(2894)

(2894)

கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்

மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ

செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங்கொண்டலே!

 

பதவுரை

செழு கொண்டல்

ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற

என் இராமாநுச

எம்பெருமானாரே!

(தேவரீர்)

கண்ணனை

எம்பெருமானை

கையில் கனி என்ன

உள்ளங்கை நெல்லிக் கனிபோலே

காட்டி தரினாம்

காட்டிக் கொடுத்தாலும்

உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன்

தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண்வைக்கமாட்டேன்;

நிரயம் தொய்யில்

ஸம்ஸார நரகக்குழியில்

கிடக்கிலும்

அழுந்திக் கிடந்தேனாகிலும்

சோதி விண் சேரிலும்

சோதிமயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும்

இவ் அருள்

(தேவரீருடைய திரு மேனியழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை

நீ செய்யில்

தேவரீர் செய்தருளினால் தான்

தரிப்பான்

(ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவிநிற்பேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிரயத்தொய்யில் = நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸாரநிலமே நரகமெனப்படும். தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.

 

English Translation

O Ramanuja! My ripe rain-cloud! Even if you give me Krishna like a fruit in my hands, I still seek the glory that flows from your frame only, Whether I fall into the dungeon of hell or whether I attain the glorious high heaven, you must give me this, or else I shall not live.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top