(3417)

(3417)

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,

கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்

செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன்,

வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே.

 

பதவுரை

தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்

எம்பெருமானுடைய

அடி இணை மிசை

உபய பாதங்களிலே,

கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன்

ஆழ்வார்

செய்த

அருளிச் செய்த

ஆயிரத்துள்

ஆயிரத்தினுள்ளே

இவை

இந்த

தண் சிரீவர மங்கை மேய பத்து

வானமாமலைப்தி விஷயமான பதிகத்தை

உடன்

கருத்துடனே

வைகல்

எப்போதும்

பாட வல்லார்

பாட வல்லவர்கள்

வானோர்க்கு

நித்ய ஸூரிகளுக்கு

ஆரா அமுது

ஆராவமுதமாயிருப்பர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தெய்வநாயகன்.) இத்திருவாய்மொழியைக் கற்குமவர்கள் நித்யஸூரிகளுக்கும் ரெமபோக்யராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.

ஸரிவேச்வரனாய் ஆச்ரிதவத்ஸலனாய் தன்னுடைய பெறுகைக்குத் தான் அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவனான  எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வார் ஸமர்ப்பித்த இத்திருவாய்மொழிளைக் கருத்தறிந்து பாடவல்லவர்கள் காலதத்துவமுள்ளதனையும் நித்தியஸூரிகளுக்குப் பரமபோக்யர்களாக ஆகப்பெறுவரென்றதாயிற்று.

 

English Translation

This decad of the thousand on the Lor of Srivaramangala- nagar, by Satakopan of kurugur surrounded by groves of happy flowers, addresses the feet of Deivanayaka, Narayana, Tirivikrama. Those who can sing it will forever be sweet as ambrosia to the celestials.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top