(2325)

(2325)

உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்

அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்

பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,

பூரித்தென் நெஞ்சே புரி.

 

பதவுரை

என் நெஞ்சே

எனது மனமே!

உலகமும்

உலகங்களும்

ஊழியும்

ஸம்ஹாரகாலமும்

ஆழியும்

கடல்களும்

ஒண் கேழ் அவர் கதிரும்

அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களையுமுடைய சந்திர ஸூர்கயர்களும்

செம் தீயும்

சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்

ஆவான்

ஆகிய இப்பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,

பல கதிர்கள் பாரித்த

பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற

பை பொன் முடியான்

அழகிய பொன்முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய

அடி இணைக்கே

உபயபாதங்களக்கே

பூரித்து புரி

பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்போது காணப்படுகின்ற லோகங்களும், இவையெல்லாம் ஸம்ஹரிக்கப்பட்டுக் காலமொன்று மாத்திரம் மிருந்திருக்கப்பெற்ற பிரளயகாலமும், ஆதித்யனும் அக்நியும் ஆகிய பதார்த்தங்களை ப்ரகாரமாகவுடையனாய் (இவற்றுக்கெல்லாம் ஆத்மாவாய்) பரமபதத்திலே பல கிரணங்களை வெளியிடுகின்ற திருவபிஷேகத்தையுடையனாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருவடிகளிலே பரிபூரணமான பக்தியைக் கொண்டிருக்குமாறு நெஞ்சுக்கு உபதேசித்தாராயிற்று.

 

English Translation

The deluge, the creation, the oceans, the radiant sun, the fire, -all these are the Lord. The wears a golden crown set with gems of many hues.  O Heart! worship with love the feet of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top