(2808)
எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற் குலதில் வரும்சட கோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற் குதவும் இராமா னுசனெம் உறுதுணையே.
பதவுரை
|
எய்தற்கு அரிய மறைகளை |
– |
அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை |
|
இன் தமிழ் ஆயிரத்தால் |
– |
இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால் |
|
செய்தற்கு உலகில் வரும் |
– |
அருளிச் செய்வதற்காக இவ்வுலகில் வந்துதித்த |
|
சடகோபனை |
– |
நம்மாழ்வாரை |
|
சிந்தை உள்ளே |
– |
தமது ஹரதயத்தினுள்ளே |
|
பெய்தற்கு இசையும் |
– |
த்யானிப்பதற்கு இணங்கின |
|
பெரியவர் |
– |
ஸ்ரீ மதுரகவிகளுடைய |
|
சீரை |
– |
ஜ்ஞாநாதி குணங்களை |
|
உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் |
– |
ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
எம் உறு துணை |
– |
எமக்கு உற்றதுணை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபனையே வாழ்த்தும் ஸ்ரீ மதுரகவிகளின் பக்தரான எம் பெருமானார் நமக்கு உற்றதுணை யென்றாராயிற்று. இப்பாட்டில் ஸ்ரீ மதுரகவிக்ள பெரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டமை நோக்கத்தக்கது. “புதிய மிருவிசும்பும் நின்னகத்த நீ யென் செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாயுள்ளு” (பெரிய திருவந்தாதி) என்று பெரிதான பரப்ரஹமத்தை உள்ளடக்கின பெரியவரை (நம்மாழ்வாரையும்) உள்ளடக்கின பெரியவரிறே மதுரகவிகள்.
English Translation
Madurakavi only desired to enjoy in his heart his master Satakopan who took birth on Earth for the sole purpose of rendering the hard-to-comprehend Vedas into a thousand sweet Tamil songs. Ramanuja showed us the way to the Alvar’s feet. He alone is our refuge.
