(2892)

(2892)

நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்

ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவி னையேன்

கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்

வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே?

 

பதவுரை

(எம்பெருமானாரே!)

மனம்

எனது நெஞ்சானது

உன் குணங்களை உன்னி

தேவரீருடைய திருக் குணங்களைச்சிந்தித்து

நையும்

கரைகின்றது;

என் நா

எனது வாக்கானது

இருந்து

நிலைநின்று

எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்

எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.

அரு வினையேன்

மஹாபாபியான என்னுடைய

கையும்

கைகளும்

தொழும்

அஞ்ஜலிபண்ணு கின்றன;

கண்

கண்களானவை

காண கருதிடும்

(தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;

கடல்புடைசூழ் வையம் இதனில்

சுற்றிலும் கடல் சூழப்பெற்ற இப்பூமண்டலத்தினாள்ளே

உன் வண்மை

தேவரீருடைய ஔதார்ய குணம்

என்பால் வளர்ந்தது என்

அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.

 

English Translation

O My lord and Master, Ramanuja! My heart melts to think of your good qualities. My tongue-always calls your name alone. My hands convey obeisance, my eyes crave to see your beautiful frame.  O, the terrible sinner that I am, -why in the whole ocean-girdled Earth did you choose me for your compassion?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top