(3548)

(3548)

குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,

சிறுகா பெருகா அளவிலின்பம் சேர்ந்தாலும்,

மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,

சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே?

 

பதவுரை

மாயோன்

ஆச்சரியமானவனே!

குறுகா நீளா

ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும்

இறுதி கூடா

முடிவுமில்லாமலும்

எனை ஊழி

எக்காலத்திலும்

சிறுகா பெருகா

க்ஷய வ்ருத்திகளில்லாமலும்

அளவு இல்

பரிச்சேதமற்றதாயு மிருக்கிற

இன்பம்

கைவல்யா நுபவஸுகமானது

சேர்ந்தாலும்

வந்து கூடினாலும்

தெரியில்

நிரூபித்துப்பார்க்கில்

மறுகால் இன்றி

பின்னையொருகாலும்

இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக)

உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை

உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை

உறுமோ

ஒத்திருக்குமோ?

அந்தோ

ஐயோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (குறுகாநீளா) கீழ்ப்பாட்டில் சிற்றின்பங்களை வெறுத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! விஷயஸுகம் அல்பமாய் அஸ்திரமாயிருக்குமென்று வெறுத்தீராகில் அநல்பமாய் ஸ்திரமாயிருக்குமதான கைவல்ய மோக்ஷ ஸுகத்தைக் கொள்ளுகிறீரா? என்று  கேட்க, அதற்கு உத்தரமருளிச் செய்கிறாரிப் பாட்டில். கைவல்ய மோக்ஷம் ஆத்மாவுள்ளதனையும் அநுபவிக்குமதாயிருந்தாலும் உன்னுடைய கைங்கர்ய ஸுகம் அடுத்தக்ஷணத்திலின்றிக்கே ஒருக்ஷணமே யாவதானாலும் இத்தைக் கைவிட்டு அத்தைப் பற்றுகை உறும் என்றிருப்பாரோ அறிவுடையார்? சிற்றின்பம் அல்பமும் அஸ்திரமுமாயிருக்குமென்று அதனுடைய தோஷத்தை அடியேன் எடுத்துரைத்தது அதன் ஸ்வரூபத்தைச் சொன்னபடியேயொழிய வேண்டாமைக்கு ஹேதுவாகச் சொன்னபடியன்று. உன் கைங்கர்யமாயிக்குமது எதுவோ அதுவே எனக்கு வேண்டுவது, அங்ஙனல்லாதது எனக்கு வேண்டாதது, உன்கைங்கர்யமானது அல்பமும் அஸ்திரமுமாக இருந்தாலுங்கூட உன் கைங்கரியமென்கிற காரணத்தினால் இதுவே யெனக்கு வேண்டுவது என்கிறார்.

குறுகாநீளா – குறுகுகையாவது இரண்டொருநாள் அநுபவிக்கும்படியா யிருத்தல், நீளுகையாவது பத்தெட்டு நாள் பத்தெட்டு மாதம் பத்தெட்டாண்டு அநுபவிக்கும்படியாயிருத்தல். இவையிரண்டுமில்லை கைவல்ய மோக்ஷத்திற்கு, ஏனெனில், ஆத்மாவுள்ளளவும் அது உளதாகையாலே இறுதிகூடா என்பதனால் அது வ்யக்தமாக்கப்பட்டது.

எனையூழி சிறுகா பெருகா – எத்தனை கல்பமானாலும் சிறப்பது பெருப்பதென்கிற ஸங்கோச விகாஸங்களில்லாமை, என்றும் ஏகரூபமாயிருக்குமது என்றபடி. இப்படிப்பட்ட “அளவிலின்பம் சேர்ந்தாலும்“ – ஆத்மா நுபவஸுகத்தையடையப் பெற்றாலும்.

பகவத் கைங்கர்யரஸம் இதற்கு எதிரிடையாக இருக்குமதன்று. ஆனாலும் எதிரிடையாயிருந்தாலுங்கூட அதுவே யெனக்கு அபேக்ஷிதமென்கிறார் பின்னடிகளில், அதாவது – கைவல்ய ஸுகம் போலே நிரந்தரமாக அநுபவிப்பதல்லாமல் ஒரு க்ஷணமாத்ரமே அநுபவிக்குமாதாயிருந்தாலும் என்று அந்வாருஹ்யவாதம் செய்தபடி.

அந்தோ என்றது ஐயோவென்றபடி. என்ன பரிதாபமென்னில், நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “பார்வதபரமாணுக்களுக்கிருந்த வைஷம்யம் சொல்லும்படியாவதே!“ என்று. பர்வதத்திற்கும் பரமாணுவுக்குமுள்ள வாகியை ஒவ்வொருவரும் தாமே தெரிந்துகொள்ள வேண்டியிருக்க அதையொருவர் எடுத்துரைக்க நேர்ந்தால் அது எப்படி பரிதாபாஸ்பதமோ அப்படியே கைங்கர்யரஸத்திற்கும் கைவல்ய ரஸத்திற்குமுள்ள வாசியை நானெடுத்துரைப்பதும் பரிதாபாஸ்பதமென்றவாறு.

 

English Translation

My Lord1 For many endless ages that neither shrink nor stretch, if I were to attain the infinite pleasures of the self, -Alas!  On reflection –will that ever match even a short while of service to you without returns?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top