(3357)
கொன்றுயி ருண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம்,
நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பி ரான்தமர் போந்தார்,
நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்,
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நி றுத்தியே.
பதவுரை
|
கொன்று |
– |
கொலைசெய்து |
|
உயிர் உண்ணும் |
– |
பிராணனைமுடிக்குமதான |
|
விசாதி |
– |
வியாதியும் |
|
பகை |
– |
துவேஷமும் |
|
பசி |
– |
பசியும் (முதலான) |
|
தீயன எல்லாம் |
– |
மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும் |
|
இ உலகில் நின்று கடிவான் |
– |
இவ்விபூதியலே தொலைப்பதற்காக |
|
நேமி பிரான் தமர் |
– |
சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள் |
|
போந்தார் |
– |
வந்துள்ளார்கள்; |
|
இசை |
– |
இசைகளை |
|
நன்று பாடியும் |
– |
நன்றாகப்பாடியும் |
|
துள்ளி ஆடியும் |
– |
துள்ளிக்குதித்தும் |
|
ஞாலம் |
– |
இந்நிலத்திலே |
|
தொண்டீர் |
– |
இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே! |
|
சிந்தையை |
– |
உங்களது நெஞ்சை |
|
செம் நிறத்தி |
– |
செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து |
|
சென்று |
– |
அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய் |
|
தொழுது |
– |
வணங்கி |
|
உய்ம்மின் |
– |
உஜ்ஜீவியுங்கோள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கொன்றுயிருண்ணும்.) இந்த ஸம்ஸாரநிலத்திற்குரிய ஸகலக்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத்öங்கும் பரந்தார்கள், அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கியருளிச்செய்கிறார். விசாதியென்ற வியாதியைச் சொல்லுகிறது. வியாதியென்றும் பகையென்றும் பசியென்றும் சில கெடுதல்களைத் தனித்தனியே பிரியச்சொல்லிவந்து, தீயனவெல்லாம் என்று ஸமுதாயமாக அருளிச்செய்கிறார். இவ்வுலகில் கெடுதல்களாக எவ்வெவையுண்டோ அவையெல்லாவற்றையும் என்றபடி. ***= யத்ராஷ்டக்ஷரஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதோ, ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்வாதி துர்ப்பிக்ஷதஸ்கரர்* (திருவஷ்டாக்ஷாஸித்தியுடைய மஹாபாகவதர் ஒருவர் வாழுமிடத்தில் வியாதியோ பஞ்சமோ கள்வரோ தலைகாட்ட நேராது. என்கிற பிரமாணத்தின்படியே இப்பாட்டின் முன்னடிகள் அமைந்திருக்கின்றன.
நேமிப்பிரான் தமர் என்கையாலே – திருவாழியாழ்வான் பகைவர்களைப் படுத்துகிறபாடு இவர்களும் படுத்தவல்லார்களென்பது விளங்கும்
அங்ஙனம் போந்த நேமிப்பிரான் தமருடைய சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது மூன்றாமடி. அவர்களைச்சென்று ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப் போங்கள்; அல்லது, அவர்களிடம் சென்று அவர்களைத் துணைகொண்டு எம்பெருமானை ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப் போங்கள் – என்கிறது ஈற்றடி. சிந்தையைச் செவ்வையாக நிலைநிறுத்தித் தொழவேணுமென்றது – பிரயோஜநாந்தரத்திற்கு மடியேற்காதே அநந்யப்பரயோஜநமாகத் தொழவேணுமென்றபடி
English Translation
The discus-Lord’s devotees have come to stay, to rid the world of soul-consuming disease, war, hunger and evil. They have spread everywhere, singing in mirth and dancing in ecstacy, Cease thought, Devotees! Go, worship them and be saved.
