(3253)
கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்! குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின்பூவை
வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே.
பதவுரை
|
கோவை வாயான் பொருட்டு |
– |
கோவைக்கனிபோற் சிவந்த அதரத்தையுடையவளான நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக |
|
ஏற்றின் |
– |
எருதுகளினுடைய |
|
எருத்தம் |
– |
பிடரியை |
|
இறுத்தாய் |
– |
முறித்தவனே! |
|
மதிள் |
– |
மதிள் சூழ்ந்த |
|
இலங்கை |
– |
லங்காபுரிக்கு |
|
கோவை |
– |
அரசனான ராவணன் |
|
லீய |
– |
முடியும்படியாக |
|
குனித்தாய் |
– |
வளைத்தவனே! |
|
குலம் நல் யானை |
– |
நல்ல ஜாதியிலே பிறந்து அழகியதான குலவயா பீடயானையினுடைய |
|
மருப்பு |
– |
கொம்பை |
|
ஒசித்தாய் |
– |
முறித்தொழிந்தவனே! |
|
பூவை லீயா நீர் |
– |
புஷ்பத்தை விட்டு நீங்காத தீர்த்தத்தை (புஷ்பத்தையும் தீர்த்தத்தையும் என்றபடி) |
|
தூவி |
– |
பணிமாறி |
|
போதால் |
– |
உரிய காலங்களில் |
|
வணங்கேன் ஏலம் |
– |
உன்னைப் பணிந்திலேனாகிலும் |
|
நின் |
– |
உன்னுடைய |
|
பூவை லீ ஆம் மேனிக்கு |
– |
காயாம் பூப்போன்ற திருமேனிக்கு |
|
பூகம் சாந்து |
– |
சாத்தத் தகுதியான சந்தனம் |
|
என் நெஞ்சமே |
– |
எனது நெஞ்சமேயாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக எருதுகளை அடர்க்கும்போதும், ஸீதாபிராட்டி நிமித்தமாக இராவணனை யழிக்கும் போதும் அந்தந்த ஸமங்களிலுண்டான சிரமம் தீரும்படி அடியேன் அவ்வப்போதுகளில் ஸந்நிஹிதனாயிருந்த உபசாரங்கள் செய்யப் பெற்றிலேன்! அப்படியிருந்தும் என்னுடைய ஹ்ருதயத்தையே உனக்குப் பரம போக்யமாகக் கொண்ட விதம் என்னே! என்று ஈடுபடுகிறார். அந்தந்த ஸமயங்களில் சிசிரோபசாரம் பண்ணப்பெறாத குறைதீர இப்போது என்னெஞ்சுதானே உனக்கு சிசிரோபசாரமாக நின்றது என்கை பரமதாத்பர்யம்.
கோவைவாயாள்பொருட்டு ‘பின்னைபொருட்டு’ என்னாமல் இங்ஙனே சொன்னது, அவளுடைய வாயழகைக் கண்ட கண்ணபிரான், தன்னைப் பேணாமலும் எருதுகளின் செருக்கைக்கணிசியாமலும், ‘அருந்தொழில் செய்தாகிலும் இவளை நாம் பெற்றே தீர வேணும்’ என்ற உறுதி கொண்டபடியைக் காட்டுதற்காம். இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி காண்மின்; -“ரிஷபங்களேழை முன்னிட்டு ‘இவற்றை அடர்த்தாக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று சொல்லி இவளை அலங்கரித்து முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்; ‘இவளை அணையலாமாகில் இவற்றை முறித்தாலாகாதோ’ என்று தன்னைப்பேணாதே அவற்றின் மேலே விழுந்தான்.”
மற்றெருவகையான ரஸப்பொருளும் அருளிச் செய்வதுண்டு; அதாவத-எருதேழடர்த்தவர்க்கு நப்பின்னையை மணம்புரிவிப்பதென்று கந்யாசுல்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதான செய்தியைச் செவியுற்ற கண்ணபிரான் பலராமனோடுகூட அவ்விடத்திற்கு எழுந்தருளினபோது, நப்பின்னையின் கண்ணெதிரே முந்துறமுன்னம் பலராமன் நிற்க, அவனைக்கண்ட அவள் ‘ஒருகால் இவன் எருதேழடர்த்தனாகில் இவனை மணம்புரிந்து கொள்ளவேண்டி வருமே!’ என்று இன்னாப்போடே கிடந்தாளாம்; உடனே கண்ணபிரான் வந்து தோற்றினவாறே மிக மகிழ்ந்து புன்முறுவல் செய்தனளாக, அப்போது அதாத்திலுண்டான பழுப்பைக் கணிசித்துக் “கோவைவாயள்” என்றதாக.
“எற்றினெருத்தமிறுத்தாய்” என்று இவ்வபதானத்தை இங்கு முறையிடுவதற்குக் கருத்து யாதெனில்; மாயமானின் பின்னே பெருமாள் தொடங்குகிறபோது அருகே நின்ற இளையபெருமாள் தெளிந்துநின்று ‘இது மாயாமிருகம்; ராக்ஷஸமாயை’ என்றாப் போலே நானும் அப்போது (ஏற்றினெருத்த மிறுத்தபோது) ‘இவை அஸூராவேசம் பொருந்தியவை’ என்று சொல்லியிருக்கலாமே; அந்தோ! அது செய்யப் பெற்றிலேனே! என்னும் குறையைக் காட்டுதலாம்.
மதிளிலங்கைக்கோவைவீயச் சிலைகுனிந்தாய்! நகரத்திற்கு மதிளுடைமை விசேஷித்துச் சொல்ல வேண்டியதன்றாயிருக்க, இங்குச் சொன்னதற்கு நம்பிள்ளை ஒரு கருத்தருளிச் செய்கிறார்-இராவணன், ஸர்வரக்ஷரான ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாரைத் தனக்கு ரக்ஷகராக மதிக்க வேண்டியிருக்க அது செய்யாதே இந்த மதிளே நமக்கு ரக்ஷகம் என்றிருந்தாதனாம்; ‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு’ என்று இறுமாப்புக் கொண்டிருந்தானாம்; அது தோன்ற அருளிச் செய்தபடியென்று. இராவணன் வீயுமாறு தேவரிர் சிலை குனிந்த காலத்திலே லிபீஷணாழ்வான் போல்வார்போலே அருகே நின்று ஒன்றும் உதவப் பெற்றிலேனே! என்னுங்குறையை இங்குக் காட்டிக்கொள்ளுகிறபடி. கோவை என்றவிடத்து இரண்டனுருபுக்கு விவக்ஷையில்லை.
குலநல்யானைமருப்பொசித்தாய்! குவலயாபீடமென்னும் மதயானையை மதமூட்டிக் கம்ஸன் தனது அரண்மனை வாசலிலே நிறுத்திவைக்க, அதன் கொம்மை முறித்து அத்தோடே போர் செய்கிறபோது “ஆவாவை செய்வதறிவார் அஞ்சனமாலைபோலே, மேவுசினத்தடல் வேழம்வீட முனிந்து” இதய்ர்திப்படியே ‘அந்தோ! பரமஸூகுமாரமான இக்கண்ணபிரானுடைய வடிவெங்கே! இந்த முரட்டு யானை எங்கே!’ என்று வயிறெரிந்த மதுரையிற் பெண்களின் திரளிலேநின்று தாமும் உருக்பபெறாத குறையைக் காட்டிக் கொள்ளுகிறபடி.
பூவை வீயா ‘வீயா’ வென்பதை ‘செய்யா’ என்னும் வாய்பாட்டிறந்தகால வினையைச்சமாகக் கொண்டு ‘புஷ்பங்களைப் பணிமாறி’ என்று பொருள் கொள்வதுமுண்டு; அன்றியே, ‘வீயா’ என்பதை எதிர்மறைப் பெயரச்சமாகக் கொண்டு ‘புஷ்பங்களை விட்டு நீங்காத நீரைத்துர்வி’ என்றுரைத்தலுமுண்டு; புஷ்பங்களேர்டு கூடின நீர் என்றபடி: புஷ்பங்களையும் நீரையும் பணிமாறி என்றதாயிற்று. போதால் வணங்கேனேலும்-நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த போதென்ன, ஸீதாபிராட்டிக்காக இராவணனோடு பொருதபோதென்ன, மதுரையில் கஞ்சனது மதயானையோடு பொருதபோதென்ன, ஆகிய் இப்போதுகளிலே உடனிருந்து உபசாரங்கள் செய்யப்பெற்றலேனாகிலும் என்றபடி.
நின்பூவைவீயாமேனிக்கு என்னெஞ்சமே பூசுஞ்சாந்து உன்னுடைய திருமேனிக்கு எனது ஹ்ருதயமே உபசாரம்; அதாவது-அந்தந்த ஸமயங்களில் உடனிருந்து உபசாரங்கள் பண்ணப்பெற்றிலேனே! என்று இப்போது குறைப்படுகின்றதற்கு நெஞ்சே காரணமாதலால் இத்தகைய நெஞ்சு உண்டாயிருக்கப் பெற்றவிதுவே உபசாரப்ராயம் என்றபடி. அன்றியே, உனக்குப் பூசுஞ்சாந்து என்னெஞ்சமாய்விடுவதே! என்று ஈடுபடுகின்றாராகவுமாம். என்னெஞ்சிலே எம்பெருமான்! இத்தனை யுகப்புச் செய்வதே! என்றவாறு.
பூவைவீ-பூவைப்பூ; காயாம்பூ. வீ என்று பூவுக்குப் பெயர். “வீகமழ்நெடுஞ்சிலை” (36) என்ற புறநானூறுங் காண்க. பூவைவீ ஆம்-பூவைப்பூப்போன்ற தான என்றபடி.
English Translation
O Lord! You battled a horde of bulls for coral-lipped Nappinnai, you killed Lank’s king with your arrows and the rutted elephant with its tusk, -what thought I have not worshipped you with fragrant flowers and water; my heart is the cool Sandal paste for your flower-like face
