(2998)

(2998)

பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,

திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,

ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்

கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே.

 

பதவுரை

பொரு

போர்செய்யவல்ல

மா

பெருமை தங்கிய

நீள் படை

சிறந்த ஆயுதமாகிய

ஆழி சங்கத்தொடு

சங்கு சக்கரங்களோடுகூட

திருமா நீள் கழல்

தனது மிகச்சிறந்த திருவடிகளை

ஏழ் உலகும் தொழ

ஸகலலோகமும் தொழும்படியாக

ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த

ஒப்பற்ற பிரமசாரி வாமனனான் வளர்ந்தருளின

அ கரு மாணிக்கம்

நீலமணிபோன்ற அப்பெருமானை

என் கண் உனது ஆகும்

எனது கண்ணுக்கு இலக்காயினான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத் திருவாய்மொழியிற் சொல்லுகிற அர்த்தத்திற்கு இப்பாசுரம் ஸங்க்ரஹ மென்னலாம். மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருகோலங்கொண்டு எழுந்தருளப்போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே யாசகனாய்ச் சென்று நின்றாப்போலே எனக்கு நினைவின்றியே யிருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்காக்கினான்! என்று அவனது நிர்ஹேதுக விஷயீகாரத்தைச் சிந்தித்து உருகிப் பேசுகின்றார்.

பெருமாநீள்படையாழிசங்கத்தொடு – “என்னிதுமாயம் என்னப்பனறிந்திலன், முன்னையவண்ணமே கொண்டளவாயென்ன, மன்னு நமுசியை வானிற் சுழற்றிய“ என்கிறபடியெ உலகளந்த காலத்தில் தடைசெய்த நமுசிபோல்வார் மீது அடல் காட்டினமை பொரு என்றவிடத்து விவக்ஷிதம். “இடங்கை வலம் புரி நின்றார்ப்ப எரிகான்று அடங்காரொடுங்குவித்ததாழி. விடங்காலுந் தீவாயரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவாரடி நிமிர்த்தபோத“ என்ற பூதத்தாழ்வார் பாசுரமுங் காண்க.

இனி பொரு என்பதற்கு, ‘பகைவர்மீது போர் செய்கிற‘ என்று பொருள் கொள்ளாது, தம்மில் தாம் போர்செய்கிற‘ என்றும் பொருள் கொள்ளலாம். எம்பெருமானுடைய ஸௌந்தர்ப ஸௌகுமார்யங்கள் அஸ்தானத்திலும் அச்சத்தை விளைவிப்பனவாதலால், திருவாழியாழ்வான்மீது திருச்சங்காழ்வான் அதிசங்கை கொள்ளுதலும் தீருச்சங்காழ்வான்மீது திருவாழியாழ்வான் அதிசங்கை கொள்ளுதலும் ப்ராப்தம். சித்திரகூட மலைக்குவந்து ஸ்ரீராமபிரானைத் தொழவேணுமென்று பரமபக்தியோடு வருகின்ற பரதாழ்வானை குஹப்பெருமாளும் பத்வாஜமஹர்ஷியும் இளையபெருமாளும் அதிசங்கித்த்து முதலானவை இங்கு நினைக்கத்தக்கன.

ஆக இப்படிப்பட்ட திவ்யாயுதங்களை ஏந்தின அவ்வழகையும் தன் திருவடியையும் அனைவருங்கண்டு தொழும்படியாக விலக்ஷணவாமந ப்ரஹ்மசாரியாய்க்கொண்ட வளர்ந்த அக்கருமாணிக்கம் அவ்வழகோடே என் கண்ணுளதாயிற்று என்றாராயிற்று.

 

English Translation

I saw in my eyes the dark gem-hued Lord, resplendent with the war-waging discus and conch.  He came as a manikin then and strode the Earth with great feet, O. How he grew and became worshipped by the seven worlds!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top