(3635)
கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந் திட்ட கொழுஞ்சுருளின்,
உள்கொண்ட நீலநன் னூல்தழை கொல்?அன்று மாயங்குழல்,
விள்கின்ற பூந்தண் டுழாய்விரை நாறவந் தென்னுயிரை,
கள்கின்ற வாறறி யீரன்னை மீர்! கழறாநிற்றிரே.
பதவுரை
|
கொள்கின்ற கோள் இருளை |
– |
உலகத்தை யெல்லாம் வியாபிக்கின்ற மிடுக்கையுடைய இருளை |
|
சுகிர்ந்திட்ட கொழு சுருளின் |
– |
பன்னிப் பன்னிச் சுருட்டப்பெற்ற சிறந்தவொரு சுருளினுடைய |
|
உள் கொண்ட நீலம் நல்நூல் தழை கொல் |
– |
(கையழுக்குப்படாமல்) உள்ளே நூற்கப்பட்ட நீல நிறத்தையுடைய அழகிய நூல்திரளோ! |
|
அன்று |
– |
அதுவென்று, அதுவன்று; திருக்குழல் கற்றை என்றிவ்வளவே சொல்லத்தகுமத்தனை; (அத்திருக்குழலானது) |
|
விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து |
– |
அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து |
|
என்; உயிரை |
– |
என் ஆத்மாலை |
|
கள்கின்ற ஆறு |
– |
கொள்ளை கொள்ளும் விதந்தை |
|
அன்னைமீர் அறியீர் |
– |
தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை; |
|
கழறா நிற்றிர் |
– |
வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கொள்கின்ற கோளிருளை) திருக்கழல் வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள். இதில் முன்னடிகள் வெகு விலக்ஷ்ணமானவை. திருக்குழலே ஒருவாறு உல்லேகம் பண்ணுவதும், அந்த உல்லேகமும் உரியதன்று என்று உதறித்தள்ளுவதும் திருக்குழலன் ஒப்பில்லாமையைக் காட்டுதற்காகவென்க. உல்லோகம் செய்தபடி எங்ஙனே யென்னில், பிரளய காலத்தில் பிரபஞ்சத்தையெல்லாம் லிடாபியாசத்தைக் கழித்துப் பரமஸாரமான பாகத்தை நூல் நூற்பதற்காகக் கொள்ளும் ஒருபஞ்சச் சுருளே போலே சுருளையாக்கி அதில் நின்றும் நூற்கப்பட்ட தொரு நீலநன்னூல் தழையோ; என்று சொல்லாமென்று பார்த்தார்; இந்த அபூதோபமையையும் ஸஹியாகபடியன்றோ திரக்குழலிப்பது; ஆகையால் உடனே அன்று என்று தாமே மறுத்துவிட்டார்; பின்னை என்னவென்று சொல்லாமென்ன, மாயன் குழல்என்றிவ்வளவே (உபமேயந்தன்னையே) சொல்லுவேணுமென்று முடித்தபடி.
திருமாலிருஞ்சோலையழகருடைய திருக்குழல்கற்றையை வருணிக்கின்ற கூரத்தாழ்வான் ஸூந்தரபாஹூஸ்தவத்திலே “அந்தம தமஸ் திமிரநிர்மிதமேவ யத்ஸ்யாத் தத்ஸாரஸாதிதஸூதந்த்வத்திவ்ருத்தவார்த்தம், ஈச்ஸ்ய கேசவஹரேரலகாலிஜாலம்” என்றருளிச் செய்தது இப்பாசுரத்திற்கு ப்ரதிச்சந்தமாகவே யிருக்கும்.
அப்படிப்பட்ட திருக்குழவினழகானது திருத்துழாய் நறுமணத்தோடு கூட வந்து என்னுயிரைக் கொள்ளைகொள்ளா நின்ற விதம் அன்னைமீர்! உங்களுக்குத் தெரிந்திருந்தால் என்னை நீங்கள் கடிந்து பொடிந்து வார்த்தை சொல்லமாட்டீர்கள்: அஃதறியாமையே இங்ஙனம் திரஸ்கரித்துப் பேசுகின்றீர்கள்; என்றாளாயிற்று. கழறுதல்-மனம் நோகும் படி பேசுதல்.
English Translation
Are they radiant sunrays that have soaked up the darkness of night? No, they are the dark radiant tresses of the Lord, fragrant with fresh Tulasi blossoms, taking in my soul. Alas! You do not understand this, Ladies, and you abuse me
