(2576)
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே
பதவுரை
ஈனம் சொல் ஆயினும் ஆக |
– |
(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.; |
எறி திரை வையம் முற்றம் |
– |
வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும் |
எனத்து உரு ஆய் கிடந்த |
– |
வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த |
பிரான் |
– |
தலைவனும் |
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் |
– |
பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும் |
அல்லாதவர்க்கும் |
– |
அவர்களலல்லாத மனிதர்கட்கும் |
மற்றுஎல்லாயவர்க்கும் |
– |
மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும் |
ஞானம் |
– |
அறிவைக் கொடுக்கிற |
பிரானை அல்லால் |
– |
தலைவனுமாகிய எம்பெருமானையன்றி |
நான் கண்ட நல்லது இல்லை. |
– |
நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முன்பு பிரவாய வெள்ளத்தில் மூழ்கிப்போன பூமியை உத்தரணஞ் செய்து நிலைநிறுத்திய மஹோபகாரகனையே நான் ஸம்ஸாரப் பெருங்கடலினின்று என்னை வீடேற்றுதற்குத் தஞ்சமாக நினைத்திருப்பேனென்று ஆழ்வார் தம்முடைய திருவுள்ளவுறுதியை அன்பர்க்கு வெளியிடுகிறார்.
‘இப்போது நான் வெளியிடுகிற என்னுடைய ஸித்தாந்தம் அறம்பொருளின்பங்களையே தங்சமாக நினைத்து தேஹா«த்மாபிமாநங் கொண்டு பகவத் விஷயத்தில் விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் இகழும்படியான இழிந்த சொல்லாயினும் ஆகுக; என்னுடைய உறுதியை வெளியிட்டே தீரவேனென்கிறார் முந்துற முன்னம் ஈனச்சொல்லாயினுமாக என்றதனால். குழந்தை கிணற்றில் விழுந்தவாறே உடன் குதித்து அதனை யெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளங்கொண்டவாறே உடன் குதித்து அதனையெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளயங்கொண்டவாறே முழுகியெடுத்து மஹேபாகாரனையன்றி மற்றொருவனையும் அடைக்கலம் புகமாட்டேனெற்றாயிற்று.
ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷனை எம்பெருமான் மஹாவராஹ ரூபியாகத் திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பது எனத்துருவாய கதை. இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பரம்மபலபத்தைப் பற்றிய பிரளத்தின் இறதியில் பிரளயப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியைத் திருமால் மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹ ரூபங்கொண்டருளிக் கோட்டு நுனியாலே பூமியை எடுத்து வந்தனனென்றும் அதுபற்றி இக்கலபத்துக்கு வராஹகலபமென்றே பெயராயிற்றென்றும் புரானவரலாறு உண்டு.
எல்லாயவர்க்கு என்றதில் விலங்கு பறவை முதலிய பலவகைப் பிறப்புகளையும் அடக்குவர். அன்றியே, ‘அல்லாதவர்க்கும்’ என்பதற்கு எம்ªபேருமானை விட்டு பிரிந்து தரியாதபடியாகவுள்ள நித்ய ஸூரிகளுக்கும் என்றம் உரைத்தலுமுண்டு.
கிளவித்துறை வகையில் இப்பாட்டைத் தலைவன் பக்கலில் தனக்குள்ள அன்புறுதியைத்தலைவி தோழிக்குக் கூறுதலாகக் கொள்ளலாம். ஸர்வேச்வரனாகிய நாயகனை கலந்து பிரிந்த (பராங்குச) நாயகி, தான் அவன் விஷயத்திற்கொண்டா காதலின்***- காண்க. துறந்து தோழிக்கு எடுத்துக்கூறிய தென்க. இதுவும் தலைவி தோழிக்கு அறிந்தொடு நிறற்றலின்பாற்படும். தனது களவொழுக்கத்தைப் புலப்படுத்துதலால் உண்டாகும் பழி தூற்றுக்குத்தான் பயன்படாமை தோன்ற ‘ஈனச் சொல்லாயினுமாக’ என்றாள் என்று கொள்க.
‘எல்லாயவர்’ னஎபதில் ‘எல்லாம்’ – பகுதி; மகரம் கெட்டது; ய்- எழுத்துப் பேறு. அ- சாரியை; வ்- சந்தி; அர்- விகுதி.
ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீவராஹப்பெருமாளுக்கு ஞானப்பிரானென்று திருநாமம் வழங்கும்.
English Translation
To the celestials in the sky, the mortals on Earth and to all others, here is what I know and declare; Other than the lord of knowledge, the lord who came as a boar and lifted the Earth, there is no god, if these words be fowl, let them be.