(2934)
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி
மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.
பதவுரை
|
விதியினால் |
– |
பாக்யவசத்தினால் |
|
பெடை மணக்கும் |
– |
பேடையோடு கூடிக் களித்திருக்கின்ற |
|
மெல் நடைய |
– |
மெல்லிய நடையையுடைய |
|
கள்வர்க்கு |
– |
கபடமுடைய பெருமானுக்கு, |
|
மதியிலேன் |
– |
புத்தியில்லாத என்னுடைய |
|
வல் வினையே மாளாது |
– |
பெரிய பாவந்தானே முடியாதிருப்பது! |
|
என்று |
– |
என்று சொல்லி, |
|
அன்னங்காள் |
– |
அன்னப்பறவைகளே! |
|
மதியினால் |
– |
புத்தியினால் |
|
குறள் மாண் ஆய் |
– |
வாமந ப்ரம்மசாரியாய் |
|
உலக இரந்த |
– |
உலகங்களை யாசித்த |
|
ஒருத்தி |
– |
ஒரு பெண்ணாவள் |
|
மதி எல்லாம் உள் கலங்கி |
– |
புத்திமுழுதும் அடிமண்டி யோடே கலங்கப்பெற்று |
|
மயங்கும் |
– |
அறிவழிந்து கிடக்கின்றாள் |
|
ஆல் |
– |
அந்தோ! |
|
என்னீர் |
– |
என்று சொல்லுங்கோள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல், முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே” என்றதற்குமேல் ‘ஆழ்வீர்! இங்ஙனஞ் சொல்வது தகாது, செய்த பாபம் அனுபவித்தே தீரவேண்டுங்காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாகக்கூடுமென்று கருதி, ‘நான் பன்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது? என்று சொல்லுங்கோள்’ என்று சில அன்னங்களைக் குறித்துச்சொல்லுகிற பாசுரம் இது.
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள் = அன்னத்தை விளிக்கும் போதே தனது நிர்வேதமெல்லாம் விளங்க விளிக்கின்றாள்; * தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸடத்ரீ நியதிர் விதி:* என்ற அமரகோசத்தின்படியே விதியென்று பாக்கியமாய், உங்களுடைய பாக்கியமே பாக்கியம்! அன்றியே, என்னுடைய பாக்கியத்தாலன்றோ நீங்கள் பிரிவுறாதே கூடியிருக்கிறது என்கிறாளாகவுமாம். அவையும் இவளைப்போலே பிரிவாற்றாமை கொண்டிருந்தால் தனக்குக் காரியஞ் செய்யும்படி வேண்டிக்கொள்ள ப்ரஸக்தியேயிராதன்றோ.
இனி, விதியென்று சாஸ்திரவிதியாய், நீங்கள் சாஸ்திரப்படியே மணந்து கொண்டதனாலன்றோ பிரிவுத்துயரம் விளையப்பெறாமலிருக்கின்றீர்கள்; நான் அப்படியன்றியே காந்தர்வ விவாஹம்போல் மனப்பாங்கினால் கூடினபடியாலன்றோ இப்போது இங்ஙனம் பிரிவாற்றாமையெய்திப் பரிதபிக்கின்றேன் என்பதாகவுமுரைப்பர். இப்பொருள்களெல்லாவற்றினும், ‘என்னுடைய பாக்கியத்தினால் என்னும் பொருளே சிறக்கும். இதற்குச்சேர நம்பிள்ளையீடு காண்மின்:- “பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக்கொண்டு வாராநிற்கச்செய்தே ராஜ்யதாரங்களை யிழந்து கிடந்த மஹாராஜரைக்கண்டு அவர் குறையைத் தீர்த்த பின்பிறே தம்மிழவில் நெஞ்சு சென்றது; அங்ஙனன்றிக்கே இப்போது இவை குறைவற்றிருக்கிற விதுதான் இவள் பாக்யமாயிருக்குமிறே,’
மதியினால் குறள்மானாய் உலகிரந்த கள்வதற்கு தூது செல்லவேண்டுமிடத்தை நிரூபிக்கின்றாள்; தனது தலைவன் மஹாபுத்திமான் என்று கொண்டாடுகின்றான். “ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா, புத்திஸ் தாத்காலிகீ பிரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மதா.” (கீழே கழிந்துபோன விஷயத்தைப் பற்றின வுணர்வு ஸ்மிருதி என்றும், மேலே வரப்போகிற விஷயத்தைப் பற்றின வுணர்வு மதியென்றும், அப்போதைக்கப்போது நடக்கவேண்டிய விஷயங்களைப்பற்றின உணர்வு புத்தியென்றும், முக்காலத்து விஷயங்களையும் பற்றினவுணர்வு ப்ரஜ்ஞை யென்றுஞ் சொல்லப்படும்.) இதன்படியே, மேல்வருவதைத் தெரிந்து கொண்டு அதற்கு இணங்க, காரியஞ் செய்யவல்ல சாதுரியமே மதி யெனப்படுதலால், அப்படிப்பட்ட சாதுர்யத்தினால் மாண்குறள் கோலவடிவு காட்டி யாசகனாயினான் என்கிறது. மாவலியினிடத்தில் யாசகனாகச் சென்றாவல்லது நமது காரியம் நிறைவேறாதென்று சூதறிந்து செய்தவரென்கை. மாவலியோ இராவணனைப்போலே தலையறுத்துவிட வேண்டும்படியான குற்றமொன்றும் செய்திலன்; கேட்பார் கேட்பதெல்லாங் கொடுக்கிறதென்கிற ஔதார்ய விரதமும் ஏற்றுக்கொண்டிராநின்றான்; இந்திரனோ ராஜ்யங்களை இழந்து பல்காட்டி நிற்கின்றான்; இந்த நிலைமையில் என்ன செய்யலாமென்று பார்த்து தனது *அலம்புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு யாசகஞ்செய்து காரியம் நிறைவேற்றிக்கொண்ட சதுரன். “தைத்யௌதார்யேந்த் யாக்ஞாவிஹதி மபநயத் வாமநோர்த்தீ த்வமாஸீ: என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவ- உத்தரசதக ஸ்ரீஸூக்தியிலும் இப்பொருள் பொலியும். அப்படி, மஹாபலி பக்கலில் யாசகஞ் செய்ததும் அக்குணத்தில் ஈடுபடுத்தி என்னை இப்பாடு படுத்துவதற்காகவே என்னுங்கருத்தை *மதியினால்* கள்வர்க்கு* என்ற பதங்களிற் காண்க.
கள்வர்க்கு = இங்குக் கள்வமாவது முதலில் சிறிய வடிவைக்காட்டிப் பிறகு பெரிய வடிவான வஞ்சகம் என்று திருமாலையண்டான் கூறுவராம்; எம்பெருமானார் நிர்வஹிப்பதாவது- ஒன்றை நினைத்து ஒன்றைச்செய்த மாயமே இங்குக் கள்ளம் என்றாம். மஹாபலியை வஞ்சித்ததும் அந்தச் செயலாலே என்னை வசப்படுத்திக்கொள்வதற்காக வென்றபடி: “முன்னங் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
தலைவன் பிரிந்துபோம்போது அங்ஙனம் போகவொண்ணாதபடி வளைத்துத் தடுத்து நிறுத்திக்கொள்ளாமற்போனேனே! மதிகேடியானேனே! என்னும் பரிதாபத்தை மதியிலேன் என்ற சொல்லால் விளக்குகின்றாள். (வல்லினையே மாளாதோ) வல்வினையேயோ மாளாது என இயைக்க. “யத் ப்ரஹ்மகல்பநியுதாநுபவேபி அநாச்யத் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே.” (லக்ஷக்கணக்கான ப்ரஹ்மகல்பங்களில் ஜனனமெடுத்துப் பலாநுபவம் பண்ணினாலும் தீராத பாபங்களை அரைநொடிப் பொழுதில் சேதன்வர்க்கங்கள் செய்கின்றன) என்கிறபடியே அளவில்லாத பாபங்களை அநுவரதமும் செய்கின்ற ஜனங்கள் நிறைந்த இவ்வுலகின்கண் தானொருத்தி செய்த பாவந்தானா அனுபவித்தும் மாளாதது? என்று கேளுங்கோளென்கிறாள்.
அவரைக் கேட்கவேண்டிய கேள்வி கிடக்கட்டும்; அவரிடத்துச் சொல்ல வேண்டிய ஸமாசாரமென்ன? என்று கேட்க, ஒருத்தி மதியெல்லாமுன்களங்கி மயங்குமாலென்னீரே என்கிறாள். ஒருத்தி அறிவழிந்து வருந்திக் கிடக்கின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள். ஒருத்தியென்றால் தெரியுமோ? இன்னாளென்று குறிப்பிட வேண்டாலோவென்னில்; வேண்டா;
ஒருத்தி யென்றபோதே அவன் தானே பராங்குசநாயகி யென்று தெரிந்துகொள்ளத்தட்டில்லை. இங்ஙனே மதியெல்லா முள் கலங்கி மயங்கும்படியாகத் தன்னால் செய்து வைக்கப்பட்டவள் இந்நிலத்தில் பராங்குச நாயகியொருத்தி தவிர வேறு யாருமில்லையாதலால் விசேஷித்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை யென்க. இங்கே நம்பிள்ளையீடு:-
“ஒருத்தி யென்றால் அறியுமோவென்னில், எய்தவன் கை உணராதோ? இன்ன காட்டிலே மான்பேடை ஏவுடனே கிடந்து உழையாநின்றதென்று ஊரிலே வார்த்தையானால் எய்தவன் கை உணராதோ? ‘நீயன்றோ எய்தாய்’ என்று சொல்லவேண்டாவிறே.” என்று.
ஒருத்தி= அத்விதீயை, தன்னோடு ஒரு கோவையாக விரல் முடக்குவதற்கு வேறொரு வ்யக்தியில்லாமே தனித்து நிற்பவளென்கை. (மதியெல்லாம் இத்யாதி.) ஒருத்தி அறிவு கலங்கினாளென்னுங்கோள்; அது கேட்ட எம்பெருமான் “தன்னதான அறிவு கலங்கப்பெற்றாலும் நாம் கொடுத்த அறிவு இருக்குமே; அதுகொண்டு ஆறியிருப்பள்’ என்பன; அப்போது மதியெல்லாம் கலங்கிற்று’ என்னுங்கோள்! அது கேட்ட எம்பெருமான் ‘நாம் கொடுத்த அறிவு அப்படி கலங்கிவிடாது; கலங்கினாலும் மேலெழச் சிறிது கலங்குமே யல்லது உள்ளே கம்பீரமாகவே யிருக்கும்’ என்பன். அப்போது மதியெல்லா முன்கலங்கிற்று என்னுங்கோள். அதுகேட்ட எம்பெருமான் ‘எல்லாம் உள்கலங்கிப் போனாலென்ன? நாம் இருக்கிறோமே; பின்பு நாம் அணுகும்போது அறிவு கொடுத்துக்கொல்லுகிறோம்’ என்பன; அபிபோது ‘மயங்குமால்’ என்று சொல்லுங்கோள்; அதாவது-முடியுந்தருணமாயிற்று என்று சொல்லுங்கோள் என்கை. மயங்கினாள் என்று முடிந்ததாகவே சொல்லிவிட்டால், “அப்படியா? முடிந்து போய்விட்டாளா? இனிப்போய் நாம் என்செய்வது?’ என்று சொல்லி ஒரு முழுக்கப்போட்டுவிட்டு நிற்பன்; அப்படியன்றியே அரைகுலையத் தலைகுலைய ஆனைக்கு உதவ ஓடிவந்தாப்போலே கடுக ஓடி வரும்படியாகச் சிறிது பசையிருப்பதாய்ச் சொல்லுங்கோள் என்கிறாளாயிற்று.
English Translation
O Graceful swans fortunate to be in the company of spouses! That clever dwarf who notoriously took the Earth by begging, -Go tell him that this maiden has lost all her senses. Alas, mindless me! My dark karmas will never end.
