(2893)
வளர்ந்தவெங் கோப மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்
களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே.
பதவுரை
|
அன்று |
– |
முன்னொரு காலத்தில் |
|
வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய் |
– |
கடூரமான கோபம் மேலிடப்பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி |
|
வாள் அவுணன் |
– |
வாளையுடைய ஹிரண்யா ஸுரனது |
|
கிளர்ந்த |
– |
செருக்கினால் நெறித்திருந்த |
|
பொன் ஆகம் |
– |
பொன்போன்ற மார்வை |
|
கிழித்தவன் |
– |
கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானாடைய |
|
கீர்த்தி பயிர் எழுந்து |
– |
திருப்புகழ்களாகிற பயிர் வளர்ந்து |
|
விளைந்திடும் சிந்தை |
– |
விளையப்பெற்ற திருவுள்ளத்தை யுடையரான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என் தன் மெய் வினை நோய் களைந்து |
– |
எனது உடலைப்பற்றியிருக்கிற வினைநோய்களையெல்லா மொழித்து |
|
கையில் கனி என்ன |
– |
கையிலங்கு நெல்லிக்கனி போலே ஸுலபமாக |
|
நல் ஞானம் அளித்தனன் |
– |
விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார் |
English Translation
Then in the yore the Lord appeared as a huge, terribly angry man-lion and tore the mighty golden chest of the heavily armed Hiranya. His glory grows in the fertile fields of Ramanuja’s heart. Pulling out the weeds of my karmic birth, he gives me a good harvest of ripe knowledge.
