(3203)
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன் னையே
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே.
பதவுரை
|
எனது ஆவி |
– |
என் பிராணனானது. |
|
நின் உன்னுடைய |
||
|
கீர்த்தி கனி என்னும் கவிகளே |
– |
கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே |
|
காலம் |
– |
காலத்திற்கு ஏற்ற |
|
பண் |
– |
பண்களாகிற |
|
தேன் |
– |
தேனிலே |
|
உறைப்ப |
– |
மிகவும் செறிய |
|
துற்று |
– |
கலந்து |
|
செவிகளால் ஆர |
– |
காதுகளால் பூர்ணாமக அநுபவிக்க |
|
புவியின் மேல் |
– |
பூமியின் மீது |
|
பொன் நெடு சக்கரத்து உன்னையே |
– |
அழகிய பெரிய திருவாழியையுடைய தேவரீரையே |
|
அவிவு இன்றி |
– |
இடையறாமல் |
|
ஆதரிக்கும் |
– |
விரும்பா நிற்கும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார். இப்பாசுரத்தில் ஆவி என்பது எழுவாயாதலால் ‘செவிகளாலார’ என்று கூறப்பட்ட ஆசை ஆவிக்கு உண்டான ஆசையாகக் கொள்ளத்தக்கது. ஆவியானது தனக்குச் செவிகள் முளைக்கவேணுமென்றும் அவற்றாலே எம்பெருமானது கீர்த்திக்கவிகளை கேட்க வேணுமென்றும், ஆசைப்படுகிறபடி, அன்றி, தானே செவியாக மாற ஆசைப்படுகிறபடியுமாம். ‘செவிகளாலார’ என்றது செவிகள் வயிறு நிறையும்படியாக என்றபடி. கீர்ததியாவது கொண்டாடிக் கூறப்படும் திருக்குணங்களாம்; அவற்றைப் பற்றிப் பரமரஸிகர்களான பக்தர்கள் இயற்றும் கவிகள் பரமபோக்யமாக இருக்குமாதலால் “கனியென்னுங் கவிகள்” என்றார். “கவியென்னுங் கனிகள்” என்று சொல்ல வேண்டிய முறை ப்ராப்தமாயிருக்க அங்ஙனம் கூறாது “கணினென்னும் கவிகள்” என்றது கனிகளினும் மிக்க போக்யதாதிசயம் கவிகளில் இருக்கும்படியைக் காட்டுதற்காம். இங்கு ஈடு காண்மின்; “செவிகனிபோலிருக்கையன்றிக்கே கனி கவியாயிற்றென்கிறதிறே போக்யதாதிசயத்தாலே”.
காலப்பண் தேனுரைப்பத் துற்று = கனிகள் இயற்கையிலே மதுரங்களாகவேயிருந்தாலும் செருக்கர் தேனிலே தோய்ந்து உண்பர்கள். அதுபோலே பகவத் ஸ்துதிக் கனிகளைக் காலாநுரூபமான பண்ணாகிற தேனிலே தோய்த்துச் சுவைக்க விரும்புகின்றபடி. வண்டுகள், குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் என்னும் பண்களைப் பாடுமாபோலே பக்தர்கள் பலவகைப்பட்ட பண்களிலே துதிமொழிகளைப்பாடி உள்ளங் குளிரப் பெறுவர்களென்க. கீழ் *மொய்ம்மாம் பூம்பொழிலில் “பண்கள் தலைக்கொள்ளப்பாடி” என்றருளிச் செய்ததுங் காண்க. இப்படிப்பட்ட அநுபவம் *ஏதத் ஹாம காய்ந்நாஸ்தே” இத்யாதிப்படியே திருநாட்டில் எளிதாயினும் இந்நிலத்திலேயே அது வாய்க்கவேணுமென்னும் பாரிப்பைப் புவியின்மேல் என்பது காட்டுகின்றது. எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடார் தீர்க்க வொண்ணாது பசித்தவிடத்தே சோறிடவேணும்” என்பது ஈடு.
“பொன்னெடுஞ்சக்கரத்துன்னேயே” என்றதனால் திருநாட்டில் காட்சி தந்தருளும்படியையே இங்கு அனுபவிக்கப் பெற்றேனாகவேணுமென்கிறது. “தமஸபரமோ தாதா சங்க சக்ரகதாதர,” என்ற பிரமாணத்தில்நோக்கு.
English Translation
O Lord who wields a golden discus! While my ears feed on songs of your praise with fruit-like words dipped in the seasoned honey of music, my soul tirelessly craves for your company.
