(2800)

(2800)

மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்

பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்

சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.

 

பதவுரை

மன்னிய

ஒருவாரலும் பேர்க்கமுடியாதபடியாதபடி நிலைத்துநின்ற

பேர்இருள்

(அஜ்ஞாநமாகிறபெருத்த இருளானது

மாண்ட பின்

முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திருவிளக்காலே) நனறாக நீங்கின பின்பு,

கோவலுள் ஆயனை

திருக்கோவலூரில் ஆயனாரை

மாமலராள் தன்னொடும்

பிராட்டியோடு கூட

கண்டமை

தாம் ஸேவித்த படியை

காட்டும்

“திருக்கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி

தமிழ் தலைவன்

தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய

பொன் அடி

அழகிய திருவடிகளை

போற்றும்

புகழுமவரான

இராமாநுசற்கு

எம்பெருமானார் திறத்தில்

அன்பு பூண்டவர்

பக்தியையுடையவர்களினது

தாள்

திருவடிகளை

சென்னியில் சூடும் திரு உடையார்

சிரோ பூஷணமாகக்கொள்ளுஞ் செல்வமுடையோர்தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றின இரண்டு திருவிளக்குகளாலும் இருள் நீங்கவே, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று திருக்கோவலூராயனாரைப் பிராட்டியோடு கூட ஸேவிக்கப்பெற்றார் பேயாழ்வார். தாம் அப்படி ஸேவித்ததாக மூன்றாந்திருவந்தாதி முகத்தால் வெளியிட்டருளின அவ்வாழ்வாருடைய திருவடிகளைக் துதிக்குமவரான எம்பெருமானார் திறத்தில் பக்தியை யுடையவர்கள் யாரோ, அவர்களுடைய திருவடிகளைச் சிரோபூஷணமாகக் கொள்வதையே அழியாச்செல்வமாக நினைத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களுடைய திருவடியைச் சிரமேற்கொள்ளுமவர்கள் தாம் நித்திய ஸ்ரீமான்கள் என்றாராயிற்று.

இப்பாட்டில் பேயாழ்வார் “தமிழ்த்தலைவன்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டார்.

 

English Translation

After the pail of darkness was dispelled that night in Tirukkovalur, Peyalvar saw the cowherd lord, the wonder lord with the lotus-dame Lakshmi, Ramanuja worshipped the Alvar’s golden feet.  Those who pour their lover over Ramanuja are fortune-favoured devotees of excellent merit.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top