(2933)
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
பதவுரை
|
இனம் குயில் காள் |
– |
கூட்டமான குயில்களே! |
|
என் |
– |
என்னுடைய |
|
செய்யதாமரைகண் |
– |
செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய |
|
பெருமானுக்கு |
– |
எம்பெருமானுக்கு |
|
என் தூது ஆய் |
– |
நான் விட்ட தூதாகி |
|
உரைத்தக்கால் |
– |
சென்று சமாசாரமறிவித்தால் |
|
என் செய்யும் |
– |
(அந்தச் செயல் உங்களுக்கு என்ன தீமையை விளைவிக்கும்? |
|
நீர் அலிரே |
– |
(நெடுநாளாகப் பழகிப்போந்த) நீங்களல்லீர்களோ? |
|
முன் செய்த |
– |
முற்பிறப்பில் பண்ணின |
|
முழுவினையால் |
– |
பெரும்பாவத்தினால் |
|
திருஅடி கீழ் |
– |
திருவடிகளிலே |
|
குற்றேவல் செய்ய |
– |
கைங்கரியம் பண்ணுவதற்கு |
|
முன் முயலாதேன் |
– |
முன்னம் முயற்சிசெய்யாத நான் |
|
இனம் |
– |
இன்னமும் |
|
அகல்வதுவோ விதி |
– |
விலகியருப்தேயோ முறைமை? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாடடில் நாரையைத் தூதுபோகுமாறு இரத்த தலைவி, அங்குப் போனால் சொல்லவேண்டிய செய்தியைச் சில குயில்களுக்குச் சொல்லுகின்றாள். ஒருவரை யழைத்துளிட்டு மற்றொருவர்க்கும் ஸமாச்சாரஞ் சொல்லுகிறவிதனால் மிக்க கலக்கம் விளங்கும். இத்தகைய கலக்கத்தை யுண்டுபண்ணுவதேயாயிற்று விஷயாந்தரங்களிக்காட்டில் பகவத் விஷயத்திற்குண்டான ஏற்றம்.
என் செய்ய தாமரைக்கட் பெருமானார்க்கு = எம்பெருமான் இப்போது உறவுறுத்துக்கொண்டு உபேக்ஷித்துப் போயிருக்க இந்த ஸமயத்தில் என் என்று உறவு கொண்டாடிக் சொல்லலாமோ? எனில்; அவன் கூடியிருந்த காலத்தில் அளவுகடந்த உறவு கொண்டாடி இவளிட்டவழக்காக இருந்ததனால் பிரந்தபோதிலுங்கூட- உறவு அறாமல் தொடருகிறபடி. அன்றியே, அவன் பிரிகிற மையத்தில் ‘எங்கு செல்லுகின்றீர்? எத்தனை நாளில் திரும்பிவருவீர்?’ என்று நாயகிகேட்பளே; அப்போது ‘நங்காய்! இந்த வஸ்து எங்குப் போனாலென்ன? எங்கிருந்தாலென்ன? உன்னுடைய சரக்கன்றோவிது’ என்று உத்தரங்கூறுவனாகையாலே அதனைநிதைன்து சொல்லுகிறபடியாகவுமாம்.
செய்யதாமரைககண் பெருமானார்க்கு- எம்பெருமானுடைய பரத்வத்தை உபபாதிக்கிறவளவிலே ஆளவந்தார் “க: புண்டரீகதயந:” என்று செந்தாமரைக் கண்ணுடைமையை ஒரு லக்ஷணமாக அருளிச் செய்கையாலே இயற்கையாகவே செய்ய தாமரைக்கட்பெருமானார்; அதற்குமேலே ஸ்வகீய வஸ்துக்களிடத்துண்டான ப்ரேமத்தாலும் கண் சிவக்கும்; தலைவியோடு கலந்தனாலுண்டான களிப்பினாலும் சிவக்கும்; பிரிவாற்றாமையாலுஞ் சிவந்திருக்கும்.
பெருமானுக்கு என்னாதே “பெருமானர்க்கு” என்று பெருமைக்குமேலேயும் ஒரு பெருமையையேற்றிச் சொதல்லியிருப்பது- எம்பெருமான் இயற்கையான ஐச்வர்யத்துக்குமேலே இவள் தன் பக்கலுள்ள செல்வங்களையும் அபஹரித்துப் போனதனாலுண்டான ஐச்வரிய விரட்டிப்பைக் காட்டுதற்கென். “நான் மறையின் சொற்பொருளாய் நின்றார் என்மெய்பொருளுங் கொண்டாரே” “ஓ துள்ளுநீர்க் கண்ணபுரந்தொழதாளிவள் கள்வியோ, கைவளை கொள்ளத்தக்கதே” இத்யாதி பாசுரங்களினால் இத்தலையிலுண்டான செல்வங்களைக் கவர்தல் அறிக.
“என் தூதாய்” என்று தன் உடம்பை தொட்டுக்காட்டுகிறாள் போலும். கடலேறி வடிந்தாற்போலேயன்றோ நானிருக்கிறேன்; அவனோடு கலந்து பிரிந்து பெவறுந்தரையாயன்றோ நானிருக்கிறேன்; இப்படிப்பட்ட எனக்குத் தூதாய்ச் செல்லுகை தருமமன்றோ என்கிறாள்.
என்செய்யுமரைத்தக்கால் = எனக்காக அவன் பக்கலிற்சென்று தூதுசொன்னால் உங்களுக்கு என்ன தீங்குவரும்? ‘ஒரு தீங்கும் வராது என்கிறாவளவேயோ? உபவிபூதியும் உங்களுக்குப் பரிசாகவுங் கிடைக்குமன்றோ’ என்பதாகக் கருத்தை விரிக்க. ‘உரைத்தக்கால் என் செய்யும்” = எம்பெருமானை இங்கே கொண்டுவந்து சேர்க்க வெணுமென்கிறேனோ? அத்தனை வருத்தம் வேண்டாவே; என் நிலைமையை அங்குச் சென்று அறிவித்தால் போதுமே; இவ்வளவு காரியஞ்செய்தால் என்ன கெடுதியுண்டாமுங்களுக்கு?
இனககுயில்கள்! = என்னைப்போலே நீங்களும் தனியாயிருக்கவில்லையே; கூடிக்களித்திருக்கின்ற நீங்கள் ஸந்தோஷமாக இது செய்யலாமே யென்றபடி. இங்ஙனஞ் சொல்லியும் அவை கேளாமையாலே நீர் அலிரே என்கிறாள். அல்லீர் என்பது அலி; என்று தொகுத்தலும் குறுக்கலும்பெற்றுக்கிடக்கிறது. “வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல், விரித்தல் தொகுத்தல் வருஞ் செய்யுள் வேண்டுழி” என்பது நன்னூல். நீர் அல்லீரே? = நீங்களல்லவோ? அவனும் நானுமாயக் கூடியிருந்த போது கேட்ட வார்த்தைகளுக்கெல்லாம் மறுமொழி: கூறிக்கொண்டிருந்த நீங்கள் அவன் பிரிந்துபோனவறே வேறுபட்டீர்களோ?
‘ஒரு நொடிப்பொழுது தாமதித்தவளவால் இப்படியுஞ் சொல்லலாமோ! எம்பெருமான் பக்கலில் நாங்கள் சென்று சொல்லவேண்டிய செய்தி என்? என்ற குயில்கள் கேட்டனவாகக்கொண்டு பின்னடிகளில் ஸமாசாரங்கூறுகின்றாள். (முன்செய்த முழுவினையால் இத்யாதி.) அநாதிகாலமாகத் திரட்டின பாபத்தாலே திருவடிவாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுதற்கு ஏற்கவே முயலப்பெறாத நான் அகன்று போக வேண்டுவதேயோவென்று கேளுங்கோனென்கிறாள். முன்- எனக்குத் தெரியாத காலம் முதலாக செய்த – பாவஞ்செய்யவேணுமென்ற நினைத்தமாத்திரமேயன்று, செய்துமுடிக்கவும் பட்டதென்கை. முழுவினையால் – செய்யநினைத்த பாவங்களில் சில செய்து சில விட்டமையுண்டோ? குறையற முழுதுஞ்செய்தற்ற தென்றவாறு.
முழுவினையென்றவிடத்திற்கு ஒரு ஐதிஹ்யங்காட்டியருளுகிறார் நம்பிள்ளைபட்டர். திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருந்தகாலத்தது அங்கத் தெற்காழ்வா என்றும் நற்குணநல்லொழுக்கங்களுடையவன்; தெற்காழ்வான் ஸாமாந்யனாயிருப்பன். இவ்விருவரும் ஒரு விசேஷதிவஸத்தில் ஒன்று சேர்ந்தார்கள். கோளரி யாழ்வான் தெற்காழ்வானைநோக்கி ‘அப்பா! இன்று புணயதினமாயிற்றே இன்றாகிலும் ஒரு முழுக்கிடமாட்டாயோ?’ என்றானாம்; அது கேட்ட தெற்காழ்வான் ‘முழுக்கிடவேணுமென விதிக்கின்ற உன்னடைய அபிப்ராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் சில தொலையக்கூடுமென்பதுதானே; அந்தோ! என்னுடைய பாபம் (திருக்கோட்டியூர்) ஸௌம்ய நாராயணப்பெருமாளுடைய திருக்கையில் திருவாழியாலே போக்கினால் போகுமேயல்லது ஒன்றிரண்டு முழுக்கால் போகக் கூடியதன்றுகாண்’ என்றானாம். அந்த வார்த்தை பட்டருடைய திருச்செவியிலே விழுந்தவளவில் ‘ஆ! ஆ!! எவ்வளவு ஆஸ்திகனாயிருந்தால் இந்த வார்த்தை சொல்லமுடியும்; இவனை மேலெழுந்தவாரியாகப் பார்த்து நாஸ்திகனென்று நினைத்திருந்தோமே, இவ்வளவு பேசும் பரிபாகமுடையவனா இவன்! என்று மிகவும் ஈடுபட்டாராம்.
நம்முடைய உபாயவிசேஷங்களால் போக்கிக்கொள்ள முடியாமல் எம்பெருமானே அநுக்ரஹஸங்கல்பத்தினால் போக்கவேண்டிய முழுவினை என்பதற்காக இவ்வைதிஹயம் இங்குக் காட்டப்பட்டது.
திருவடிக்கீழ் குற்றேவல்= இப்போது ஆழ்வார் தாமான தன்மையில் இல்லை; நாயகிஸமாதியிலே நின்றிருக்கிறார். இந்த நிலைமையில் “கொம்மை முலைகளிடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்ற ஆண்டாளைப்போலே ‘முலையாலணைக்க’ என்று சொல்லவேண்டியிருந்தும் ‘திருவடிவாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ண’ என்று சொல்லுகிற அழகுகாண்மின். இங்கே நம்பிள்ளையீடு:- ‘ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச்சொல்லுமாபோலே இவர் பிராட்டியானாலும் முலையாலணைக்க நினையார்; திருவடிகளிலே அணையத்தேடுமத்தனை.” -வேதமோதின அந்தணனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் சேதாத்யயனமே சொல்லித் திரிதல் போலே ஆழ்வாருக்கு நிலைமை மாறினாலும் பாசுரம் பேசும் முறைமை மாத்திரம் மாறவில்லையென்றபடி. “தேறியுந் தேறாதும் மாயோன் திறத்தினளேயித்திருவே” என்பதும் இங்கு அநுஸந்திக்கவுரியது.
குற்றவேல் முன்செய்ய முயாலாதேன் அகல்வதுவோ விதியினமே = திருவடிகளின் கீழே திருமுன்பேயிருந்து அடிமை செய்தற்கு உறுப்பாயிருப்பதொரு ஸாதநாநுஷ்டானம் என்தலையால் பண்ணாத நான் திருவடியைவிட்டு விலகியே போமித்தனையோ? என்கிறாள். இன்னம் என்பது இனம் என்று தொக்கிக்கிடப்பாதாகக் கொண்டு, “இன்னம் அகல்வதுவோ விதி?” = என் கையிலே ஒன்று மின்றியே அவன் கையையே எதிர்பார்த்திருக்குமிந்த நிலைமையிலும் இழப்பதுண்டோ? என்பதாகப் பொருள் காண்க. “விதியினனே” என்றும் ஒரு பாடமுண்டாம்: அப்போது, விதியினன் – பாபத்தையுடையேனான நான் அகல்வதுமோ? என்றுரைப்பது.
இப்பாட்டில் குயிலென்றதற்கு ஸ்வாபதேசம் வருமாறு:- (1.) “மாம்பொழிவல் தளிர்கோதிய மடக்குறில் வாயது துவர்ப்புஎய்தத், தீம்பலங்கனித்தேனது நுகர்” என்றவிடத்து, மாஞ்சோலையிலே போய்ப்புகுந்து அங்குள்ள தளிர்களைத்தின்ற குயில் வாய் துவர்ப்படைந்துபோக, அத் துவர்ப்பை வேறு ரஸத்தாலே மாற்றவேண்டி இனிய பலாப்பழத்திலே சென்று வாய்வைக்கிறபடியைச் சொல்லுகிறவிதனால் துவர்ப்பான விஷயாந்தரங்களில் நின்றும் இனிமையான பகவத் விஷயத்திலே அவகாஹித்து ரஸித்திருக்கின்றமை விவக்ஷிதம். (2.) “புன்னைமேலுறை பூங்குயில்காள்” “புன்னை குருக்கத்திநாழல் செருந்திப்பொதும்பினில் வாழுங்குயிலே” என்கிற விடங்களில் புன்னை மரத்தைக் குயில்களுக்கு உறைவிடமாகச் சொல்லுகிறவிதனால் – “ஸ்ரீரங்கராஜகரநம்ரித சாகிகாப்ய: லக்ஷ்ம்யா ஸ்வஹஸ்த கலித ச்ரவணாதம்ஸம்,புந்நாகதல்லஜமஜஸ்ர ஸஹஸரகீதி ஸேகோத்ததிவ்யநிஜ ஸௌரபமாமநாம:” (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்று பட்டரருளிச்செய்யும்படி திருவாய்மொழியின் ரஸமூறின கோயிற் புன்னைமரத்தின் கீழமர்ந்து விசேஷார்த்தங்கள் கேட்டுவளர்ந்தமை விவக்ஷிதம். (3.) குயிலுக்கு வடமொழியில் (பரப்ருதம்) என்று பெயர், பிறரால் வளர்க்கப்படுவது என்று பொருள்: குயில்களின் வழக்கம் இதுவேயென்பது பிஸித்தம்; அதுபோலே, ஆசாரியர்களுடையவும் பாகவதர்களுடையவும் அபிமானத்திலொதுங்கி அவர்களால் வளர்க்கபப்படுகின்றமை விவக்ஷிதம். (4) இன்னமும், “வஸந்தகாலலே ஸம்ப்ராப்தே காக: காக: பிக: பிக:” என்கிறபடியே சிலகால விஷேங்களில் குயில் தன் மிடற்றோசைகாட்டி வீறுபெறும்; அதுபோல, ஆசிரியர்களும் ஸமயவிசேஷங்களிலே கம்பீரமாக வாய்விட்டு உபந்யஸித்து மற்றையாரிற்காட்டில் தமது வைலக்ஷண்யத்தை விளக்குவர்கள். இங்ஙனே மற்றும் பலவகைப் பொருத்தங்களுங் காண்க.
English Translation
O Flocking Koels! Would if hurt you to take a message from me to my lotus-eyed Lord? Come, are you not my good pets? Oh, my past misdeed, that I had never sought him so long!
