(2809)

(2809)

உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங் கியசீர்

நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர்

அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே.

 

பதவுரை

உறுபெரு செல்வமும் தந்தையும் உயர் குருவும்

சிறந்த பெரிய ஸம்பத்தும் மாதா பிதாக்களும் ஸதாசார்யனும்

வெறி தரு பூமகள் நாதனும்

மணம் மிக்கபூவைப் பிறப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியாருக்குக் கொழுநனான ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம்

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று

நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்தபகவத்குணங்களின் அடைவே அருளிச்செய்த செந்தமிழ் வேதமேயென்று

இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற

இப்பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற

இராமாநுசன்

எம்பெருமானார்

எனக்கு

அடியேனுக்கு

ஆர் அமுது

பரம போக்யர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய் மொழி தான் நமக்கு ஸர்வஸ்வம்’ என்கிற அத்ய வஸாய முடைய உடையவர் திருத்து அடியேன் அநந்ய போக்யத்வ புத்தியை யுடையேன் என்றாராயிற்று.

மாறன் விளங்கிய சீர்நெறிதரும் செந்தமிழாரணம் ஸ்ரீ திருவாய் மொழியில் ஒவ்வொரு திருவாய்  மொழியிலும் எம்பெருமானாடைய ஒவ்வொரு திவ்யகுணத்தை வெளியிட்டிருக்கிறார்; அது வெளியிட்டவாறு என்னென்னில், எம்பெருமான் ஆழ்வார்க்கு எந்த க்ரமமாகக் குணங்களை அநுபவிப்பித்தானொ அந்த க்ரமமாகவே இவர் வெளியிட்டாரென்க.

 

English Translation

The Tamil Veda, Tiruvaimali, sung by Maron Satakopen is the proper path to enjoy the lord’s bliss, it is the only wealth to be attained, mother, father, the high teacher,-even the lord of the lotus lady Lakshmi himself. Ramanuja who fought this to the world is our ambrosia.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top