(3316)
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே.
பதவுரை
|
மே கலையால் |
– |
உடையழகினால் |
|
குறைவு இல்லா |
– |
குறையற்றவளும் |
|
மெலிவு உற்ற |
– |
ஸூகுமாரத்தன்னை பெருந்தியவளும் |
|
அகல் அல்குல் |
– |
அகன்ற சிதம்ப ப்ரசேதத்தை யுடையவளும் |
|
போதன் |
– |
போகத்திற்கு யெனளுமான |
|
மகள் |
– |
உஷையென்னும் பெண்ணுக்கு |
|
தந்தை |
– |
புகழையுடையனாய் |
|
புகழ் |
– |
புகழையுடையனாய் |
|
விறல் |
– |
பலிஷ்டனான |
|
வாணன் |
– |
பாணாஸூரனுடைய |
|
புயம் |
– |
தோள்களை |
|
துணித்து |
– |
அறுத்தொழித்தவனாய், |
|
நாகம் மிசை |
– |
ஆதிசேஷன்மீது |
|
துயில்வான் போல் |
– |
உறங்குவான் போலே |
|
உலகு வல்லாம் |
– |
ஸகலலோகமும் |
|
நன்கு ஒடுங்க |
– |
நன்மையிலே சேரும்படி |
|
யோகு அணைவான் |
– |
உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான் |
|
கவராத |
– |
விரும்பாத |
|
உடம்பினால் குறைவு இலம் |
– |
உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மேகலையால்) வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள். “மேகலையால் குறைவில்லா” என்பது பானாஸூரபுத்ரியான உஷைக்கு அடையொழி. மேகலை என்பதைக் கீழ்ப்பாசுரத்திற்போலே என்னும் வடசொல்லன் திரிபாகக்கொள்;ளவுமாம்; அன்றி, ‘மேதலையால்’ என்று இரண்டு சொல் வடிமாகக்கொண்டு, விரும்பத்தக்க (கலை) வஸ்த்ரத்தினால் என்று கொள்ளவுமாம். “நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப்பியம். மேம்பாடுடைய கலையினால் என்னவுமாம்.
“உஷைக்குக் கூறையுடை அழகியதாயிருக்கும்போலேகாண்” என்பராம் வங்கிப் புரத்து நம்பி. அல்குல்-மத்யப்ரதேசம். அல்குமென்று பெண்குறியையே சொல்லுவதாகப் பலர்பிரமித்திருப்பதுண்டு. திருக்கோவையர் முதலிய நூல்களில் சிற்சிலவிடங்களில் அப்பொருளில் பிரயோகம் கண்டாலும் அருளிச்செயல்களில் காண்கிற பிரயோகம் அப்பொருளில் அல்ல. “திருமலிந்து திகழ்மார்வு தேக்கந்தென்னால்குலேறி” என்ற பெரியாழ்வார் திருமொழியும் “பூந்துகில் சேரல்குல்” என்ற பெருமாள் திருமொழியும் முதலாயின காண்க்.
English Translation
The Lord who cut asunder the arms of the mighty Bana,-father of slehder-waisted jewel-betted Usha, – lies oh a serpent-bed, engaged in Yoga to ensure the world’s good. If the does not desire my body, we have nothing to lose
