(2858)

(2858)

ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லில் மாயனன் றைவர்த்தெய்வத்

தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்

பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்

சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.

 

பதவுரை

மாயன்

ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய எம்பெருமான்

அன்று

முற்காலத்தில்

ஐயர்

பஞ்சபாண்டவர்களுடைய

தெய்வம் தேரினில்

தெய்வத்தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்துகொண்டு)

செப்பிய

அருளிச் செய்த

கீதையின்

பகவத் கீதையினுடைய

செம்மை பொருள்

ஸ்வரஸமான அர்த்தத்தை

தெரிய

(அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி

பாரினில்

இப்பூமிலே

சொன்ன

(கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த

இராமாநுசனை

எம்பெருமானாரை

பணியும்

ஆச்ரயித்திருக்கி

நல்லோர்

விலக்ஷண புருஷர்களுடைய

சீரினில்

கல்யாண குணங்களிலே

என் ஆவியும் சிந்தையும்

எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்

சென்று பணிந்தது

சென்று சேர்ந்துவிட்டன;

சொல்லில்

சொல்லுமளவில்

இன்று

இக்காலத்தில்

எனக்கு ஆர் நிகர்

எனக்கு ஆர் ஒப்பாவார்?

 

English Translation

Then in the yore the wonder Lord spake the Gita driving the chariot for Arjuna in the battle of the five against the hundred.  Our master Ramanuja expounded its meaning to the world, with a lucid commentary. My heart and soul forever bathe in the goodness of his devotees. Come to say, who is my peer?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top