(3055)
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே
பதவுரை
|
என்னுள் கலந்தவன் |
– |
என்னுள் கலந்த வனாகி |
|
மின்னும் |
– |
விளங்குகின்ற |
|
சுடர்மலைக்கு |
– |
ஒளிபொருந்திய மலை போன்ற பெருமானுக்கு |
|
செம் கனி வாய |
– |
சிவந்து கனிந்த திருவாய் |
|
செம் கமலம் |
– |
செந்தாமரை மலர் போன்றது; |
|
கண் பாதம் கை |
– |
திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் |
|
கமலம் |
– |
செந்தாமரை மலரே; |
|
மன்னு முழு ஏழ் உலகும் |
– |
நிலைபெற்ற ஸகல லோகங்களும் |
|
வயிற்றின் உள |
– |
(அவனது) திருவயிற்றி லடங்கியுள்ளள |
|
தன்னுள் |
– |
அவன்றனக்குள்ளே |
|
கலவாதது |
– |
சேராதது |
|
எப்பொருளும் தான் இல்லை |
– |
யாதொரு பொருளுமேயில்லை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிராட்டி பிரமன்சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகலலோகங்களும் தன்னைப்பற்றி ஸத்தை பெறும்படி யிருக்கிற எம்பெருமான், இவ்வுலகங்களெல்லாம் தன்னை யொழிந்தால் படும்பாட்டைத் தான் என்னைப் பிரிந்து பட்டு என்னோட கலக்கையாலே மிகவும் பஷ்கலனானான் என்கிறாரிடத்தில்.
எம்பெருமானுக்கு இப்போது ‘என்னுள் கலந்தவன்’ என்று ஒரு திருநாமம் கிடைத்தது போலும். அஞ்சிறைய மடநாரையில் ‘அருளாதநீர்’ என்று திருநாமம் சாத்தினார்; இப்போது ‘என்னுள் கலந்தவன்’ என்று திருநாமம் சாத்துகிறார். நாரயணன் வாஸூதேவன் என்கிறாப் போலே இதுவும் ஒரு திருநாமங்காண்மின்.
என்னுள்ளே கலந்தவனாய் அத்தாலே விளங்கின சுடரையுடைய மலை போன்றுள்ளவனான பெருமானுக்கு, செங்கனியாய் செங்கமலம், கண் பாதம், கை கமலம். இப்போது எம்பெருமானுடைய திவ்யாவயவங்கள் புகர் பெற்றபடியை எத்தனை தடைவ வருணித்தாலும் ஆழ்வாருக்கு த்ருப்தி பிறக்கிறதில்லை.
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள = ப்ரவாஹநித்யங்களான் ஸகலசேதநாசேத நங்களும் தன் ஸங்கல்பத்தைப் பற்றி நிலைநிற்கின்றன (தன்னுள் கலவாதது எப்பொருளுத் தானில்லையே) தன்னுடைய திருவுள்ளத்தை ஆச்ரயமாகக் கொள்ளாத வஸ்து நாஸ்தி சப்தத்திற்கு அர்த்தமர்கவுள்ளதத்தனை. அவை இவனைப்பற்றாதபோது ஸத்தையின்றிக்கே யிருப்பது போல, இவனும் என்னோடு இவனைப்பற்றாதபோது ஸத்தையின்றிக்கே யிரப்பதுபோல, இவனும் என்னோடு கலவாதபோது ஸத்தை யிழந்த வனாயிராநின்றான் என்கையிலே நோக்கு.
English Translation
The Lord who made love to me has a frame like a lustrous mountain. His coral lips and red eyes his hands and his feet are like lotuses. All the sever worlds are contained in his frame; not a thing lies outside him.
