(2810)
ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே.
.
பதவுரை
|
ஆரம் பொழில் |
– |
சந்தனச் சோலைகளையுடைய |
|
தென் குருகை |
– |
அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த) |
|
பிரான் |
– |
மஹோபகாரகரான ஆழ்வாருடைய |
|
அமுதம் திருவாய் |
– |
பரமபோக்யமான திருப்பவளத்தில்பிறந்த |
|
ஈரம் தமிழன் இசை |
– |
ஈரச்சொல்லாகிய திருவாய்மொழியின் இசையை |
|
உணர்ந்தோர்கட்கு |
– |
அறிந்தவர்களுக்கு |
|
இனியவர் தம் |
– |
இஷ்டராயிருப்பவர்களுடைய |
|
சீரை |
– |
குணங்களை |
|
பயின்று |
– |
அப்யஸித்து |
|
உய்யும் சீலம் கொள் |
– |
ஸத்தை பெறும் சீலத்தையுடையரான |
|
நாதமுனியை |
– |
நாதமுனிகளை |
|
நெஞ்சால் |
– |
தம் திருவுள்ளத்தாலே |
|
வாரி பருகும் |
– |
அபிநிவேசத்தோடு அனாபவிக்கின்ற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என் தன் மாநிதி |
– |
எனக்கு அக்ஷயமான நிதி. |
English Translation
Nathamuni exulted in worshipping the sweet poet Madurakavi, who knew the art of singing the Rasa-laden words of the delightful Tiruvaimoil be queathed by the lord of flower-groves-surrounded southern kurugur king Satakopan. Ramanuja who filled his heart with love for Nathamuni, is our great wealth.
