(2859)

(2859)

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்

அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்

தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து

எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே.

 

பதவுரை

முன் நாள்

ஸ்ருஷ்டிருக்கு முற்காலத்தில்

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து

சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து

அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு

உபஸமஹாரத்தையடைந்து அசேதநப்ராயமா யிருப்பதைப் பார்த்து

என் தனக்கு

(அப்படி அசேதந ப்ராயராய்க்கிடந்தவாகளில் ஒருவனான) எனக்கு

அவை

அந்த சரண களேபரங்களை

அன்று

அக்காலத்தில்

அருளால் தந்த அரங்கனாம்

க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம்

தன்  சரண் தந்திலன்

தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கவில்லை;

(அக்குறை நீங்க)

எந்தை இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்

தான் வந்து

தாமாகவே வந்து

அது தந்து

அந்தத் திருவடிகளைத் தந்தருளி

இன்று என்னை எடுத்தனன்

இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.

 

English Translation

Then in the deluge the mind and sense organs of all souls were destroyed and lay absorbed in the soul.  Seering this the lord of Arangam repaired the souls and restored their faculties.  But even he did not give me his refuge in such measure as Ramanuja has done.  Today he has uplifted me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top