(3004)

(3004)

எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,

சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,

எந்தையெம்பெருமானென்று வானவர்,

சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வ னையே.

 

பதவுரை

வானவர்

நித்யஸூரிகள்

எந்தை எம் பெருமான் என்று

‘எந்தையே! எம்பெருமானே! என்று

சிந்தையுள் வைத்து

மனத்தினால் சிந்தித்து

சொல்லும்

வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற

செல்வனை

ஸ்ரீமானாகிய எம்பெருமானை

பாவியேன்

பாவியாகிய நான்

எந்தையே என்றும்

எந்தையே! என்றும்

எம்பெருமான் என்றும்

எம்பெருமானே என்றும்

சிந்தையுள் வைப்பன்

மனத்தில் வைப்பேன்;

சொல்லுவன்

வாயினாலுஞ் சொல்வேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ந அச்லீலம் கீர்த்தயேத்” என்று வேதபுருஷன் சொன்னான்; அச்லீலமான விஷயத்தை வாயினாற் சொல்லக்கூடாது என்றபடி, நைச்சியாநுஸந்தானம் பண்ணி அவனை விட்டுப்பிரிதல் என்கிற அச்லீலத்தை இவர் தாமே *ப்ரஸ்தாவித்தமையால் அப்படியே வந்து புகுந்தது. அயோக்யன் என்று அகலுகிறாரிப்பாட்டில் . அவனுடைய மேன்மையையும் தம்முடைய தாழ்வையும் பார்த்து *அயர்வறுமரர்கள் தங்கள் சிந்தையுள்ளே வைக்கவும் தங்கள் வாயாலே துதிக்வும் வாய்ந்த பெருமானை என் சிந்தையிலும் என் வாக்கிலும் கொண்டு கெடுத்தேனித்தனை; என்ன பாவியோ நான் என்று தம்மைத் தாமே வெறுத்துக் கொள்ளுகிறார்..

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top