(2532)
வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே?
பதவுரை
| வண்டுகளோ |
– |
வண்டுகளே! |
| வம்மின் |
– |
வாருங்கள்; |
| நீர் பூ |
– |
நீரிலுண்டாகிற பூவும் |
| நிலம் பூ |
– |
நிலத்திலுண்டாகிற பூவும் |
| மரத்தின் ஒண்பூ |
– |
மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும் |
| உண்டு |
– |
(தேனைக்) குடித்து |
| களித்து |
– |
களிப்படைந்து |
| உழல்வீர்க்கு |
– |
(எங்கும்) திரிகிற உங்களுக்கு |
| ஒன்று உரைக்கியம் |
– |
(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம். |
| ஏனம் ஒன்று ஆய் |
– |
ஒப்பற்ற வொரு வராஹமூர்த்தியாய் |
| நண் துகள் ஆடி |
– |
பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய |
| வைகுந்தம் |
– |
பரமபதத்தை |
| அன்னாள் |
– |
ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய |
| குழல்வாய் |
– |
கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள |
| விரைபோல் |
– |
பரிமளம்போல |
| விண்டு |
– |
மலர்ந்து மணம் வீசி |
| கள் வாரும் |
– |
தேன் பெருகப்பெற்ற |
| மலர் |
– |
பூக்கள் |
| தும் வியல் இடத்து |
– |
உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே |
| உளவோ |
– |
இருக்கின்றனவோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டுக்குத் துறை நலம்பாராட்டு என்பதாம். நாயகனானவன் நாயகியினித்தில் தான் வைத்துள்ள காதலை ஒருவாறு வெளியிட வேண்டி அவளது சிறப்பை அந்நாயபதேசமாகப் புகழ்ந்துரைத்தல் இது. ஒரு பூந்தோட்டத்தில் ஒருபுறமாய் நாயகி நிற்கையில் அவளை அணுகிச் செல்லுதற்குக் கூசாநின்ற நாயகன் ‘இவள் திறத்தில் நமக்குள்ள காதலை ஒருவாறு இவளுக்கு நாம் உணர்த்துவோம்; பிறகு என்னாகிறதோ பார்ப்போம்!’ என்றெண்ணி அங்குப் பலவகைப் பூக்ககளிலும் வாய் வைத்துக் களித்துத் திரிகின்ற வண்டுகளை விளித்து ‘நீங்கள் எவவிடத்துஞ்சென்று நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ என்றிப்படி, வெவ்வேறு வகைப்பட்ட பூக்களைக் கண்டறிவீர்களன்றோ? அவற்றில் எவையேனும் இளது கூந்தலின் இயற்கை நறுமணத்தை யொத்த மணமுடையவை உண்டோ? சொல்லுங்கள்’ என்று தனது “மருங்குழலுங் களி வண்டினங்கா ளுரையீர் மடந்தை, கருங்குழல் நாறுமென்போதுடைத்தோ நுங் கடிபொழிலே” என்றும், “மருங்குழல்வாய் நீயறி திவண்டே சொல்லெனக்கு மங்கை, கருங்குழல் போலுளவோ விரைநாறு கடிமலே” னஎறுமுள்ள பிறருடைய செய்யுட்களும் இப்பாசுரத்தை அடியொற்றியுள்ளன.
பூவின் வாசியும் மணத்தின் வாசியும், தேனின் வாசியும் அறியும் நீங்கள் புறம்புண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு, நான் சொல்லுகிற வார்த்தை கேட்கும்படி வாருங்கள் என்று அழைக்கின்ற வண்டுகளோ வம்மின் என்று. கோட்டுப்பூ கொடிப்பூ நாப்பூ நிலப்பூ என்று நாவல்வகையில் கொடிப்பூ நிலப்பூவில் அடக்கப்பட்டது. புதற்பூ என்பதும் இதில் அடங்கும். மஹாவராஹ மூர்த்தியாகிப் பூமியைக் கோட்டாற்குத்தியெடுத்து வந்தது என்னமொன்றாய் மண் துகளாடி’ என்றதனால் சொல்லப்பட்டது. இதில் அதந் பொய்ப் பற்றி வடிவத்துக்குப் பெரிய பூமி முழுவதும் ஒரு துகளாயின்மை தோன்றும்; “பன்றியாய்ப் படியெடுத்த பாழியர் யென்பரது, வென்றியா ருனதெயிற்றின் மென்துகள் போன்றிருந்தால்”பூங்கார் பாசுரங்காண்க, வைகுந்த மன்னாள் என்றது. இங்கே அழியாது நலமுடையவடி குழல்வாய் விரை¬ = புஷ்பம் முதலிவற்றாலே வந்தேறியான பரிமளமன்றியே புகழான குழலின் பரிமளம். உத்தமசாதி மகளிரின் கூந்தலுக்கு இயற்கை நறுமணமுண்டென்ப.
வண்டுகளோ = ஓகாரம்மிக்கது விளியுருபு; ஓ வண்டுகள் எனமாறினுமாம். வம்மின் என்பதன் ஏவற்பன்மை. துகளாடி = வினைசெய்யமன்று; பெயர்ச் சொல். ‘குழல்வாய் என்பதற்கு குழலிடத்துள்ள பரிமளம் என்றுபொருள் கொண்டால், வாய்- எழ ’ அன்றி. குழலில் வாய்ந்த விரை’ என்றுரைத்தால், வாய்- வினைத்தொகை. விண்டு = பிறவினை யிரண்டுக்கும்பொது; ‘பிளந்து’ என்பதுபோல. வியல் – பரப்பு. உணர்த்த சொல். ‘வியலென்’ கிளவி அகலப்பொருட்டே” என்பது தொல்காப்பியம்.
எம்பெருமான் திறத்தில் ஆழ்வார்க்கு அளவு கடந்து உண்டான பக்தியின் தலைமையைக் கண்ட பாகவதர் கொண்டாடிக் கூறும் வார்த்தை இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாம். பரம்பொருளை நாடித்திரிபவரான ஸாரக்ராஹிகளை ‘வண்டுகளோ வம்மின்’ என முன்னிலைப்படுத்தினது. (நீர்ப்பூ நிலப்பூ மாத்திலொண்பூவுண்டு களித்துழல் ஒன்றுரைக்கியம்) ‘நீர்ப்பூ’ என்றதனால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள வ்யூஹ மூர்த்தியை நினைத்தபடி; ‘நிலப்பூ’ என்றதனால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள வ்யூஹமூர்த்தியை நினைத்தபடி; ‘மரத்திலொண்பூ’ என்றதனால் வேதசாகைகளின் முடியிலே என்கிற தேஜோரூபியான பரமபதநாதனை நினைத்தபடி. ஆக இப்படிப்பட்ட பகவந்தன் விளக்கத்தை இடையறாது அநுபவித்து ஆநந்தித்து எவ்வுலகிலும் தடையின்றித் தங்களுக்கு ஒன்ற சொல்லுகிறோம். பிரளயகாலத்தில் பூமியின் ஆபத்தைத் தீர்த்தவனது அழிவற்ற வைகுந்து நாடுபோலப் பேராநந்தம் தருபவரான இவ்வாழ்வாரது சிரோபூஷணமாகவுள்ள பக்திமிகுதியின் புகழ்போல நீங்கள் எங்கேனும் கண்டதுண்டோ கொண்டாடி யுரைத்தனரென்க…
English Translation
O Bumble bees! You have tasted the nectar of water-borne flowers, Earth-borne flowers and sky-borne flowers of trees. We have something to ask you. The lord came as a boar and bathed in the dust of the Earth. Sweet as his Vaikunta is this dame, whose coiffure bears flowers that spill fragrant nectar. Have you seen such excellence anywhere else?
