(3054)
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே
பதவுரை
|
ஒருவு இடம் ஒன்று இன்றி |
– |
நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) |
|
என்னுள் கலந்தானுக்கு |
– |
என்னோடு சேர்ந்தவானன |
|
எந்தை பெருமாற்கு |
– |
என் சேர்ந்தவனான |
|
திரு உடம்பு |
– |
திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது. |
|
கண் |
– |
திருக்கண்கள் |
|
செம் தாமரை |
– |
செந்தாமரை மலர்களாயிராநின்றன; |
|
கை |
– |
திருக்ககைகள். |
|
கமலம் |
– |
தாமரைமலரே. |
|
திரு இடமே |
– |
பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; |
|
கொப்பூழ் |
– |
திருநாபி |
|
அயன் இடமே |
– |
பிராமனுக்கு உறைவிடமாயிற்று; |
|
ஒருவு இடமும் |
– |
நீங்கின இடமும் |
|
அரனே |
– |
ருத்ரனுடையதே; |
|
ஓ |
– |
ஆச்சரீரயம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப்பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடீட ஸம்ச்லேகூஷித்து அத்தாலே ஒளிமல்கப் பெற்றனென்கிறார் இதில்.
ஒருவிடமொன்றின்றி என்னுள் கலந்தானுக்கு மார்வம் திருவிடம்; கொப்பூழ் அயனிடம் ஒருவிடமும் அரன்; (இப்படிப்பட்ட எந்தைபெருமாற்கு என்னுள் கலந்ததனாலே) திருவுடம்பு வாந்சுடர்; கண் செந்தாமரை; கை கமலம்.
இப்பாசுரத்தை அநுபவிக்கும் போது நஞஜீயர் மிகவும் ஈடுபட்டு அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு அதாவது—எம்பெருமானுக்கு விக்ரஹமில்லை விபூதியில்லை என்கிறவர்கள் முன்வே ஆப்ததமரான ஆழ்வார் திருவுடம்பு வான்சுடர் என்பதே! ஈச்வரனுக்கு விக்ரஹமில்லை குணமில்லை என்கிறவர்கள் பண்ணிவையாத பாபமில்லை; அவர்கள் அநுவர்த்தித்து அதுகேட்டுக்கொண்டிராதபடி பெருமாள் நமக்குப் பண்ணின உபகாரம் போலே வேறொரு உபகாரமுமில்லை-என்றாம்.
எம்பெருமான் வந்ததும் ஆழ்வாரோடே தன் திருமேனியை அனைத்து நின்றானைர் கையாலே அந்த ஸ்பாசஸூகம் கொண்டாடித் “திருவுடம்பு வான்சுடர்” என்கிறாரென்ப. உடனே குளிரக்சடாகூஷித்தருளினானாகையாலே “செந்தாமரை கண்” என்றார்;. கண்ணழகைக்கண்டு பரத்வங்கொண்டாடி இப்பரம புருஷனெங்கே! நாம் எங்கே என்று நைச்சியம் பாவித்து இறாய்த்தவளவிலே கையாலே பிடித்திழுத்தானாதலால் “கை கமலம் என்கிறார்.”
இவன் கேட்பாரில்லாதவனாய் நம்மிடம் வந்தானல்லன்; பிராட்டி முதலானவர்களும் இவனுடைய திருமேனியில் ஏகதேசங்களைப்பற்றி ஸத்தை பெறுமவர்களாக இருக்கிறார்களென்பதை இரண்டு மூன்றாமடிகளாலருளிச் செய்கிறார். தாமரை பூவில் பிறந்த பிராட்டியும் அதைவிட்டு இவன் திருமார்பை பற்றிக்கொண்டு ‘அகலகில்லினிறையும்’ என்று கிடக்கின்றாள்; பதினான் குலகம் படைக்கும் பிரமனோதிருநாபிக் கமலத்தை விடேனென்றிருக்கிறான்; நீங்கினவிடமோ ருத்ரனுடையதாயிராநின்றது.
ஒருவிடமும் = ஒருவுதல் நீங்குதலாய் நீங்கின விடமென்றபடி. தாமஸ தேவத்தையின் இருப்பிடத்தைச் சொல்லுகையாலே அநாதரம் தோற்ற ‘நீங்கின விடம்’ என்கிறார் என்பர்.
English Translation
He made love to me, no place untouched, His body has a great lustre, the lotus-dame Lakshmi sits on his chest. Brahma sits on his lotus navel and Siva in a corner, too, His eyes are like red lotuses, his hands are like lotus flowers.
