(2572)

(2572)

யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்

மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால்

யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்

மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.

 

பதவுரை

உயிர்

உயிரானது

முன்னமே

நெடுநாளாகவே

மூது ஆவியில்

பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்

யாது ஆனும் ஓர் ஆக்கையில்

யாதாயினும் ஒரு சரீரத்தில்

புக்கு

பிரவேசித்து

அங்கு அவ்வுடம்பில்

ஆம்புண்டும்

கட்டுப்பட்டு நின்றும்

ஆப்பு அவிந்தும்

(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும்

தடுமாறும்

நிலைமாறி அலையும் தன்மையுடையது ;

அதனால்

ஆதலால்

யாது ஆனும் பற்றி

எந்த விதத்தினாலாவது

நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்

(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

மாதாவினை

தாய் போன்றவனும்

பிதுவை

தந்தை போன்றவனுமான

திருமாலை

ஸ்ரீமந்நாராயணனை

வணங்குவேன்

கரணமடைந்திருப்பேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒன்றன்பின் ஒன்றாக அநாதியாய் வருகிற சரீர ஸம்பந்தங்கள் காரணமாக- கழித்திடாமல் என்னை அங்கீகரித்தருள வேணுமென்று அடியேன் ஸகலவித பந்துவும் ஆபத்பந்துவுமான எம்பெருமானைச் சரணமடைந்திருப்பேனென்று தமது ப்ரபந்திமார்க்கா நுஷ்டாக வுறுதிநிலையை ஆழ்வார் இப்பாட்டால் வெளியிடுகிறார்.

ஆத்மாவானது அநாதிகாலமாகவே ஊழ்வினைக்கு ஏற்ப யாதாயினும் ஒரு டம்பினுட்புகுந்து அதில் விளைவிலங்காற் கட்டுப்பட்டிருக்கும் அவ்வுடம்பின் தொடர்ச்சி நீங்கியும்  ஸூக்ஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாதங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்;  இப்படி ஆத்மாவுக்கு சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்; இப்படி ஆத்மாவுக்குச் சரீர ஸம்பந்தம் அநாதியாயிருத்தலால் ப்ராசீக கர்மவாஸநா வசத்தான் ஏதேனுமொரு பொருளினிடத்துப் பற்றச் செய்து எம்பெருமானை விட்டு விலகும்படியான கோட்பாட்டை முற்றும் வேரோடு அற நன்றாக விடுவித்துத் தன்னையே பற்றியிருக்குமாறு செய்விக்கவல்லவனாய், ப்ரியங்களை நடத்துவதில் தாய்போன்றவனாய், ஹிதங்களை நடத்துவதில் தந்தை போன்றவனாய்த் திருமகள் கணவனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்திருப்பேனென்கிறார். அநாதியாய் வருகிற ஸம்ஸாரத்திலே பற்றில்லையாம்படி சரணமடைந்தாருடைய வினைகளைப் போக்குவிக்கவல்ல எம்பிரானை யான் வணங்குவேனென்றாராயிற்று.

ஆத்மாவுக்கு தேஹஸம்பந்தமானது கரும வசத்தினாலாகிய செயற்கையேயன்றி இயற்கையன்று என்பது தோன்ற ‘யாதானு மோராக்கையில் புக்கு” எனப்பட்டது. அங்கு ஆப்புண்ணுத லாவது- ஒவ்வொரு பிறப்பிலும் அஹங்கார மமகாரங்களாகிய அபிமானங்களை விடாமலிருப்பதாம். (மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே) ஆத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தமும் அநாதி, எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமும் அகாதி என்பது ஓர் கொள்கை, இருந்தாலும் ஆத்மாவுக்கு அசிம்ஸம்பந்தத்தைவிட நாராயண ஸம்பந்தமே மிகப் பழையதென்னுமிடம் ஆழ்வாருளிச் செய்த ஆழ்வார்தாமே திருவாய்மொழியில் ‘சோர்ந்தே புகல்கொடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ என்றருளிச் செய்கிறார்; அசித் ஸம்பந்தத்தின் அநாதித்வத்தைத் தெரிவிக்கிற அப்பாசுரத்தில் ‘முதல் முன்னமே’ என்றதையும் குறிக்கொள்க. ‘எதந்நிமித்தம் முன்னமே முதலமுன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியும் ஸ்மரிப்பது.

‘யாக்கை’ ‘யாப்பு’ என்றுஞ் சொற்கள் ‘ஆக்கை’ ‘ஆப்பு’ என மருவி வந்துள்ளன. யாக்கையென்பதற்கு- (உயிரைக்) கட்டுப்படுத்துவதென்று காரணப்பொருள். முதுமை+ ஆவி,மூதாவி,  ஆவியென்பது தாளியாகு பெயராய் உடம்பையுணர்த்திற்று. உயிர் ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொரு ஸ்தூல சரீரத்திற் சாரும் பொழுதும் ஸ்வர்க்க நகரங்களுக்குச் செல்லும் பொழுதும் ஸூக்ஷ்ம சரீரம் முக்தி நிலையிலே உயிரை விட்டகலும். ஆத்மாவின் ஸ்தானத்தில் அரிசியையும், ஸ்தூல சரீரத்தின் ஸ்தானத்தில் உமியையும் ஸூக்ஷ்ம சரீரத்தின் ஸ்தானத்தில் தவிட்டையும் கொள்க. அரிசியை விட்டு உமி நீங்குவது இரண்டு உலக்கைளினால் குத்துப்பட்டாதலால். அதுபோல ஜ்ஞாநாநுஷ்டநகங்களால் ஸ்தூல சரீரம் நீங்கும்; தவிடு நீங்குவது தண்ணீரில் கழுவப்பட்டாதலால், அதுபோல விரஜாநதீஸ்நாநத்தால் ஸூக்ஷமவொட்டு நீங்குமென்று விவேதித்துக்ª காள்க.

இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் சொல்ல வேண்டில், தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் இது. திருமாலாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற (பராங்குச நாயகியாகிய) தலைமகள் ‘இனி என்னுயிர் தரித்து நில்லாதாதலால் யான் விரைவில் இறந்து படுவேன்; அங்ஙனம் இறந்தொழிந்தேனாயினும் மறுபிறப்பில் இத் தலைவனையே கூடத் தோற்றத்து எழுவகைப் பிறப்பேன் என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள் உள்ளனவாதலால் அவற்றில் யான் மானிடமகளாகவே மீண்டும் பிறக்கிறேனென்பது என்ன நிச்சயம்? ஆதலின் இப்பிறப்பிலேயே இத்தலைவனைப் பிரியாது கூடுமாறு என்னுயிர் இவ்வுடம்பை விட்டு நீங்கு முன்னமே யான் விரைந்து முயல்வேனாவேன்; அதாவது நான் நாணத்தை விட்டு உடனே என் கருத்தைத் தோழிக்கு வெளிப்படையாகச் சொல்லி அவள் மூலமாக நற்றாய்க்கும் அவள் மூலமாக தந்தைக்கும் அதனை வெளிப்படுதுதி அவர்கள் எவ்வாறாயினும் இவனையே எனக்கு விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்து கொள்ளுவேன்: அன்றியும் தோழிமூலமாகத் தலைமகனுக்கு எனது வருத்த மிகுதியைக் கூறி அவன் விரைவில் என்னை வரைந்து கொள்ளுமாறுஞ் செய்வேன் என்று பலவாறு ஆராய்ந்து தோழிக்குத் தன் அறத்தொடு நிற்கத் துணிந்தது இது எனக்கொள்க.

உயிரானது பழமையான பலவகைப் பிறப்புகளுள் யாதாயினும் ஒரு சரீரத்தில் பிரவேகித்து அவ்வுடம்பில் கட்டுப்பட்டு நின்றும் அங்கு நின்ற தொடர்ச்சி நீங்கியும் நிலைமாறி அலையுந்தன்மையுடையது; ஆதலால் எனது உயிர் இவ்வுடலை விட்டு நீங்குதற்கு முன்பகாவே எந்த விதத்தினாலாவது தலைமகன் னஎனைப் பிரிதலாகயி தவறா வொழுக்கத்தை நன்கு விடுவித்தற்கு (நாயகனை என்னோடு கூட்டுதற்கு) ஏற்ற தாயையும் தந்தையையும் திருமாலாகிய எனது அத் தலைவனையும் வணங்கி வேண்டிக் கொள்வேன் என்று பதப்பொருள் காண்க.

நீங்கும் விரதத்தை நல்வீடு செய்தலாவது- பிரிவு இல்லாமல் வெளிப்படையாகக் கூடியிருக்கும்படி மணஞ்செய்வித்தல் களவு வழியான புணர்ச்சியில் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடர்தலைப்பாடு, பங்கியிற் கூட்டம், பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல்,வரைபொருட் பிரிதல் என்ற ஒவ்வொரு வகையிலும் தவறாமற் பிரிவு நேர்தலால் அதனை ‘விரதம்’ என்னும் வடசொல் விரதமென்று கிடக்கிறது தவறாமல் ஏற்றுக்கொண்டு ஒழுகும் ஒழுக்கம் விரதமெனப்படும்.

“யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்’ என்றதில் ‘யாதானும் பற்றி’ என்பது ‘வீடு செய்யும்’ என்பதில் அந்வயிக்கும்; ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு என்னை நாயகனோடு மணம்புரிக்கவல்ல மாதாவினைப்பிதுவை என்றவாறு. ஒருவனைத் தம் மகளுக்கு மணஞ்செய்விப்பதற்கு அவனது கல்வி, செல்வம், குலம், ஒழுக்கம், அன்பு, வேண்டுகோள், ஆபரணங்கொடுத்தல் முதலாகப் பல காரணங்களுக்குள்ளனவாதலால் அவற்றுள் பொருத்தமான ஏதேனுமொரு காரணத்தைக் கொண்டு விவாஹஞ் செய்து வைக்க வேண்டுமென விரும்பியவாறு.

இனி ‘யாதாலும் பற்றி’ என்பதை ‘நீங்கும்’ என்பதிலும் அந்வயிக்கலாம். தலைவன் தலைவியை விட்டு நீங்குவதற்குப் பல காரணங்களுண்டு; பிறர் அறிந்துவிடுவார்களே யென்கிற பயம், ஊரவர் பழி தூற்றல், விவாஹத்துக்கு வேண்டிய பொருளீட்டி வருதல் முதலிய விச்ரேஷ காணங்கள் பலவற்றுள் ஏதேனுமொரு காரணம்பற்றி நீங்குகிற என்றவாறு.

 

English Translation

Seeing every soul fall and flounder through repeated cycles of birth and death in various bodies, the lord Tirumal-benevolent as mother and father, -comes to our rescue and frees us before we get stuck in needless despair, I worship him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top