(3188)
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே.
பதவுரை
|
ஆளும் பரமனை |
– |
ஆள்கின்ற பரம புருஷனாயும் |
|
கண்ணனை |
– |
ஸ்ரீக்ருஷ்ணனாயும் |
|
ஆழி பிரான் தன்னை |
– |
திருவாழியாழ்வானை யுடைய உபகாரகனாயும் |
|
ஓர் நான்கு தோளும் உடை |
– |
ஒப்பற்ற நான்க புஜங்களையுடையவனாயும் |
|
தூ மணி வண்ணன் |
– |
பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனாயுமிருக்கின்ற |
|
எம்மான் தன்னை |
– |
எம்பெருமானை |
|
தாளும் தட கையும் கூப்பி |
– |
கால்களையும் கைகளையும் கூப்பி |
|
பணியும் அவர் |
– |
நமஸ்கரிப்பவர்கள் |
|
பிறப்பிடை தோறு |
– |
ஜன்மந்தோறும் |
|
நாள் தோறும் |
– |
தினந்தோறும் |
|
எம்மை |
– |
எங்களை |
|
ஆள் உடை நாதர் கண்டீர் |
– |
ஆட்கொள்ளும் அடிகளாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமியான ஸ்வாமிகளென்கிறார். கீழ்ப்பாட்டில் * பரமனைப் பயிலுந் திருவுடைய ஸ்ரீவைஷ்ணவர்களே எம்மையாளும் பரமர் என்று சொல்லி வைத்து இப்பாட்டில் ‘ஆளும்பரமனை’ என்றால் இது தகுதியோ? பாகவதர்களன்றோ ஆளும்பரமா! இப்போது எம்பெருமானை ஆளும்பரமனாகச் சொல்லலாமோ வென்னில்; சொல்லலாம்; எம்பெருமான் தன் திருவடிகளின் கீழ் வந்து புகுந்தவர்களைப் பாகவத சேஷபூதர்களாக ஆக்கி ஆள்கின்றானென்னபதுவே இங்க விவக்ஷிதம். “அடியார்க்கென்னை யாட்படுத்தவிமலன்” என்ற திருப்பாணாழ்வார் பாசுரம் இங்க அநுஸந்திக்கத்தகும்.
கண்ணனை = பாகவத சேஷத்வத்தை ஸ்வாநுஷ்டான முகத்தாலே காட்டியருளினவன் கண்ணபிரான் எங்ஙனேயென்னில், பாகவதர்களில் தலைவனான நம்பிமூத்த பிரானுக்கு (-பலராமனுக்கு)ப் பின்பிறந்து “பாதேவற்கோர் கீழ்க்கன்றாய்” என்னும்படி அவனளவிலே பாரதந்திரியத்தைக் காட்டினபடி காண்க.
ஆழிப்பிரான்தன்னை = திருவவதரிக்கும்போதே கையுந்திருவாழியுமாய்த் திருவவதரித்து, பிறகு பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரிதபக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினவன்.
தோளுமோர்நான்குடை=“சதுர்ணாம் புருஷார்த்தாநாம் தாதா தேவச் சதுர்புஜ:-” என்கிறபடியே அடியார்களுக்கு நால்வகைப் புருஷார்த்தங்களையும் கொடுத்தருளிவதற்கு நான்கு திருக்கைகள் படைத்தவன். பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும்போது அனந்தாழ்வான் திவ்ய தேசயாத்திரையாக அங்கு எழுந்தருளினர் அப்போது அவர் பட்டரை நோக்கி “பரமபதத்தில் எம்பெருமான் சதுர்ப்புஜனாய் எழுந்தருளியிருக்கிறானோ? த்விபுஜனாய் எழுந்தருளியிருக்கிறானோ?” என்று கேட்க, ஸர்வஜ்ஞரான அனந்தாழ்வானுக்கு நாம் ஸந்தேஹநிராஸம் செய்ததாக ஆகவொண்ணாதென்று கருதிய பட்டர், “த்விபுஜன் என்று தேறினால் பெரிய பெருமாளாக அநுஸந்திக்கிறோம்; சதுர்புஜன் என்று தேறினால் நம்பெருமாளாக அநுஸந்திக்கிறோம்” என்றாராம். இதன் கருத்து யாதெனில்; பெரிய பெருமாள் “கையினார் சுரிசங்கனலாழியர்” என்ற திருப்பாணாழ்வார் பாசுரத்தின்படி சதுர்புஜராயிக்கவும் அறிவிலிகளான நமக்கு த்பிவுஜராகத் தோற்றுவதுபோல் பரமபதநாதனும் சிலருடைய அறிவுக்கு த்விபுஜனாகத் தோற்றக்கூடும்; மந்தோதி புலம்பும்போது * தமஸ: பரமோ தாதா சங்கசக்ரகதாதர:* என்ற பேசியிருக்கிறாளாகையாலே பரமபதநாதன் அவளுக்குச் சதுர்புஜனாகத் தோன்றினயமை ஸ்பஷ்டம் அதுவே ப்ரமாண கதிக்குச் சேரும் என்பதாம். இவ்விஷயம் இவ்விடத்து ஈச்முப்பத்தாறாயிரத்தில் விசதமாகக் காணத்தகும்.
தூமணிவண்ணனம்மான்தன்னை= சிறந்த ரத்னம்போலே ஒளிமல்கி யிருப்பவனனென்றபடி. ரத்தனத்தின் ஸ்வபாவம்போன்ற ஸ்வபாவ முடையவன் என்னவுமாம் (அதாவது:-) ரத்தனம் எவ்வளவு விலையுயர்ந்தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்பியிருக்கும்; எம்பெருமானும் பரத்வத்தைமறைத்து ஸௌலப்யத்தையே காட்டுவன்.
ஆக இப்படிப்ப்டட எம்பெருமானைத் தாளும் தடக்கையுங்கூப்பிப் பணியமவர்கள் யாவரேனும் அவர்களே பிறவிதோறும் எம்மை ஆட்கொள்ளவல்ல நாதர்கள் என்றாராயிற்று.
தாளுந்தடக்கையுங்கூப்பி என்றவிடத்தில் ஒரு நுட்பம் கண்டறியத்தக்கது; தாள்கூப்புகையாவது என்ன? கை கூப்புகையாவது என்ன? என்று ஆராயவேணும். இவையிரண்டாலும் ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் தெரிவிக்கப்பட்டவாறாம்: தாள்களைக் கூப்பிவிட்டால் வேறெங்கும் எனக்குப் போக்கிடமில்லையென்று ஸூசனையாதலால் அதனால் அநந்யகதித்வம் தெரியும்; கைகூப்பிவிட்டால் என்கையில் ஒன்றுமில்லை என்கிற ஸுசனையாதாலால் அதனால் ஆகிஞ்சந்யம் தெரியும். ஆக, அஹங்காரமமகாரங்கள் அற்றிபடியைக் கூறினவாறு.
English Translation
The discus-bearing Lord, my gem-hued radiance Lord and master, has four mighty arms. Those who worship him with hands and feet are my masters forever, just see!
