(3356)
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே ஒக்கின்ற திவ்வுல கத்து,
வைகுந்தன் பூதங்க ளேயாய் மாயத்தி னாலெங்கும் மன்னி,
ஐயமொன் றில்லை யரக்கர் அசுரர் பிறந்தீருள் ளீரேல்,
உய்யும் வகையில்லை தொண்டீர்! ஊழி பெயர்த்திடும் கொன்றே.
பதவுரை
|
செய்கின்றது |
– |
இவர்கள் செய்கிற காரியம் |
|
என் கண்ணுக்கு |
– |
நான் பார்க்குமிடத்து |
|
ஒன்றே ஒக்கின்றது |
– |
ஒன்றுபோலவே யிரா நின்றது; |
|
இ உலகத்து |
– |
இவ்விபூதியிலே |
|
வைகுந்தன் பூதங்களே |
– |
பகவத்பக்தர்களே |
|
மயாத்தினால் |
– |
யதேஷ்டமாக |
|
எங்கும் மன்னி |
– |
எல்லாவிடங்களிலும் நிறைந்து |
|
ஆய் |
– |
இருக்கின்றார்கள் |
|
அரக்கர் |
– |
ராக்ஷசர்களாவும் |
|
அசுரர் |
– |
அசுரர்களாகவும் |
|
பிறந்தீர் உள்ளீர் ஏல் |
– |
பிறந்தவர்களாயிருப்பீர்களாகில் |
|
தொண்டீர் |
– |
இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே! |
|
கொன்று |
– |
உங்களைக் கொலைசெய்து |
|
ஊழி பெயர்த்திடும் |
– |
யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்) |
|
(ஆதலால் உங்களுக்கு) |
||
|
உய்யும் வகை இல்லை |
– |
பிழைக்கும் வழிஇல்லை; |
|
ஐயம் ஒள்று இல்லை |
– |
(இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (செய்கின்றது). இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார். எங்குபார்த்தாலும் பாகவத கோஷ்டியொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.
மாய்த்தினாலெங்கும் மன்னி = ஸ்ரீவைகுண்ட நாதனுடைய பக்தர்களான நித்யரும் முக்தரும் ஆச்சரியமாக எங்கும் புகுந்திருக்கிறார்கள் என்கை. மாயம் என்று ஆச்சரியத்தைச் சொல்லுவதன்றிக்கே *** ஸம்பவாமி ஆத்மமாயயா” இத்யாதிஸ்தலங்களிற்போல இச்சையென்கிற பொருளையும் சொல்லுமாதலால் ‘இச்சையாலே’ என்று நம்பிள்ளையருளிச்செய்யும்படி *** என்கிற உபநிஷத்தின்படி திருநாட்டிலுள்ளவர்கள் இந்நிலத்திற்குத் திரும்புதல் இல்லையாயிருக்க, அவர்கள் இங்கு எப்படி வரக்கூடும்? என்று சங்கிக்கவேண்டா; கருமமடியாகத் திரும்புதல் இல்லையென்றதே தவிர, இச்சையாலே திரும்புதலும் இல்லையென்று சொல்லிற்றில்லை; *** என்று உபநிஷத்துதானே ஓதிற்றுண்டே. இது தோன்றவே மாயத்தினால் என்பதற்கு “இச்சையாலே” என்று பொருள் பணித்தது.
ஐயமொன்றில்லை = இது நடுநிலைத் தீபகமாக இருந்து முன்னடிகளிலும் அந்வயிக்கும், பின்னடிகளிலும் அந்வயிக்கும். வைகுந்தன் பூதங்களே எங்கும் மன்னியிருக்கிறார்களென்பதில் ஐயமொன்றில்லை; ராக்ஷஸப்ரக்ருதிகளாயும் ஆஸுரப்பரக்ருதிகளாயும் இங்கேயிருப்பவர்கள் இனித் தொலையவே போகிறார்களளென்பதில் ஐயமொன்றில்லை. – “ஸ்ரீவாநரஸேகையின் நடுவே சுகஸாரணர்கள் புகுந்தாப்போலே புகுரப்பார்த்தாருண்டாகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்கவிரகில்லை” என்பது ஈடு.
கொன்று ஊழி பெயர்த்திடும்=வைகுந்தன் பூதங்கள் உங்களையுங்கொன்று ஊழியையும் பெயர்த்திடுவார்கள் என்கை . ஊழியைப் பெயர்த்திடுகையாவது காலத்தையே மாற்றிவிடுகை.
English Translation
The Lord’s spirits have miraculously entered the Earth. They stand everywhere, their acts alone occupy my vision. Have no doubt, Devotees, if there are Asuras and Rakshasas among you, there is no escape; their days will end in death.
