(2577)

(2577)

நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்

வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த

சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்

பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே

 

பதவுரை

நல்லார்

நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்

நவில்

புகழ்ந்து கூறப்பெற்ற

குருகூர் நகரான்

திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.

திருமால்

லக்ஷ்மீபதியான எம்பெருமானது

திருபேர்

திருநாமங்களை

நல்லார்

பயின்றவரான அடியார்களுடைய

அடி

திருவடிகளாகிற

கண்ணி

பூமாலையை

சூடிய

தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான

மாறன்

நம்மாழ்வார்

விண்ணப்பம் செய்த

(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த

சொல் ஆர் தொடையல்

சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான

இ நூறும்

இந்த நூறு பாசுரங்களையும்

வல்லார்

கற்றுவல்லவர்கள்

பிறப்பு ஆம்

ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய

பொல்லா அருவினை

கொடியவையாய்போக்க முடியாதவையான ஊழ்வினைகளாகிற

மாயம் வல் சேறு அள்ளல்

கொடிய சேற்றின் அடர்த்தியையுடைய

பொய் நிலத்து

பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்

அழுந்தார்

அழுத்தமாட்டார்கள் (முக்கிராகப் பெறுபவர்கள் என்றவாறு.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பிரபந்தம் கற்றார் பெறும் யுரைத்து தலைக்கட்டுகிறது இப்பாசுரம் ஆகவே இது நூற்பயன். ஞான மனுட்டானமிவை நன்றாகவேயுடையரான ஆசார்யரைச் சரணமாக வடைந்து அவரது ஸம்பந்தமூலமாக எம்பெருமானை யநுபவிக்கிற மதுரகவிகள் போல்வாரான நல்லவர்களால் புகழ்ந்து கூறப்பெற்ற இக்குருகூரென்று ப்ரஸித்தமான திருநகரியில் திருவவதரித்துவரும் பகவதபாகவத விஷயத்தில் பக்தி மிகுந்தவருமான ஆழ்வராலே விண்ணப்பஞ் செய்யப்பட்டதாய், எம்பெருமானும் பிறரும் தலைமேற் கொண்டு ஆதரிக்கத் தக்க இனியபாமாலையாகிய இத்திவ்யப்பிரபந்தத்தைக் கற்று வல்லவர்கள் அரும்மொழியப்பிறப்பற்று முக்திபெறுவரென்று பயனுரைக்கப்பட்டதாயிற்று.

குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால்தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெருகாதல் உண்டாயிற்று என்பதாகத் தொணிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார் திருவலதரிக்கப்பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்லவேணுமோ?

திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம். முதற் பாசுரத்தில் ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று உபக்ரமித்ததற்கு ஏற்ப இங்கு மாறன் விண்ணப்பஞ்செய்த’ என்று உப்ஸம்ஹரிக்கப்பட்டமை காண்க.

இந்நூறும் என்ற விடத்து நம்பிள்ளையீடு காண்மின்:-“மஹாபாரதம்போலே பரந்திருந்தல், ப்ரவம்போல சுருங்கியிருந்தல் செய்யாதே நூறுபாட்டாய் ஜ்ஞாதவ்யாம்சமடைய உண்டாயிருக்கை.”  மஹாவிவேகிகளும் ஆழ்ந்தால் கால்வரங்கவொண்ணாதபடி முழுகுவிக்குந் தன்மையுடையதான ஸம்ஸாரத்தை மாய வன்சேற்றள்ளற் பொய்ந்நிலம்’ என்றது மிகப் பொருந்தும். பராத்பனான எம்பெருமானும் இதிலே வந்து பிறந்தால் அவனையும் மயங்கி யிழுக்கும் வன்சேற்றை.‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறமை அடியேன் செய்யும் விண்ணப்பம்’ என்று தொடங்கி விண்ணப்பஞ்செய்த இந்நூறும் வல்லார் அழுந்தார் பொய்நிலத்து’ என்று முடித்ததனால் இப்பிரபந்தம் முழுவதும் விரோதியைப் போக்கித்தரவேணுமென்று ஆழ்வார் தமது வருத்தத்தை (ஸம்ஸாரநிவ்ருத்தி. யபேக்ஷையை ) விண்ணப்பஞ் செய்தவாறாம்.

நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் இட்டருளின வியாக்கியானங்களில் ‘நல்லார் நவில்’ என்றதற்கு – லோகத்தி ஸத்துக்களடைய ஆழ்வாராழ்வார் என்னுமத்தனை’ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே  ‘நல்லார் நவில்’ னஎபது குருகூர்க்கு விசேஷணமன்றியே குருகூர் நகரான ஆழ்வார்க்கு விக்ஷேணமாய் கொள்ள்பபட்டதாகத் தெரிகின்றது. நல்லவர்களாலே புகழப்படட் நம்மாழ்வார் என்கை (திருமால் திருப்பேர்வல்லா ரடிக்கண்ணி சூடிய மாறன்’ என்று நைச்சியந்தோற்றப் பேசிக் கொள்ளுகிற ஆழ்வார் நம்மைப் பற்றி ‘நல்லார் நவில்’ என்று சிறப்பாக விஷேணமிட்டுக் கொள்வாரென்று சங்கிக்க இடமுண்டெனினும் ஆழ்வாருடைய ஒப்புயர்வற்ற பிரபாவத்தை (ஸத்துக்களால் அநவரதம் புகழ்ந்து கூறப்படுந்தன்மையை)க் கண்டறியும் ஆசரர்யர்கள் இங்ஙனே வியாக்கியானித்தல் பொருந்தத் தட்டில்லை ‘ஏற்கும் பெரும்புகழ் வண் குருகூர்ச்சடகோபன்’ என்று ஆழ்வார் தாமும் மெய்மறந்து அருளிச் செய்யும்படியாகயிறே ப்ரபாவந்தானிருப்பது

மாறன் = உண்டியே உடையே உகந்தோடு மூலகத்தாருடைய இயற்கைக்கு மாறுபட்டு (உண்ணுஞ் சோறு பருகுவீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லால் கண்ணன்” என்றிருந்ததனால் ஆழ்வார் மாறனென்று திருநாமம் பெற்றன் என்க

 

English Translation

The lord Tirumal is worshipped by good devotees in kurugur city.  This work of a hundred verses was sung by Maran satakopan who wears the feet of those who recite his names as a garland around his neck.  Those who master it will never get stuck in the mysterious quagmire of miserable births.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top