(2575)

(2575)

துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,

எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்

தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே

நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே.

 

பதவுரை

துஞ்சா முனிவரும்

கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்

அல்லாதவரும்

தேவர்கள் முதலிய மற்றையோரும்

தொடர நின்று

பின்பற்றி வழிபடநிற்பவனும்

எஞ்சா பிறவி இடர் கடிவான்

(அடியார்களுடைய) குறைவற்ற பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்

தன் சார்வு இலாத

தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத

தனிபெரும் மூர்த்தி தன்

ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.

வெண்ªணேய் ஊண் என்னும் ஈனம் சொல்

வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழிசொல்லுக்கு இடமான

மாயம்

ஆச்சரியம்

இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்

செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது

நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வேச்வரனுடைய பரத்வத்திலும் ஸௌலப்யத்திலுமண்டான போக்யதை எவர்க்கும் அளவிட்டு நினைப்பதற்கு முடியாதென் றருளிச் செய்கிறார். ‘வெண்ணெயூணென்னு மீளச் சொல்லே’ என்றதனால் ஸௌலப்யகுணமும், மற்றவற்றால் பரந்த குணமும் குறிக்கப்பட்டனவென்க. ‘பரத்வத்தை ஒருவாறு எல்லைகண்டாலும் காணலாகும். ஸௌலப்யம் யார்க்கும் எல்லைகாண்பதரிது’ என்பது தோன்ற ‘நெஞ்சால் நினைப்பதரிதால் வெண்ணெயூணென்ன மீளச்சொல்லே’ எனறு நவீத சௌர்யவ்ருத்தாந்தம் ப்ரதாத விசேஷ்ய மாகத் தலைக்கட்டப்பட்டுள்ளதென்க.

‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்- நெஞ்சால் நினைப்பரிதால்’ என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு காண்மின்:- “ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளக்குங் கூட ஆச்ரயணீயனாய் அவரப்த ஸமஸ்தகாமனாயிருக்கிறவன், ஆச்ரிதஸ்பர்சமுள்ள த்ரவ்யமே எனக்கு தாரகமாய் அதுதான் நேர்கொடுநேர் கிட்டப்பெறாதே இப்படி களவு கண்டாகிலும் பூஜிக்க வேண்டி அதுதான் தலைக்கட்டப் பெறாதே வாயாது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு ப்ரதிக்ரியை யற்று உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்றநிலை சிலர்க்கு நிலமோ?” என்று.

‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பபரிதால்’ என்றதனால், எப்போதும் அவனுடன் ஒக்க இருப்பவரும் வரம்பிலா ஞானமுடையவரும் நிரந்தர பகவத்நுபவ சீலருமான நித்ய ஸூரிகளுக்கே இக்குணம் வரையறுத்து நினைக்க முடியாமை கூறின முகத்தால்,மற்றையோர்க்கு எட்டாத தன்மையைக் கைமுக ந்யாய ஸித்தமாக்கினபடி.

“துஞ்சா முனிவருமல்லாதாரும் எஞ்சாப்பிறவி யிடர்கடிவான் தொடரநின்ற தன் சார்விலாத தனிப்பெருமூர்த்திதன்” என்று இங்ஙனே அந்வயக்ரமாக்கி யுரைக்கவுமாம் துஞ்சா முனிவரும்- ஆத்மவிஷயத்திலும் ஈச்வா விஷயத்திலும் உணர்ச்சி நீங்காதஸநகாதி யோகிகளும் அல்லாதவரும்- அவர்கள் போலன்றி ப்ரஹ்ம பாவகையோடு கர்மபாவநையையுமுடைய ப்ரஹ்மாமுதலிய தேவர்களும். எஞ்சாப் பிறவி இடர்க கடிவன் – தம்தம் மாளாத பிறப்புத் துன்பத்தை ஒழிக்கும் பொருட்டு, தொடர- வழிபடும்படிநின்ற- தலைவனாய் நின்றவனும், தன்சார்வு இலாத- எல்லார்க்கும் தான் சார்பாக (சரண்யனாக) இருப்பதுபோலத் தான் ஒரு சார்பைத் தேடுதலில்லாதவனுமாகிய முழுமுதற்கடவுள் என்று பொருளையும் வுரைத்துக்கொள்ளலாம்.

இப்பாட்டைக் கிளவித்துறை வைகயில் நாயகனுடைய அருமையை நோக்கிக் கவலைப்படுகிற நாயகிக்கு தோழிகூறுதலாக கொள்ளலாம். நாயகனது பெருமேன்மையையே பாராட்டிப்***- தோழி நாகணைமிசை நம்பார், செல்வர் பெரியார் எளியளான என்னைக்  கைபற்றிக்கொண்டருள்வானோ? என்று மிகக் கவலைப்பட்ட தலைமகளை நோக்கி தோழி ‘அங்ஙனம் பெருமை படைதத்வனாயுள்ளவனுக்கு அன்பர் திறத்தில் எளியனாந்தன்மையும் ஒன்று இயல்பில் உள்ளதாதலால் அவன் உன்னை உரிமையாக்கிக் கொள்ளாதொழியான்’ என்று கூறி ஆற்றுவிக்கிறபடி போலும். ‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்’ என்றது-  தோழி தான் பற்றாசரகச் சொன்ன ªணுளலப்ப குணத்திற்கு ஒரு த்ருஷ்டாந்த மெடுத்துக் காட்டியபடி துஞ்சாப்பெருமூர்த்தி என்றவளவும் தலைவி தன்னுடைய அச்சததிற்கு உறுப்பான அநுஸந்தித்த பரத்வகுணத்தைத் தோழி அநுவாதம் செய்தபடி யென்க.

ஊண்- இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அன்று; ‘உண்ணப்படும் பொருள்’ என்கிற அர்த்தத்தில் செயல்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்ச்சொல் என்க. ஹீதமென்னும் வடசொல் ஈனமெனத் திரிந்தது.

 

English Translation

The sleepless Minis who overcome the pangs of repeated births, and all others, worship the lord without a peer or superior, who is the lord of celestials too.  But the wonder of his coming to steal butter is beyond their comprehension indeed!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top