(2573)

(2573)

 

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்

பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ

றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்

இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.

 

பதவுரை

வணங்கும்

(தெய்வத்தை) வணங்குகிற

துறைகள் பலபல

வகைகள் பற்பலவற்றை

ஆக்கி

உண்டாக்கி

மதி விகற்பால்

அறிவின் வேறுபாட்டால்

பிணங்கும்

(ஒன்றொடொன்று) மாறுபடுகிற

சமைய் பலபல

மதங்கள் பலவற்றையும்

ஆக்கி

உண்டாக்கி

அவை அவை தோறு

அந்தந்த மதங்கள் தோறும்

அணகங்கும் பலபல

தெய்வங்கள் பற்பலவற்றையும்.

ஆக்கி

உண்டாக்கி

நின்மூர்த்தி

(இங்ஙனம்) உனது வடிவத்தைப் பரவச் செய்து வைத்துள்ளாய்

இணங்கும் நின்னோரை இல்லாய்

உன்னோடு இணைத்துச் சொல்லத்தக்க உன்போல்வார் எவரையு மில்லாதவனே!

நின் கண்

உன்னிடத்திலேயே

வேட்கை

பக்தியை

எழுவிப்பன்

வரைச்செய்வேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் எம்பெருமானை நோக்கி ‘ஒப்பற்ற பெருமானே! ஸர்வேச்வரனான நீ ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர் கருமகதியால் உன்பக்கல் வாராதொழியும்படி பலபல தெய்வங்களையும் பலபல மதக்கோட்பாடுகளையும் பலபல உபாஸ்னைவிதங்களையும் ஏற்படுத்தி அமைத்து வைத்தாய்; உன்னை நேதராக  அடைந்து உஜ்ஜீவிப்பதற்கு இடையூறான அவ்வெளி வழிகளிலே யான் இறங்கி விலகாதபடி அவற்றிற்கெல்லாம் மூலமான உது ஸ்யரூபத்தை யறிந்த உன்னிடத்திலே அன்பை மிகுதியாகச் செய்வதோடு பிறகும் அங்ஙனஞ்ª சய்யத் தூண்டுவேன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ் செய்கிறார். ஆழ்வார் எம்பெருமானது திருவுள்ளத்தின்படி உலகத்தைச் சீர்திருத்தி நல்வழிப்படுத்த அவதரித்தவராதலால் இங்ஙனம் தமது செய்கையைக் கூறுதல் தகும்.

வணங்குந் துறைகள் பலபல வாக்கி= கர்மயோகமென்றும் ஜ்ஞாநயோகமென்றும் பக்தியோகமென்றும் இப்படி பலவகைப்பட்ட உபாயங்களைக் காட்டிவைத்து என்றபடி. மதிவிகற்பில் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி= 1. ‘ஓன்றே பொருளெனின் வேறென்ப்வேறெனின் அன்றென்ப ஆறுசமயபத்தார்” என்றாற்போல, ஆம் என்பதை அல்ல என்பதும் அல்ல என்பதை ஆம் என்பதுமான சமயச் சண்டைகள் மதிவிகற்பால் பிணங்குதலாம். இப்படி பிணங்குகின்ற மதங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தவன் எம்பெருமானேயிறே. அவையவைதோறு வணங்கும் பலவாக்கி = ஒவ்வொரு மதத்திலும் அம்மனென்றும் பிடாரி என்றும் சாத்தனென்றும் கூற்றனென்றும் பலவகைப்பட்ட தெய்வங்களை ஆராதனைக்கு உரியனவாக நாட்டி என்றபடி, நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்- அனைத்துக்கும் எம் பெருமானே அந்தராத்மாவாய் அவையெல்லாம் எம்பெருமானுடைய சரீரங்களாயுண்ளள்ளனவாதலால்  இங்ஙனஞ் சொல்லப்பட்டது.

இணங்கு நின்னோரையில்லாய் = இங்ஙனே ஜகத்துக்களை நிர்வஹிக்க உன்னாவல்லது வேறொருவரால் முடியுமோ? சக்தியில் ஒப்பற்றவனன்றோ நீ என்றவாறு. (நின்கண்வேட்கை யெழுப்பனே) வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்; மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்; அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.

இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் கொள்ள வேண்டில், தலைவி வெறிவிலக்குவிக்க நினைத்தல் இதற்கு துறையாம். எம்பெருமானாகிற நாயகனைக் களவொழுக்கத்தாற் கூடி அவனது விரஹத்தில் வருந்தி மெலிகிற (பாசாங்குச ) நாயகி, தன் மெலிவைக்கண்டு கவலைப்பட்ட செவிலித்தாய் கட்டுவிச்சிக்குக் கூறி அவளைக் கொண்டு அவள் மரபின்படி கட்டுவைப்பித்து நோக்குகையில் முருகக்கடவுள் தோன்றக்கண்டு அதற்கு பரிஹாரமாக ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் நிமித்தமாக கொண்ட தன்« நாய் சிறு தெய்வம் பாராட்டலாகிய இவ் வெறியாடடினால் தீருமாயின் தனது கற்புக்குக் குறைவாதலையும் தீராதமாயின் ஊரலர் மிகுதலையுங் கருதி, கான நாணந்துறந்தாயினும் ரஹஸ்யத்தை வெளியிட்டு வெறிவிலக்குவிக்கத் துணிந்து பாவநப்ரகர்ஷத்தாலே தலைவனை முன்னிலையாகக் கொண்டு தன்னிலே தான் உரைத்தது இது 2. “குலமகட்குத் தெய்வம் கொகுகனே” என்றபடி கற்புச்சிறந்த இத்தலைவி தன் தலைவனையே சிறந்த தெய்வமாகவுடையவளாதலால் மற்றைய தெய்வங்களை யெல்லாம் அத் தெய்வத்தின் வடிவங்களாகவே கருதி கூறுகின்றாள். வணங்குந் துறைகள் பலபல= கட்டுவைத்தல்,வெறியாடுதல், ஆடுபலி கொடுத்தல், கள்ளும் இறைச்சியும் தூவுதல் முதலியன. அயலார்க்கு இக்களவொழுக்கம் தெரியவொண்ணாதபடி கட்டுவிச்சியின் நெற்குறியில் முருகக் கடவுளைக் காட்டியவனும்,வேலன் வழிபாட்டுக்கு வழிமுறையால் உரியனாகுகிறவனும் முதற்பெருந் தெய்வமாகிய நீயேயாயினும் அத்தெய்வத்தினால் என் நோய் சிதைக்கப்படுதல் முழுமுதற் கடவுளாகிய ஒப்பற்ற உன்னை நேரில் தலைவனாகக் கொண்ட எனது கற்பிற்குக் குறைவாதலின் யான் அதனை உடன்படேன் என்றவாறு.

1. திருவள்ளுவமாலை 9.   2. நீதி நெறிவிளக்கம் 26.

 

English Translation

O Lord without a peer! You made all these many modes of worship.  You made all these conflicting schools of thought, and in each one of them you made all these many gods; and in all of them, you spread your peerless form. My heart swells with lover for you!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top