(3355)

(3355)

இடங்கொள் சமயத்தை யெல்லாம் எடுத்துக் களைவன போல,

தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய்

கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி,

நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின் றனவே.

 

பதவுரை

இடம் கொள்

எங்கும் நிறைந்த

சமயத்தை எல்லாம்

துஷ்டமதங்களையெல்லாம்

எடுத்து களைவன போலே

வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே

தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்

ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து

கிடந்தும்

படுத்துக்கொண்டும்

இருந்தும்

உட்கார்ந்துகொண்டும்

எழுந்தும்

நின்று கொண்டும்

பல பல கீதம் பாடி நடந்தும்

பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்

பறந்தும்

தரையில் கால் பாவாதபடி

குனித்தும்

கூத்தாடிக்கொண்டு

நாடகம் செய்கின்றன

களித்துத் திரியா நின்றார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இடங்கோள்) உலகத்திலே மிகச்சிறந்த வஸ்துக்கள் ஸ்வல்பமாகவும் உபயோகமற்ற வஸ்துக்கள் அபரிமிதமாகவும் விளைவது இயல்பு. ஸங்கல்பஸூச் யோதயத்தில் தேசிகன் “*********** – ஸர்வத ; கரவீராதிந் ஸூதே ஸாகரமேகலா, ம்ருதஸஞ்ஜீவிநீ யத்ர ம்ருக்யமாணதசாம் கதா”. என்றொரு சுலோக மருளிச்செய்கிறார்;  இந்நிலத்தில் சந்சுப்பூண்டுகளான அலரி முதலியவை மிகைமிகையாக விளைகின்றன; உயிரைமீட்கும் ஓஷதிகள் மாருதிபோல்வார் பாடுபட்டுத் தேடிப் பிடித்துக் கொணரவேண்டும்படி மிகவும் அருமைப்பட்டிருகின்றனவென்பது அந்த சுலோகத்தின் கருத்து. இதுபோலவே இவ்வுலகில் பாஹ்யமதங்கள் குத்ருஷ்டிமதங்கள் என்று சொல்லப்படுகிற தீயமதங்கள் மலிந்தும், ஆஸ்திகமதம், வைதிகமதம் என்று உண்மையில் சிறப்பித்துக் கூறப்படுகிற மதம் மிக விரளமாயுமிருக்கும். அங்ஙனம் மலிந்து கிடக்கிற துஷ்ட மதங்களையெல்லாம் பறித்துப் பொகடுவாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிந்துவிட்டார்களென்கிறார். இதன் கருத்து என்னென்னில்;* யெ *** = யே கண்டலக்நதுலுஸீநலிநாக்ஷமாலா; யே பாஹுமூலபரிசிஹ்நிதசங்கக்ரா யே வா லலாடபலகே லஸதூர்த்வபுண்ட்ரர்தே வைஷ்ணவா புவகம் ஆசு பவித்ரயந்தி. * இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ஸ்ரீவைஷ்ணவசிகாமணிகள் காணவினிய அழகிய லக்ஷணங்களில் குறைவின்றியே பளபளவென்று விளங்கும் படியைக் கண்டால், கண்டகாட்சியிலேயே அலைவதிகமதங்க் அவிந்துபோமத்தனை. விளக்கு வரக் கண்டவாறே இருள் தன்னடையே சிதைந்தொழியுமா. போலே ஸ்ரீவைஷ்ணவர்களின் லக்ஷண அமைதியைக் கண்டவாறே அவலுண மதங்கள் அவிந்துபோகத் தட்டுண்டோ?

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;? “போலே யென்பானென்னென்னில்; வரத்விகர்க்குப் பிறரை நலியவேணுமென்றோரு அபிஸந்தியில்லைறே; நெற்செய்யப் புல் தேயுமாப்போலே இவர்கள் ஊன்ற வூன்ற அவை தன்னடையே தேயுமத்தனை” என்பதாம். பரம் ஸாத்விகர்களான பெரியார்கள் பிறர்களது அர்த்தங்களையும் ஆசாரங்களையும் அழகுபடக்காட்டும் முகத்தாலேயே பிறர்களுடையவற்றைக் கண்டிகத்தார்களாவர்.

இப்படிப்பட்ட மஹா ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்நிலத்திலே மலிந்து பகவதநுபவத்தாலுண்டான மகிழ்ச்சியாலே பல பாட்டுக்களைப் பாடியும் மநோஹரமாக உலாவியும் துள்ளிக்குதித்தும் பண்ணுகிற ஸம்பிரமங்கள் என்னே! என்று ஈடுபடுகிறாராயிற்று.

“எம்பெருமானாருடைய ஸ்திதி *** நாம் கொண்டாடுமாப்போலயும், ஆளவந்தார் நடையை ராஜா கொண்டாடினாப்போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்பது ஈடு. இப்பாசுரத்தின் பின்னடிகளின் அமைப்பை நோக்கி இது அருளிச்செய்தபடி.

 

English Translation

All the heretic schools of thought are being cleared like weeds.  The spirits of our mighty ocean-reclining Lord are singing many, many songs. –lying, sitting, standing, walking, flying and dancing, they are performing miraculous plays.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top