(2999)

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,

எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்?

மண்ணும்நீரு மெரியும் நல்வாயுவும்,

விண்ணுமாய்விரியு மெம்பிரானையே.

பதவுரை

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய்

பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாகவுடையனாயிக் கொண்டு
விரியும்

ஜகத்தாகப் பரம்புகின்ற
எம் பிரானை

எம்பெருமானை
காதன்மையால் தொழில்

பக்தியோடு தொழுதால்
கண்ணுள்ளே

(அவன்) நான் காணும்படி இருப்பன்;
எண்ணிலும் வரும்

ஒன்று இரண்டு என்று எண்ணினாலும் வந்து நிற்பன்;
என் இனி வேண்டுவம்

இனிமேல் என்னகுறை?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் அடியார்களுக்குக் கக்சி தருந்தன்மை எப்படிப்பட்டதென்றால், பரமபக்தியுக்தர்க்கு முகங்காட்டுவதுபோலவே எண்ணிக்கையினால்  தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று இப்பாட்டில் கூறப்படுகின்றது. (காதன்மையால் தொழில் கண்ணுள்ளே நிற்கும்) காதன்மையாவது பிரிவில் தரிக்கமாட்டாத பக்தி; அத்தகைய பக்தியோடு தொழுதால் அவர்களது கண்வட்டத்துக்கு அப்பால் போகமாட்டாதேயிருப்பான். (எண்ணிலும் வரும்) ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் “இருபத்தாறு” என்னுமளவில் தன்னைக்குறித்ததாகக் கொண்டுவந்து நிற்பன்; 1. “பொங்கையம்புலனும் பொறியைந்துங் கருமேந்திரிய மைம்பூதம், இங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்காரமனங்களே” (திருவாய்மொழி 10-7-10) என்கிறபடியே இருபத்தினான்கு தத்துவங்களுக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, இருபத்தாறாவது தத்துவம் பரமாத்மா என்பது சாஸ்திரஸித்தாந்தமாதலால், ஒருவன் இதனையறியாமல் ஏதோ காரியப்பாடாக ஒன்று முதலாக எண்ணிக்கொண்டு போந்து இருபத்தாறவளவிலே வந்தால் அந்த எண் தன்னைக் குறித்ததாக எம்பெருமான் வந்து நிற்பான் என்கிறவிது- ஏதேனுமொரு வியாஜத்தையிட்டு எம்பெருமான் நம்மைக் கைக்கொள்வதில் மிக்க வூற்றமுடையவன் என்பதைக்கக்டும். ஸ்ரீவசநபூஷணத்தில் நான்காவது பிரகரணத்தில் “த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க” என்று தொடங்கும் முதல் சூர்ணிகையிலே இவ்வர்த்தம் விரியக்காணத்தக்கது. “எண்ணிலும் வரும்” என்பதற்கு மற்றும் பலபடியும் பொருளுரைப்பர்.

என் இனிமை வேண்டுவம் = ஸர்வேச்வரனுடைய இயல்பு இதுவானபின்பு ஹிதாம்சத்தில் இனி நமக்கொரு குறையுண்டோ? பரம பக்திக்கும் பரிகணநைக்குமொக்க முகங்காட்டுவனானபின்பு இனியென்ன குறை?

மண்ணும் நீருமெரி நல்வாயும் விண்ணுமாய் விரியுமென்பிரானைக் காதன்மையால் தொழில்… என்று அந்வயிப்பது. ‘எம்பிரானை’ என்றதில் இரண்டாம் வேற்றுமையுருபைத் தள்ளி முதல் வேற்றுமையாகவே கொள்ளளவுமாம்.

English Translation

My Lord unfolds himself as Earth, water, fire wind and sky. Whenever worship him with love, he enters into my eyes and fills my heart. What more do I want?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top