(3550)

(3550)

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே!

நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே!

திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!

குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே.

பதவுரை

உலகம் உண்ட பெரு வாயா

(பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே!
உலப்பு இல் கீர்த்தி அம்மானே

முடிவில்லாத புகழுடைய பெருமானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி

அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
நெடியாய்

மிகப்பெரியோனே!
அடியேன் ஆர் உயிரே

அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே!
உலகுக்கு திலதம் ஆய் நின்ற

உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற
எம்பெருமானே

அஸ்மத்ஸ்வாமியே!
குலம் தொல் அடியேன்

குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன்
உன பாதம்

உனது திருவடிகளை
கூடும் ஆறு

வந்து சேறும்படியை
கூறாய்

அருளிச் செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உலகமுண்டபெருவாயா) ஸகல ஜகத்தையும் ரக்ஷிக்குமியல்வை யுடைபையாய்க் கொண்டு திருமலையிலே நித்யஸந்நதி பண்ணியிருக்கிறவுன்னை நான் கிட்டியநுபவிக்கும் விரகு அருளிச் செய்ய வேணுமென்கிறார். உன்னுடைய திருவடியை நான் கிட்டப்பெறாமல் கிலேசிப்பது பிரளயாபத்தோடொக்கும், இந்த ஆபத்தை நீ போக்கினால்லது பிரளயாபத்தைப் போக்கினாயென்கிற புகழ் உனக்கு நிலைநிற்கமாட்டா தென்கிற கருத்துப்பட “உலகமுண்ட பெருமுண்டது, அந்த ஆபத்ரக்ஷகத்வம் மெய்யானால் என்னையும் ஆபத்தில் நின்று மெடுத்தருளித் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டாவோவென்றவாறு.

இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின் – “ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது, விபூதிக்காகவுண்டான ஆபத்து எனக்கொருவனுக்கு முண்டானால் நோக்கலாகாதோ? ப்ரளயார்ணவத்திலே யழுந்துவாரையோ நோக்கலாவது, ஸம்ஸாரவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ? அபேக்ஷியாதாரையோ நோக்கலாவது, அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ? சரீரத்துக்கு வரும் ஆபத்தோ நோக்கலாவது, ஆத்மாவுக்கு வருவது பத்து நோக்கலாகாதோ? ஜலப்ரஸயத்தில் அகப்படிலோ நோக்கலாவது, விரஹப்ரளயத்துக்கு உதவலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தோ நோக்கலாவது, உன்னால் வருமாபத்து நோக்கலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தோ நோக்கலாவது, உன்னால் வருமாபத்து நோக்கலாகாதோ? சரணம் புகாதாரை ரக்ஷிக்கவேணமென்றொரு நியதியுண்டோ, சரணம்புக்காரை ரக்ஷிக்கலாகாதோ? இத்யாதி.

பெருவாயா! என்று இங்கே வாயின் பெருமை சொன்னது அவனுடைய பாரிப்லின் பெருமையைச் சொன்னபடி. எவ்வளவு ரக்ஷணங்கள் செய்தும் “என்ன ரக்ஷித்தோம், என்றே நெஞ்சில் குறைவாளனா யிருக்குமவனன்றோ  எம்பெருமான். த்ரௌபதிக்காக எத்தனையோ காரியங்கள் செய்தும் (அதாவது – ஸதஸ்ஸில் அவள் பட்ட மகாபரிபவத்தைப் போக்கியும் துரியோதநாதிகளை நிரசித்தும் தருமபுத்திரன் தலையில் முடியை வைத்தும் அவள் குழலை முடிப்பித்தும்) * ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நாபஸர்ப்பதி * என்று குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும் * நாதிஸ்வஸ்தமநா யயௌ * என்னும்படி திருவுள்ளத்தில் புண்ணோடே யெழுந்தருளினனென்றால் அவனுடைய ரக்ஷணப்பாரிப்பு பேச்சுக்கு நிலமாகுமோ?

உலப்பில் கீர்த்தியம்மானே – உலப்பாவது முடிவு, முடிவில்லாத புகழுடைமையாவது திருக்குணங்களைத் தனித்தனியாகவும் ஒரு ராசியாகவும் எண்ண முடியாமை. அல்லது சத்ருக்கள் கோஷ்டியிலும் ப்ரஸித்தமாயிருக்கை யென்னவுமாம். வைப வந்தவர்கள் வாயினாலும் வாழ்த்த வேண்டும்படினறோ எம்பெருமானுடைய திருக்குணங்களிருப்பது. ஸ்ரீராமாயணத்தில் சூர்ப்பணகை, தாரை, மந்தோதரி ஆகிய மூன்று கைம்பெண்டாட்டிகளும் நிந்திக்கவேண்டிய பிரகரணத்திலும் வாயாரவாழ்த்தினபடி கண்டால் பின்னை என்சொல்லவேணும்? காதும் மூக்கு மறுப்புண்டு காதூடணர் பக்கலில் கதறிக்கொண்டு ஓடாநின்ற சூர்ப்பணகை நெஞ்சைப் பறிகொடுத்து * தருணௌ ரூபஸம்பந்நௌ * என்று தொடங்கி ஆச்சரியமாக வாழ்த்துகிறாள் இங்ஙனமே மற்றுங்காண்க.

நிலவுஞ் சுடர் சூழொளிமூர்த்தி –ரக்ஷிக்குமவனல்லனாயினும் குணமுடையவனல்லனாயினும் விடமுடியாத வடிவழகு படைத்தவனென்கிறது. நிலவும் என்றது எப்போதுமுள்ள தென்றபடி. ஒரு கருமமடியாக வருவதும் பிறகு கழிந்து போவதுமன்றிக்கே நித்யஸித்தமான சுடர்மிக்கதாய் ஒளிமயமான மூர்த்தியாயிருக்கை. ரஜஸ்தமோ குணங்கள் கலசாமல் சுத்தஸத்வமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் நெய்திணுங்கினாப்போலே உள்ளும் புறம்மொக்க ஒளியே யாயிருக்கை.

நெடியாய்! –தொட்ட தொட்ட துறைதோறும் தரை காணவொண்ணாதபடி பெருகிச் செல்பவனே! என்கை. ச்ருதியானது •••  மேதம் புருஷம் மஹாந்தம் என்று ஓதிற்று. அவ்வர்த்தமே நெடியானென்பது விளியுருபு ஏற்று நெடியாய்! என்றாகும்.

அடியேன் ஆருயிரே – வடிவழகையும் திருக்குணங்களையுங் காட்டிப் பிரிந்து பிழைக்க வொண்ணாதபடி என்னைப்பண்ணினவனே! என்றவாறு. “திருவேங்கடத்தெம்பெருமானே அடியேனாருயிரே!“ என்று கூட்டுவது. திருமலையிலே நின்று என்னுடைய சேஷத்வ முறையை யறிவித்து உன்னாலல்லது செல்லாதபடி பண்ணினவனே! என்கை.

அந்தத் திருமலைதான் எப்படிப்பட்ட தென்றால், திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடம், மாதர்கட்கு ஆபரணம் அழகு பெறுவிக்குமாபோலே பூமிப்பிராட்டிக்குத் திலகமென்னுமா பரணமாயிருந்து அழகு பெறுவிக்குமதென்கை. ஆக மூன்றடிகளாலே எம்பெருமான்படிகளைப் பரக்கச்சொல்லி மேலே குலதொலடியேன் என்று ஸ்வஸ்வரூபத்தைச் சுருங்கச் சொல்லுகிறார். பிரானே! குலபலம்பரையாக நான் உனக்கே அடிமைப் பட்டவனன்றோ, வேறொருவர் கடைத்தலைபுகுந்து கிடந்துழல்பவனோ நான், என்னை நீ நோக்காவிடில் வேறு நோக்குவாருண்டா? என் ஸ்வரூபம் இதுவான பின்பு ஸ்வரூபாநுரூபமான பேற்றைப் பெறும்படிபண்ணி யருளவேண்டுவது உன் கடமையன்றோ. அடியானுக்கு அடியோடேயன்றோ சேர்த்தி தருவது, அடியைப் பிரிந்திருந்து அடியேனென்றால் தகுதியாமோ? அடியேன் உன்திருவடி சேரும் வகையைப்பற்றி ஒரு வார்த்தையருளிற் செய்யவேணும் என்றாயிற்று.

English Translation

O Lord of eternal glory who swallowed the Earth! O Great icon of effulgent knowledge, my soul’s master!  You stand like a Tilaka for the Earth in Venkatam, Pray decree that this bonded serf reaches your lotus feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top