(3538)

(3538)

மாற்றங்க ளாய்ந்துகொண்டு மதுசூதபி ரானடிமேல்,

நாற்றங்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன,

தோற்றங்க ளாயிரத்துள் இவையுமொரு பத்தும்வல்லார்,

ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.

 

பதவுரை

மாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன்

பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு

சொற்களை ஆராய்ந்தெடுத்து

மது சூதபிரான் அடி மேல்

எம்பெருமான் திருவடி விஷயமாக

சொன்ன

அருளிச்செய்த

தோற்றங்கள் ஆயிரத்துள்

ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள்

ஊற்றின கண் நுண் மணல்போல்

ஊற்றினிடத்தேயுள்ள நுண்ணிய மணல்போல்

நீர் ஆய் உருகா நிற்பர்

நீர்ப்பண்டமாக உருகப்பெறுவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மாற்றங்களாய்ந்து கொண்டு) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்கும் பாசுரமிது, இதில் விலக்ஷணமானதொரு பலன் கூறப்படுகிறது. “ஊற்றின்கண் நுண் மணல்போல் உருகாநிற்பர் நீராயே“ என்பது இங்குக் காணும் பயனுரை. இதுவொரு பலனோவென்று சங்கிக்கவேண்டா, கல்நெஞ்சராயிராமே ஈரநெஞ்சினராயிருந்து உருகப்பெருவதென்பது ஒரு விலக்ஷணமான பலனன்றோ, ஆகவே இதுவும் பலச்ருதியேயாகும்.

“மாற்றங்களாய்ந்துகொண்டு சொன்ன ஆயிரம்“ என்றதை முக்கியமாக கொண்டு ஆசார்ய ஹ்ருதயத்ல் ஒரு சூர்ணிகை அருளிச் செய்கிறார் – (“ராமாயணம் நாராயண கதை யென்று தொடங்கி“ இத்யாதி) இதன் கருத்தாவது – வால்மீகி முனிவர் ராமகதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று தொடங்கி கங்கையின் உற்பத்தி, ஸுப்ரஹ்மண்யனுடைய உற்பத்தி, புஷ்பகவர்ணநம் முதலானகதைகளைப் பரக்கப் பேசுவதால் அஸத்கீர்த்தநம் பண்ணி வாக்கில் அசுத்தி படைத்தார். வேதவ்யாஸர் “நாராயண கதை“ என்பதாகத் தொடங்கி ஸம்பவபர் வத்திலே பீஷ்மர் முதலான பற்பலருடைய உற்பத்திப்காரங்களை விரிவாகப் பேசுகையாலும், “பூசல் பட்டாலே“ (யுத்த புஸ்தகம்) என்னும்படி பாரதப்போர் வகைகளையே பரக்க நின்று மொழியாகிற கங்கையாலே சுத்தமாக்குகிறேனென்று சொல்லிச் சுத்தி பண்ணிக்கொண்டார். ஆகவிப்படி, தொடங்கின படிக்குச் சேராமே அஸத்கீர்த்தனத்தைப் பண்ணி வாக்கை அசுத்தமாக்கிப் பின்பு அதற்கு சுத்திபண்ண வேண்டாதபடி “திருமாலவன் கவியாது கற்றேன்“ என்றுதிருமால் விஷயமான கவியென்று அடியில் வாயோலையிட்டபடியே“ மாற்ற“களாய்ந்து கலசாதபடி. சொற்களைத் தெரிந்தெடுத்துச் சொல்லப்பட்டதான நம்மாழ்வார்ருளிச்செயலானது தேங்களில் புருஷஸூக்தம் போலவும், தர்மசாஸ்த்ரங்களில் மநுஸ்ம்ருதி போலவும், மஹாபாரதத்தில் கீதை போலவும், புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் போலவும் திவ்யப்ரபந்தங்களுக்குள்ளே ஸாரமாயிருக்குமென்கை.

தோற்றங்களாயிரம் – தோற்றமாவது ப்ராதுர்ப்பாவம். பகவானுடைய ப்ராதுர்ப்பாவம் போலவே திருவாய்மொழியினுடைய ப்ராதுர்ப்பாவமுமென்பர். அவன் மத்ஸ்யகூர்மாதிரூபேண தசாவதாரம் பண்ணினான், திருவாய்மொழியும் பத்துப்பத்தாக அவதாரம் பண்ணிற்று. இதைப்பற்றின. விசேஷார்த்தங்களை ஆசார்ய ஹ்ருதயத்தில் “சாதுசனம் நண்ணா மயர்வற மாசறுக்கும்“ இத்யாதி சூர்ணையிலே காண்க.

 

English Translation

This decad of the thousand revelations of fragrant-groved kurugur’s Satakopan on the feet of Madhusudana, with choicest words, will make the heart melt like fine sand in water.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top