(2574)
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோகண்கள் துஞ்சுதலே?
பதவுரை
எழுவதும் |
– |
ஸூர்யன் உதிப்பதையும் |
மீண்டே படுவதும் |
– |
மறுபடி அஸ்தமிப்பதையும். |
பட்டு |
– |
இங்ஙனம் நிகழ்ந்து |
எனை ஊழிகள் |
– |
எத்தனையோ காலங்கள் |
போய் கழிதலும் |
– |
சென்று கழிவதையும் |
கண்டு கண்டு |
– |
பார்த்துப் பார்த்து |
எள் கல் அல்லால் |
– |
வருந்துதலேயல்லாமல் |
இமையோர்க்கள் குழாம்தேவர்கள் கூட்டம் |
||
தொழுவதும் |
– |
வணங்குவதையும் |
சூழ்வதும் |
– |
(பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும். |
செய் |
– |
செய்யப்பெற்று |
தொல்லை மாலை |
– |
ஆதியந்த மில்லாதவனான திருமாலை |
கண் ஆர கண்டு |
– |
கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து |
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் |
– |
(அவன்பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும் |
கண்கள் தஞ்சுதல் |
– |
கண்ணுறக்கம் கொள்ளுதல் |
உண்டோ |
– |
உள்ளதோ? (இல்லை என்ற படி.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார். ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண்களிப்பக்கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோவென்கிறார்.
இப்பாட்டுக்கு மற்றொருபடியாகவும் பொருளுரைப்பா; எழுவதும்- பிறப்பதும், மீண்டேபடுவதும்- பிறந்தவளவிலே இறப்பதும், பட்டு- பிறந்து, எனை ஊகளள் போய்க்கழிவதும்- பலகாலம் கழித்து இறப்பதுமான உலகத்துப் பொருள்களை, கண்டு கண்டு- பாரத்துப் பார்த்து என்கல் அல்லால்- அவற்றை இகழ்வதல்லாமல்… எம்பெருமானைச் சேவித்துக் காலங்கழியும்படியானதோர் ஆசையில் நின்றார்க்கு அவனை உபேக்ஷிக்கக் காரணமில்லை- என்று. எம்பெருமானைப் பூர்ணாநுபவஞ் செய்யக் கருதி ஆழ்ந்தவர்கட்கு ஞானம் குவியாது என்பதும் தோன்றும்.
வான்களாகி நாள்கள் செல்லும்படியைக் கண்டு ‘ஐயோ! காலமெல்லாம் வீணாய்க் கழிந்து போகிறதே, பகவத்ஸாக்ஷாத்காரம் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்று மனம் நொந்து கொண்டிருக்கலாமேயொழிய. ‘எம்பெருமானைக் கண்ணாரக் கண்டாயிற்று, நமது காதல் தீர்ந்துவிட்டது’ என்று க்ருதக்ருத்யராகப் பெறும் நாள் உண்டாவதரிது என்றதாயிற்று.
கண் ஆர் – கண்படைத்த பயன்பெற. 1. ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண் ணென்னகண்ணே’ என்றார் பிறரும். ‘காதலுற்றார்க்கு என் கலவல்லால் கண் துஞ்சுதலுண்டோ’ என்று அந்வயிப்பது. பகவத் விஷயத்தில் ஆசைவைத்திட்டால் உள்ளதனையும் உருகிக் கிடக்கவேணுமத்தனையன்றி நிர்வ்ருதியாய்க் கண்ணுறங்கப் பெறுவதில்லை காணும். இங்கே நம்பிள்ளை யீடுகாண்மின்;- ‘ஸ்வதந்தாரான பெருமாள் உறங்கினாரென்று கேட்குமித்தனை போக்கி அவரை அநுவர்த்தித்துப் போன இளையபெருமாளுக்குக் கண்ணுறங்கிற்றோ? பகவத் விஷயத்திலே கைஸவத்தாரில் இதுக்கு முன் கண்ணுறங்கினாருண்டென்று கேட்டறியவாருண்டோ?”
கிளவித்துறை வகையில் இப்பாசுரத்தை, நாயகனைப் பிரிந்து துயில் கொள்ளாத நாயகி இரங்கியுரைக்கும் பாசுரமாகக் கொள்க. திருமாலாகிய நாயகனைக் கண்டு கூடிப்பிரிந்து அந்த விரஹாரத்தில் “கங்குலும் பகலுங் கண்துயிலறியாள்” என்றபடி அல்லும் பகலும் சிறிதும் தூக்கங்கொள்ளாது வருந்துகிற (பராங்குச) நாயகி தன்னைத்தேற்ற முயல்கிற தோழிக்குக் றியது இது என்ற கொள்ளலாம். தோழி தேற்றுகிற விதம் யாதெனில்,‘நாயகனைப் பிரிந்த நிலைமையில் இப்படி அலற்றுவாருண்டோ? பலவகைப்பட்ட உலகப் பொருள்களைக் கண்டுகொண்டு பொழுதுபோக்கி ஒருவாறு ஆறித் துயில்கொள்ளும் நாயகிகள் உலகத்திலில்லையோ? அவர்களைப் போலே துயிர் கொண்டிருக்கலாமே’ என உலகியல் கூறி ஆற்றலுற்றானி தோழி; அன்னவளை நோக்கி இத் தேவாதிதேவயான புருஷோத்தமன் பக்கல் அன்புவைத்தவர்களும் துயில் கொள்ளக்கூடுமோ வென்று கூறி மறுத்தவாறு இன்பநுகர்ச்சிக்கு உரியகாலம் வீணேகழிதலைச் சிந்தித்து சிந்தித்து மனந்தளர்வதல்லாமல் கண்துயில்கொள்ள அவகாசமுண்டோ வென்றவாறு. ‘இமையோர்கள் குழாம் தொழுவதுஞ் சூழ்வதுஞ்செய்’ என்ற விசேஷணத்தினால்- தன்னால் காதலிக்கப்பட்ட நாயகனுடைய சிறப்பு விளக்கப்பட்டதாம். ‘தொல்லைமால்’ என்றதனால் தனக்கும் அந்த நாயகனுக்கும் நேர்ந்த பழக்கம் நெடுநாளையது என்று குறிப்பிடப்பட்டதாம். ‘தொல்லைமால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும் பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.
1. சிலப்பதிகாரம் – ஆய்ச்சியர் குரவை
English Translation
The hordes of gods worship and circum-ambulate the ancient lord, and spend their hours beholding him with love-filled eyes. Yet every time their eyes blink, they suffer the same pangs as those going through repeated birth-death cycles through eternity.