(2608)
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.
பதவுரை
|
தானே தனி தோன்றல் |
– |
அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்; |
|
தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான் |
– |
அவனே ஒப்பற்றவன்; |
|
இளைக்கில் |
– |
(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில் |
|
பார் |
– |
இவ்வுலகமானது |
|
கீழ்மேல் ஆம் |
– |
தலைகீழாக விபரீதமாய்வீடும்; |
|
பிறர் தானே கட்கும் தற்றேன்றல் |
– |
அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்; |
|
(தானே) |
– |
இப்படிப்பட்ட எம்பெருமான்றானே |
|
மீண்டு அமைப்பான் ஆனால |
– |
(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால் |
|
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார் |
– |
இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்? |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (தானே தனித்தோன்றல்.) “தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில். அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க, அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலைநாட்டிப் பேசுகிறாரிதில்.
தானே தனித்தோன்றல் என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம்; தோன்றல் என்று ஆண்மகனையும் அரசனையும் பெருமையிற் சிறந்தவனையும் சொல்லும்; அவ்வெம்பெருமானொருவனை புருஷோத்தமன்; அவனே உலகங்கட்கெல்லாம் இறைவன்; அவனே பெருமையிற் சிறந்தவன். இனி, தோன்றல் என்று வெளிப்படுதலுக்கும் பேராகையாலே, அவன் மற்றவர்களைப்போலே சருமங்களால் பிற்பவனல்லன்; தன்னருளால் தானே தோன்றுதலையுடையவன் என்று முரைக்கலாம். ***= அஜாயமாநோ பஹுநா விஜாயதே; தஸ்ய தீரா பரிஜாநந்தியோநிம்” என்று வேதம் கூறும். இதன் பொருள்:- எம்பெருமான் பிறப்பு இல்லாதவனாயினும் பல பிறவிகள் பிறக்கிறான்; அப்படி அவன் பிறப்பதற்குக்காரணம் இன்னதென்பதை ஞானிகள் அறிவர் என்பதாம். இனி, தானே தனிந்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய, வேறொரு காரணங் கொண்டு ஸேவைஸாதிப்பவனல்லன் என்பதாகவுங் கருத்துரைக்கலாம்.
தன் அளப்பு ஒன்றில்லாததான் = தனக்கு வேறொருவரையும் ஒப்பாக உடைத்தாகாதவன். “ஒருவரையொருவர் நின்னொரப்பாரொப்பிலாவென்னப்பா வென்கின்றளால்” (பெரிய திருமொழி, 8-1-2) என்றது காண்க. உலகமுழுவதும் இவனாலே படைக்கப்பட்டு இவனாலே காக்கப்பட்டு இவனாலே அழிக்கப்படுதலால், இவனோடு உபமானமாகப் போருவதற்கு யாருளர்?
தானே பிறர்கட்கும் தற்றோன்றல் = எந்த வஸ்துவிலும் *வன் அநுப்ரவேசித்திருப்பவன்; அவனில்லாமல் ஒரு துரும்பும் எழுந்தாடாதாகையால் எல்லாப் பொருட்கட்கும் தான் அந்தர்யாமியாயிருந்து அவற்றின் ஸத்தையை நோக்குமவன் என்கை. கருதரிய யுயிர்க்குயிராய்க் கரந்தெங்கம் பரந்துறையுமொரு தனி நாயகம்” (திருவரங்கக கலம்பகம், 1) என்றபடி.
தானே இளைக்கில் பார்கீர்மேலாம் = இப்படி தனி நாயகனாய் நின்ற எம்பெருமான் தான் ரக்ஷிக்குந் தொழிலில் சோம்பிக் கைவாங்கி நிற்பனாகில் இவ்வுலகம் முழுவதும் அநாதமாய்த் தலைகீழாக விகாரப்பட்டுவிடும். அமைப்பானானால் பாரின்மேல் அளக்கிற்பார் ஆர் = அவரவர்களை அந்தந்த நிலைமைகளிலே நிறுத்திக் காப்பாற்றுதல். இது செய்வதற்கு எம்பெருமானே சக்தன்; அவன் இப்படி நியமித்து ரக்ஷிக்குமாகில் அந்த ரக்ஷகத்வத்தை எல்லைகாணக் கூடியவர்கள் இவ்வுலகில் அருளர்? அவனுடைய ரக்ஷண ஸாமர்த்தியம் இப்படிப்பட்டதென்று பரிச்சேதித்தறிவதற்கே இங்கு ஆளில்லை யென்னும்போது, வேறு ரக்ஷகரில்லையென்பது சொல்லவும் வேணுமோ? என்று கருத்து.
மூன்றாமடியில் “பார் கீழ் மேலாமீண்டமைப்பானானால்” என்றவிடத்து, மீண்டு எனப் பிரிப்பதிற்காட்டிலும் ஈண்டு எனப்பிரித்தல் மோனையின்பத்திற்குச் சேர்ந்திருக்கும். ஈண்டு – இவ்வண்ணம், இவ்விடம், சீக்கிரம், மீண்டு என்று பிரித்தலின் பொருட்சுவையிருப்பதுகொண்டு பெரியவாச்சான்பிள்ளை மீண்டெனப் பிரித்தெடுத்துரைத்தருளினர் பார் கீழ்மேலான நிலைமையின் நின்றும் மீட்டு அமைப்பானாகில் என்கை…
English Translation
The Lord is self-made, without a peer or superior. Even his qualities that others ocquire are by his grace. When he wills it, the world goes awry. but he sets it right too. Now who can measure his glory?
