(3232)

(3232)

உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே

தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு

வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,

செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.

 

பதவுரை

திறை கொணர்ந்து

செலுத்தவேண்டிய கப்பத்தைக் கொண்டுவந்து கட்டி

உய்ம்மின் என்று

பிழைத்துப்போங்கள் என்று கட்டளையிட்டுக்கொண்டு

உலகு

இவ்வுலகத்தை

ஆண்டவர் தாம்

அரசுபுரிந்த பிரபுக்கள் தாம்

இம்மையே

இப்பிறப்பிலேயே

தம்

தங்களுடைய

இன் சுவை மடவாரை

பரமபோக்யைகளான ஸ்திரீகளை

பிறர்கொள்ள

அயலார் கவாந்துகொள்ளும்படி

விட்டு

கையிழந்து

வெம் மின் ஒளி வெயில்

கொடி தாய் மின்னொளி பரக்கின்ற வெயிலையுடைய

கானகம் போய்

காட்டிலே சென்று

குமை தின்பர்கள்

திண்டாடுவர்கள்; (ஆதலால்)

செம் மின் முடி

செவ்விய காந்திபெற்ற திருமுடியையுடைய

திரு மாலை

திருமகள் கொழுநனை

விரைந்து

விரைவாக

அடி சேர்மின்

அடி பணியுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மஹாப்ரபுக்களாயிருந்து நெடுங்காலம் தாங்கள் ஆண்ட ராஜ்யங்களை யிழப்பார் என்றது கீழ்ப்பாட்டில்; அரசாளுகிறநாளில் போக்யைகளாகக் கைக்கொண்ட மடவார்களையும் பகைவர்க்குப் பறிகொடுத்துப் பரிதாபப்படுவர்களென்கிறாரிதில்.

உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகாண்டவர்-எதிரிகளின் ராஜ்யங்களைத் தாங்கள் ஆக்கிரமிக்க நினைத்தால் யானை குதிரைபடை திரட்டிக் கொண்டு சென்று பொருது பரிச்ரமப்பட்டு ஆக்ரமித்துக்கொள்ளுகையன்றிக்கே ஒரு கட்டளை மாத்திரத்தாலேயே க்ருதக்ருத்யர்களாக ஆய்விடுவர்களாம்; அதாவது-‘உயிர் தப்பிப் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் நம்பக்களில் கப்பஞ் செலுத்தி வாழ்ந்துபோங்கள்’ என்று ஒரு கட்டளை தெரிவித்தமாத்திரத்திலேயே பகைவர்கள் பணிந்து நிற்பர்களாயிற்று: இவ்வளவு பெரு மிடுக்காக உலகத்தை ஆண்ட ஸார்வபௌமர்கள் என்றபடி, திறை என்று கப்பத்திற்குப் பெயர்.

இங்ஙனே வாழ்ந்த மஹாப்ரபுக்கள் ஸமயவிசேஷங்களிலேபடும் எளிவரவை மேல் இரண்டடிகளால் அருளிச்செய்கிறார்.  தாம் அரசாட்சி புரிகிற நாளில் பல திசைகளிலிருந்தும் சிறந்தமாதர்களைத் திரட்டிக்கொணர்நது சேமித்து வைப்பதுண்டேர் அவர்களையெல்லாம் பகைவர் வந்துபுகுந்து கைக்கொள்ளும் படியாகும்.  இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-‘இது நரகபுரமிழந்த என்று கண்டதிறே; பாண்டவர்களுடைய ராஜஸூயமும் செருக்கு மெல்லாங்கிடக்க த்ரௌபதி ஸதஸ்ஸிலே பரிபூதையானவதுவேயிறே இதில் ப்ரமாணம்” என்பதாம். “மன்னு நரகன்றன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து, கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன்” என்ற பாசுரத்தினால் நரகாசுரனுடைய இழவு அறியத்தக்கது. பாண்டவர்களின் பரிபவம் ஜகத்ப்ரஸித்தம்.

“கண்டார்வணங்கக் களியானைமீதே கடல்சூழுலகுக்கொரு காவலராய், விண்டோய். நெடுவெண்குடை நீழலின்கீழ் விரிநீருலகாண்டு விரும்புவரே” என்றபடியே வெண்கொற்றக்குடை நிழிலிலே இனிதாக வாழ்ந்தவர்க்ள அந்த நிலைமையை யிழந்து நகரத்தில் வாழப்பெறாதே மநுஷ்ய ஸஞ்சாரமற்ற மருகாந்தாரங்களிலே சென்று தடுமாறுவர்களென்கிறது மூன்றாமடி. “பொருந்தார் கைவேல் நுதிபோல் பரல்பாய மெல்லடிகள் குருதிசோர, விரும்பாத கான் விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய்கூர“ என்ற பெருமாள் திருமொழியினாலும் “மின்னுருவில் வெண்டேர் திரிந்து வெளிப்பட்டுக் கல்நிரைந்து தீந்து கழையுடைந்து கால் கழன்று, பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக் கொன்னவிலும் வெங்கானம்” என்ற பெரிய திருமடவினாலும் காட்டின் கொடுமை அறியத்தக்கது.

கானகம்போய்க் குமைதின்பர்கள்-காடேற வோடினாலும் அங்குந் தொடர்ந்து நலியப் பகைவருடைய ஆட்கள் வந்தே தீருவர்களாதலால் காட்டிலும் கொலை தப்பாது என்கிறார்.

குமைதின்பர்கள்-ஹிம்ஸைப்படுவர்களென்றபடி. ஆக மூன்றடிகளாலும் செவ்வக்கிடப்பின் சீர்கேட்டை நிரூபித்து ஈற்றபடியால் வாழ்ச்சிக்குறுப்பான உபாயத்தை உரைத்தருளிகிறார்;  “முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ” என்று பேசலாம்படியாய் கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண்முடியனான எம்பெருமானைக் காலதாமதமின்றி அடிபணியப் பாருங்களென்கிறார்.

இங்கே இன்சுவையே வடிவெடுத்த ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்;-“தன்னை ஆச்ரயித்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான மூடியுண்டு; கொடுப்பிக்கைக்கு அருகேயிருப்பாருமுண்டு; லீரையாயாலுள்ள இழவேயுள்ளது: அவன் முடியைத்தரிலும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்; நீங்கள் உங்களடிவிடாதே கொள்ளுங்கோள்.”

 

English Translation

Come quick and join the feet of the Lord with a radiant crown!  They who ruled the world over vassals who paid them tribute, now leave their harems for others to enjoy their queens, and spend their days in misery under the blazing forest Sun

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top