(2798)

(2798)

வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்

திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

 

பதவுரை

வருத்தும்

வருத்தத்தையுண்டுபண்ணக்கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை

மாற்ற

போக்குவதற்காக

எம் பொய்கைப்பிரான்

நமது குலத்தலைவரான பொய்கை யாழ்வார்

அன்று

முற்காலத்தில்

தறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து

வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒருதிரியாக்கி

எரித்த திருவிளக்கை

ஜ்வலிக்கக்செய்த (முதல் திருவந்தாதியாகிற) திருவிளக்கை

தன் திருஉள்ளத்தே

தமது திருவுள்ளத்தே

இருத்தும்

வைத்துக்கொண்டிரா நின்ற

பரமன் இராமாநுசன் எம் இறையவன்

மஹாவைபவசாலியான எம்பெருமானார்

எம் இறையவன்

நமக்கு ஸ்வாமி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பகவத்பாகவத விஷயம் அந்தரங்க விஷயமென்றும் சப்தாதி விஷயங்கள் பாஹ்ய விஷயம் (அதாவது-புறவிஷயம்) என்றும் சொல்லப்படும். அந்த பாஹ்ய விஷயங்களைப்பற்றின அஜ்ஞாநாந்தகாதலிலே ஸுகரூபம்போல் தோற்றினாலும் பிறகு மிக்கவருத்தத்தை விளைக்கக்கூடியது; அப்படிப்பட்ட கொடியஇருளை அகற்றுவதற்காகப் பொய்கையாழ்வார் “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” என்று தொடங்கித் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தமென்னாம் ஒருவிளக்கை எற்றியருளினார். அவ்விளக்குக்கு எதைத் திரியாக்கினார் என்றால், வேதாந்தங்களில் திரண்டுகிடக்கும் ஸாரப்பொருள்களையும் இனிய தமிழ்ச்சொற்களையும் ஒன்று சேர்த்துத் திரித்தார். அப்படிப்பட்ட திருவிளக்கை எம் பெருமானார் தமது திருவுள்ளத்தினாள்ளே எப்போதும் அணையாதபடி ஸ்தாபித்தருளினார்; அவரே அடியேனுக்கு ஸ்வாமி என்றாராயிற்று.

 

English Translation

Paygao! Alvar blended together the substance of the Veda and the sweetness of Tamil Poetry to light a lamp and dispel the darkness of affliction, Ramanuja placed that lamp in his heart.  He is our lord and our master.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top