(2324)
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, – தனமாகப் பேரகலத்
துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு.
பதவுரை
|
சினம் மா மதம் |
– |
கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய |
|
களிற்றின் |
– |
(குவலயாபீட மென்கிற) யானையினுடைய |
|
திண்மருப்பை |
– |
திடமான தந்தத்தை |
|
சாய்த்து |
– |
முறித்துத்தள்ளினவனும் |
|
புனம் மேய |
– |
நல்ல நிலங்களோடு கூடின |
|
பூமி அதனை |
– |
பூமியை |
|
தனம் ஆக |
– |
நிதியாக நினைத்துக் கொண்டு |
|
பேர் அகலத்துள் ஒடுக்கும் |
– |
சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும் |
|
பேர் ஆரம் மார்வனார் |
– |
சிறந்த ஹாரஙகள் பூண்ட திருமார்பை யுடையனுமான எம்பெருமானுடைய |
|
ஓர் அகலத்து |
– |
ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின் |
|
உலகு உள்ளது |
– |
உலகமெல்லாம் உள்ளது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகமெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினால் ஸத்தைபெற்றுக் கிடக்கின்ற தென்கிறார். வில்விழவென்கிற வியாஜம்வைத்துக் கம்ஸனாலழைக்கப்பட்டு மதுரையில் அவனது அரன்மனையினுட் புகும்போது எதிர்பார்த்துப் போர் செய்து கொல்லவந்த குவாலயபீடமென்னும் மதயானையை மருப்பொசித்து முடித்தவனும், பூமண்டலமெல்லாம் பிரளயப்பெருங்கடலில் அழியாதபடி நிதியைக் காப்பாற்றுவதுபோல அவற்றைத் திருவயிற்றிலே வைத்துக்காப்பாற்றினவனும், இப்படி தன்னுடைமையானது ரக்ஷிக்கப்பட்டதென்ற மகிழ்ச்சி காரணத்தினால் ஆபரணம் பூண்டாற்போலேயிருக்கிற திருமேனியை யுடையவனுமான எம்பெருமானுடைய ஸங்கல்பத்தின் ஏகதேசத்திலுள்ளது இவ்வுலகமெல்லாம்.
அகலம் என்றசொல் ஸங்கல்பத்துக்கு வாசகமாவது எங்ஙனேயென்னில், இச்சொல் மார்பைச் சொல்லும், அதன் உட்புறமானமனத்தின் தருமமாகிய ஸங்கல்பத்தை இலக்கணையால் சொல்லுகின்றதென்க.
“பேரகலத்துள்“ என்ற விடத்து, பேர் என்றது எதிர்மறையிலக்கணையில் சிறுமையைச் சொல்லுமென்க.
English Translation
The angry elephant Kuvalayapida lost his tusk and his life. Dame earth occupies a part of the Lord’s chest, which sports a beautiful Tualsi-garland. The Lord takes the whole world into himself and protects if during deluge.
