(3416)

(3416)

ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர் கைம்

மாறு நானொன் றிலேனென தாவியு முனதே,

சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை

நாறு பூந்தண் துழாய்முடி யாய்! தெய்வ நாயகனே!

 

பதவுரை

சேறு கொள்

சேற்று நிலங்களிலே வளர்கின்ற

கரும்பும்

கரும்புகளும்

பெரு செந்நெலும்

பெரிய செந்நெற் பயிர்களும்

மலி

மலிந்திருக்கப்பெற்ற

தண்

குளிர்ந்த

சிரீவரமங்கை

வானமாமலைப்பதியிலே (எழுந்தருளியிருக்கிற)

நாறு பூ தண் துழய் முடியாய்

பரிமளம் மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடையவனே!

தெய்வநாயகனே

தெய்நாயகப் பெருமானே!

எனக்கு

அடியேனுக்கு

ஆறு

உபாயமோவென்றால்

நின் பாதமே சரண் ஆக

உன் திருவடிகளே உபாயமாக

தந்தொழிந்தாய்

அநுக்ரஹித்து விட்டாய் (இந்த மஹோபகாரத்திற்கு)

உனக்கு

உன் விஷயத்திலே

ஓர் கைம்மாறு ஒன்று நான் இலேன்

ஒரு பிரதியபகாரமு முடையேனல்லேன்;

எனது ஆவியும்

என்னுடைய ஆத்மாவும்

உனதே

ஏற்கனவே உன்னுடையதாயிரா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆறெனக்கு.) ஏற்கனவே தமக்குக் கிடைத்திருக்கிற அத்யவஸாப விசேஷத்திற்கு க்ருதஜ்ஞதாநுஸந்தாகம் பண்ணுகிறாரிப்பாட்டில். ஆறு என்று வழிக்குப் பெயர்; அதாவது உபாயத்தைச் சொன்னபடி. மேலே, சாணாக என்ற விடத்தில் சரண் என்ற சொல் ‘சரண்யம்’ என்ற வடசொல்லின் விகாரமாய் உபேயத்தைச் சொல்லிற்றாகும். ஆக, “எனக்கு நின் பாதமே ஆறு சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அந்வயித்து “ப்ராப்ய ப்ராபாங்களிரண்டும் உன் திருவடி மலர்களே யென்றிருக்கும் இவத்யவஸாதயத்தை எனக்கு ஸ்வபாவமாம்படி தந்தருளினாய்” என்றருளிச் செய்வர் பிள்ளான்.  பட்டர், ஆறு என்பதற்கும் சரண் என்பதற்கும் உபாயமென்கிற பொருளையே கொள்வர். உபாயப் பொருளதான சரணம் என்கிற வடசொல் சரணென்று திரிந்ததாகக் கொண்டபடி. உபாயமென்னும் பொருளிலே இரண்டு சொற்கள் கிடந்தனவாகில் எங்ஙனே அர்வயிக்கிறதென்னில்; பதவுரையிற் காண்க.

ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “தோற்ற கோள்மிலேன் என்று தொடங்கி உபாயாந்தர சூர்யகையை முன்னிட்டுக் கொண்டு உபாயநிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய்மொழியாகையாலே அத்தையே நிகமிக்கிறது. அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது. ஈச்வரனைப் பற்றின ஏற்றத்தாலே உபாயாக்தங்களை நெகிழுகையொழிய நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தரப்ராவண்ய ஹேதுவாம்; ஔஷதஸேவை பண்ணினானொருவன் ஸர்ப்பத்தின் வாயிலே கைகொடுத்தால் அது நிர்ப்பாதம். ஔஷதஸ்பர்சமில்லாதவன் அத்தைச் செய்தால் அது மரண ஹேதுமாம்.

“சாஸ்த்ரிகள் தெப்பக்கையசைப்போலே இரண்டையுமிடுக்கிப் பிறவிக்கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே இருகையும் விட்டுக் கரை குறுங்காலமெண்ணுவர்கள்” என்கிற ஆசார்யஹ்ருதய திவ்யஸூக்தியை இங்கே நினைப்பது.

உனக்கு ஓர் கைம்மாறு நானொன்றிலேன் = இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பிறப்பித்தருளினவுனக்குத் தகுந்த பிரதியுபகாரம் காணாதவளவேயன்றிக்கே போலியாயிருப்பதொரு உபகாரமும் காண்கின்றிலேன். இங்ஙனே கூறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! உம்முடைய ஆத்மாவைத் தரலாகாதோ? அது ஒரு கைம்மாறாக ஆகலாமே” என்ன, * எனதாவியுமுனதே * என்கிறார்.

நம்பிள்ளையீடு;- “எத்தனையேனும் அளவுடையார்க்கும் நிர்வாஹகனாயிராநின்றாய்; ஆனபின்பு உனக்கு நான் என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவது? நீயோ கனக்க உபகரித்துக்கொண்டு நின்றாய்; நான் அஜ்ஞனாகப்பெற்றிலேன். இங்ஙனேயானாலும் நான் சில செய்து தலைக்கட்டினேனாகவொண்ணாதபடி நீ பரிபூர்ணனானாய்; உபகாரம் கொள்ளாதார் உண்டுடத்துத் திரியா நின்றார்கள்; அறிவுகேடரானவர்கள் சில ப்ரத்யுபகாரம் பண்ணினோம் என்றிராநின்றார்கள்; நீ அபூர்ணனாகில் இவையெல்லாம் சில செய்ததாக நினைத்திருக்கலாயிற்றே; நீயோ பூர்ணானாயிருந்தாய்; ஆனபின்பு ஒன்று செய்து தலைக்கட்டப்போமே?”

தெய்வநாயகனே! = இது வானமாமலையெம்பெருமானுடைய திருநாமம்.

 

English Translation

Lord celestial, wearing a cool fragrant Tulasi wreath! Resident of cool Srivaramangala-nagar where sugarcane and paddy grow fall!  You have given me your feet as my sole refuge and path.  I have nothing to give in return, -my soul too is yours!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top