திரு நெற்றியே |
|
கோள் மன்னி |
– |
மிடுக்குப் பொருத்தி |
|
கொடியேன் உயிர் கோள் இழைத்து |
– |
பாவியான வென்னுடைய பிராணனே முடிக்கையிலே துணிந்து |
|
ஆவி அடும் |
– |
என் ஆத்மாவை நலியாநின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
(காண்மின்கள்.) திருநெற்றியினழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள். அவ்வழகை எல்லார்க்கும் காட்டவேணுமென்றும், அதைக்கண்டு தான் படுகிற பாட்டை எல்லாரும் படவேணுமென்றும் இவளுக்கு ஆசையுள்ளது; ஆனால் அல்வழகு எடுத்துக்காட்டத்தக்கதாக இல்லையே; தனக்குப்போலே அவர்களுக்கும் உருவெளிப்பாடு உண்டானாலாவது காண்மின்களென்று காட்டும் வகையறியேன்” என்று தளர்கின்றாள். அவ்வழகு என் கைக்குப்பிடிபடவில்லை; உங்களுக்கோ உருவெளிப்பாடு உண்டாகவில்லை; எங்ஙனே காட்டுவேன்? நானேயனுபவித்து நானே நலிவுபடுவேனித்தனை என்றளாயிற்று.
நீங்கள் கண்டாலென்ன. காணாவிடிலென்ன? உங்களுக்குக் காட்டவேண்டிய அவசியந்தான் எனக்கென்ன? நான் அனுபவிக்கிறேன் போங்கள் என்று சொல்லி இரண்டாமடியினாலே அநுபவிக்கிறாள். (நாள்மன்னு வெண்திங்கள் கொல்! நயந்தார்கட்கு நச்சிலைகொல்!) அஷ்டமியறவான நாளோடே மன்னி அர்த்தாகாரனாகையாலே களங்கமற்று வெளுத்த சந்திரனோ? அல்லது நச்சுவடிவாயிருப்பதொரு இல்லையோ! என்கிறாள். இவ்விடத்து ஈட்டிலே – “மேல்காற்றிலே காட்டப் பரிஹாரமாம் மருந்தாயிற்று இது” என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது. உலகில் வியாதிக்ரஸ்தர் மேல் மேல்காற்றுபட்டலாறே ரோகம் அபிவிருத்திடையும் என்று சொல்லுவர்கள். பகவத்விஷயமாகிற மருந்து அதற்கு எதிர்த்தட்டாயிருக்கும்; மேல்காற்றுப் பட்டால் தீரும் என்கை. அபத்த்யங்களையும் ஸஹிக்கும்படியான ஔஷதம் என்ற படி.
கீழரண்டடிகளால் பேசப்பட்ட வஸ்து இன்னதென்கிறது மூன்றாமடி திருத்தோளழகாலே என்னை யீடுபடுத்திக்கொண்ட பெருமானுடைய திருநெற்றியே என்னை யிப்பாடுபடுத்தாநின்ற தென்கிறாள். (கொடியேனுயிர் கோளிழைத்து – கோள்மன்னி ஆவியடும்) பாவியேனான வென்னுடைய உயிரினழகை அழித்துக் கொள்கையிலே விருப்பத்தைப்பண்ணி மிடுக்கையவலம்பித்து என்னாத்மாவை நலியாநின்றது விருப்பத்தைப்பண்ணி மிடுக்கையவலம்பித்து என்னாத்மாவை நலியாநின்றது என்றபடி. தோற்புரையே போகையன்றிகே ஸத்தையை யழியா நின்றதென்கை
English Translation
Ladies, I know not how to show you this, but see! is it the waxing crescent moon? Alas, is there no poison for lovers? The forehead of my Lord with four arms afflicts my soul and kills me relentlessly
