(3549)
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
பதவுரை
|
தெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா |
– |
சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத |
|
திரு மாலுக்கு |
– |
ஸ்ரீமந்நாராயணனுக்கு |
|
உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான |
||
|
தொண்டர் தொண்டர் |
– |
பக்த பக்தர்களுக்கு |
|
தொண்டன் |
– |
பக்தரான |
|
சடகோபன் |
– |
நம்மாழ்வார் |
|
தெரிய சொன்ன |
– |
விசதமாக அருளிச்செய்த |
|
ஓர் ஆயிரத்துள் |
– |
விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே |
|
இ பத்தும் |
– |
இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை) |
|
உலகம் உண்டாதற்கு |
– |
உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே |
|
உரிய தொண்டர் ஆக்கும் |
– |
அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (தெரிதல் நினைதல்) இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் துலைக்கட்டுகிறார். * நாயமாத்மா ச்ருதியின் தாற்பரியத்தை முதலடியாலே அருளிச் செய்கிறார். ••••எம்பெருமானை தெரிந்துகொள்வதோ அடைவதோ அவனுடைய திருவருளாலே நேரவேண்டுமேயன்றி இவனுடைய ப்ரவசந மேதா ச்ரவணங்களாலே நேரக்கூடியதன்று என்றபடி. அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு சரமாவதிதாஸ பூதரான ஆழ்வாரருளிச் செய்த விப்பத்து தன்னை யதிகரித்தாரை ஸர்வேச்வரனுக்கு உரிய தொண்டராக்கு மென்றாராயிற்று.
உரிய தொண்டர் என்றதற்கு நம்பிள்ளை அர்த்தமருளிச் செய்கிறார். – “ஸம்ஸாரம் நன்றுமாய் பகவத் விஷயம் தீதானுலும் அத்தை விடமாட்டாதவர்கள்“ என்று. அதாவது குணங்கண்டு தொண்டு பூண்டிருக்கையன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்தமாகவே தொண்டு பூண்டிருக்குமவர்கள் என்கை.
English Translation
This decad of the thousand revelations of devotee’s devotees’ devotee Satakopan on the Lord beyond sight, though and feeling will secure the feet of the Lord who swallowed the Earth.
