(2531)
வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!
பதவுரை
| நெய் |
– |
(திருவாய்ப்பாடியிலே) நெய்யை |
| தொடு உண்டு |
– |
கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து |
| ஏசும்படி |
– |
(பலரும்) பரிஹஸிக்கும்படி |
| அன்ன செய்யும் |
– |
(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய |
| எம் ஈசர் |
– |
எமது தலைவரும் |
| விண்ணோர் பிரானார் |
– |
(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய |
| மாசு இல் மலர் அடி கீழ் |
– |
குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ் |
| எம்மை சேர்விக்கும் |
– |
எம்மை அடைவிக்கவல்ல |
| வண்டுகளே |
– |
ஓ வண்டுகளே! (நீங்கள்) |
| வீசும் சிறகால் பறத்திரி |
– |
வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்லவல்வீர்; |
| விண் நாடும் துங்கட்டு எளிது |
– |
(அவர் வீற்றிருக்கு மிடமான பரமபதமும் உங்களுக்குச் செல்ல) எளிது; |
|
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது) |
||
|
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போகவேணும். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாசுரம் வண்டு விடு தூது பிரிந்து போன நாயகன் வந்திடுவனென்று அறியிருதாக வொண்ணாதே அவன் வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று ஆற்றாமைமிகுதி; ஆகவே ஏழைகளைத் தூதாக நாயகனான ஸர்வேச்வரன் பக்கலிலே போகவிடுகிற நாயகியின் பாரையாய்ச் செல்லுகிறது. எம்பெருமானது திருவடித்தாமரைகளின் கீழ் எம்மை அடைவிக்கவல்ல வண்டுகளே! நீங்களோ விரைந்து செல்லத்தக்க கருவியையுடையவர்களாயிருகின்றீர். நானோ அப்படிப்பட்ட வலிமையில்லாத மெல்லியலாய் இட்டகாலிட்ட நையனாயிருக்கும் தன்மையையுடையேன்; எம் காதலர் வீற்றிருக்கிற பரமபதமும் உங்களுக்கு எட்டிப் பிடிக்கலாம்படி யிராநின்றது; எனக்கோ அது சென்று சேர்தற்கு அரிதாயிருக்கின்றது. நீங்கள் தூது செல்லுதற்குப் புறப்படும்பொழுது, எனக்காக நீங்கள் அவரிடம் சொல்ல நினைத்திருக்கும் வார்த்தைகளை என் பக்கலிற் சொல்லிக் காட்டியும் போகவேணும் என்றால். அங்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகளை இங்குத் தன்பக்கல் சொல்லி காட்டுமாறு வேண்டியதனால், நீங்கள் அதற்குப் பேசும் பேச்சுக்களை இங்கு என்முன் சொன்னால் அப்பேச்சுக்களில் ஏதேனுங் குறைவு உண்டாகில் அதனை யான் திருத்தித் தருதலுமின்றி உங்கள் பேச்சின் சாதுர்யத்தினால் அவர் விரைவில் வந்திடுவரென்னுந் துணிகவ யடைந்து அதுவரை ஆறியிருப்பேனென்பதை வெளியிட்டாளாயிற்று.
‘பறந்தீர்’ என்னும் வினைமுற்ற எதிர்கால முணைர்ந்தவல்லதாயினும் இங்கு எதிர்கால முணர்த்தாது தன்மையுணர்த்திற்கு. போவது = ஒருவகை வியங்கோள்.
‘தேவாதி தேவனான எம்பெருமான் பக்கலிலே வெகு அற்பங்களான நாங்கள் சென்று கிட்டுதல் அருமையன்றோ’ என்று வண்டுகள் பின்வாங்காமைக்காக ‘நெய்தொடுவுண்டேசும்படி யன்ன செய்யும்’ என்று அவனது ஸெளலப்பத்தை முற்பட எடுத்துக்காட்டுகின்றாள். நெய்யைச்சொன்னது- மற்றுமுள்ள பால் தயிர் வெண்ணெய் விழுங்கி வெறுக்கலததை வெற்பிடையிட்டதனோசை கேட்கும்’ இல்லம் புகுந்தென் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றுங் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து, நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே’ இத்யாதிகளிற் சொல்லப்பட்ட ஏச்சுக்குரிய காரியங்களை உட்கொண்டு.
‘எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே’ என்றது- எம்மைச் சேர்விக்கவல்ல; சக்தியுள்ளது உங்களுக்கேயென்று புகழ்ந்துரைத்தவாறு.
ஆழ்வார் தம்முடைய ஆற்றாமையை ஆசார்யர் மூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமது துயரம் தணியக் கருதி அவர்களை புருஷகாரமாக வேண்டுதல் இப்பாட்டின் ஸவாபதேசார்த்தமாகும். (விசுஞ்சிறகால் பறக்கதிர்) “உபாப்பா மேவ பக்ஷாப்பாம் யதா கேபக்ஷிணாம் கதி:- ததைவஜ்ஞாந கர்மப்பாம்” என்று ஞானனுட்டான மிரண்டும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன; பறவைகளின் உயர்கதிக்குச் சிறகுகள் இன்றியமையாதவை போல வகை மலர்களிலுஞ் சென்று அவற்றின் ஸாரமான தேனை அம்மலர்கள் கெடாதபடி கவர்ந்து உண்ணுந்த தன்மையனவான வண்டுகளை, பலவகை நூல்களிலும் அவகாஹித்து அவற்றின் ஸாரமான தத்துவப்பொருளை அந்நூல்கள் கலிவுபடாதபடி க்ரஹித்து அநுபவிக்குந் தன்மையரான ஆசார்யரானகச் சொல்லத் தட்டில்லை.
புருஷகார பூதராயிருந்து எம்பெருமான் பக்கலிலே என்னைச் சேர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த ஆசார்யார்களே! நீங்கள் ஞானலுட்டானங்களால் குறைபற்றிருக்கின்றீர்கள். (விண்ணாடும் நுங்கட்க்கு எளிது) (உபதேசரத்தினமாலை) “ஞானமனுட்டான மிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்ததால்- மாநிலத்தீர்,தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்று ஆராயப்பட்ட ஆசார்யனை யடிபணிந்த சிஷ்யனுக்கும் பரமபதம் எளிதாகும்போது ஆசராயனுக்குச் சொல்லவேணுமோ? அப்பரமபதமும் உங்களுக்குக் கைவசமாகவுள்ளதென்கை. பேசும்படி அன்ன பேசியும் போவது) அப்படிப்பட்ட நீங்கள் எனக்காக அப்பெருமானிடஞ் சென்று விண்ணப்பஞ் செய்யும வார்த்தைகளை இப்பொழுது எனக்கு சொல்லிப் போகவேணும்; என்றது. அவற்றைக் கேட்டாகிலும் அடியேன் ஆறி யிருப்பேன் என்றவாறு. இவ்வாழ்வார் “மத்துறுகடை வெண்ணெய்களவினி லூலிமையாப்புண்டு. எத்திறமுரலினோடிணைந்திருந்து ஏங்கிய எளிவே!” என்று கண்ணனது களவில் ஈடுபட்டு ஆறுமாஸகாலம் மோஹித்துக் கிடக்குந்தன்மையாகதலால் இங்கும் நெய்கொடுவுண்டேசும்படி அன்ன செய்யுமெம்மீசர்” என்று அந்த ஸொலப்ப குணத்தையே பாராட்டிக் கூறினார். அடியாருடைய குற்றங்களைக் கணிசியாமையே எம்பெருமானது மலரடிக்கு மாசில்லாமையாம்
English Translation
O Bumble bees that unite me to the soles of my perfect lord. The lord of gods who was abused for stealing butter! You have wings that can take you to Vaikunta easily. Before you go, left me what you intend to say to him about me.
