(2799)

(2799)

இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்

நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்

துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்

மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

 

பதவுரை

இறைவனை

ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை

காணும்

ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான

இதயத்து

ஹ்ருயத்திலுள்ள

இருள்கெட

அஜ்ஞாநமாகிற அந்தகார மானது நசிக்கும்படியாக

ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய

ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச்செய்த

பூதத் திருவடி

பூதத்தாழ்வாருடைய

தாள்கள்

திருவடிகளை

நெஞ்சத்து

தமது திருவுள்ளத்திலே

உறைய வைத்து

சாச்வதமாக ஸ்தாபித்து

ஆளும்

(அவற்றையே) அநுபவிக்கின்ற

இராமரநுசன்

எம்பெருமானாருடைய

புகழ்

திவ்ய குணங்களை

ஒதும்

இடைவிடாது அநுஸந்திக்கின்ற

நல்லோர்

விலக்ஷண புருஷர்கள் தாம்

இந்த மண் அகத்தே

இப்பூமண்டலத்திலே

மறையினை

வேதங்களை

காத்து

ரக்ஷித்து

மன்ன வைப்பவர்

என்றைக்கும் அழிவில்லாதபடிப்ரதிஷ்டாபனம் பண்ணவல்லவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ‘ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்’ என்னும் விருது இராமாநுசனுடையார்க்கே ஏற்குமென்கிறார். ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பதற்கு எல்லார்க்கும் உபகரணமாகயிராநின்ற ஹருதயமானது அஜ்ஞாநாந்தகாரத்தாலே இருண்டு கெட்டுப்போகாதபடி பரஜ்ஞாநமாகிற பூர்ண தீபத்தை எற்றினவரான பூதத்தாழ்வாருடைய திருவடிகளைத் தமது திருவுள்ளத்திலே இடைவிடாது வைத்துக்கொண்டு அவற்றையே அனுபவிக்கும் எம்பெருமானாருடைய குணகீர்த்தநமே போது போக்காக இருக்கும் விலக்ஷணர் யாரோ அவர்கள் தாம் வேதத்தை நன்றாக ரக்ஷித்து இந்நிலவுலகத்தில் நிலைநிறுத்தவல்ல மஹான்கள் என்றாராயிற்று பூதத்தாழ்வார்  ஏற்றிய ஞானமென்னாம் நிறைவிளக்காவது – இரண்டாந் திருவந்தாதியாகிற அவருடைய அருளிச்செயல் பூதத்திருவடி = திருவடியென்று இங்கே ஸ்வாமிக்கு வாசகம்; பூதத்தாரென்னாம் ஸ்வாமி என்றபடி.

(மறையினைக்காத்து மன்னவைப்பவர்) எம்பெருமானார் ஸம்பந்தம் பெறாத மற்றையோர்கள் “வேதம் ப்ரமாணமேயல்ல” என்று சொல்லுவாரும், அதனைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டும் அபார்த்தங்கள் பண்ணுவாருமாய் இருப்பதால் அவர்கள் யாவரும் வேதமார்க்க வித்வம்ஸிகள்; இராமாநுசனாடையார் தாம் ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டா பநாசார்யர்கள் என்றபடி.

 

English Translation

Butattalvar lit a lamp of knowledge to dispel the darkness of seeker’s hearts.  Ramanuja placed the Alvar’s feet in his heart and rejoiced. The good ones who preserve the Vedas will always sing his praise.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top