(2178)

(2178)

பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்

அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்

அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,

புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.

பதவுரை

பிடிசேர் களிறு

–

பேடையோடு சேர்ந்து விஷயபோகபரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த

–

காத்தருளின
பேராளா

–

மஹாநுபாவனே!
பொடிசேர்

–

(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்

–

அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்

–

ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த

–

(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்

–

ஜலமயமான
கங்கை என்னும் பேர்

–

கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்

–

சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து

–

உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள்  அன்றே

–

(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “ அறம்பாவ மென்றிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு. புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்காயிருக்குமென்றிறே கீழ்ப்பாட்டிற்சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன, இரண்டுக்கும் இரண்டு வ்ருத்தாந்தங்கள் காட்டுகிறாரிதில்; ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். அக்களிறு பூர்வஜந்மவாஸநையினால் பகவத்பக்தி மாறாதிருக்கப் பெற்றாலும் மற்றுள்ள காட்டானைகள் போலே விஷயப்ரவணமுமாய்த் திரிந்துக்கொண்டிருந்தமை பற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடி- யானையின்பேடை.] சாபத்தின் பலனாகப் பாபயோநியிற் பிறவிபெற்ற அவ்யானைக்கும் அருள் செய்யக் காண்கையாலே பாபம் அவனிட்ட வழகாயிருக்குமென்பது பெறப்பட்டது. பாபிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந் தன்மை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது. “ஆனின் மேயவைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [ சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற ’பஞ்சகவ்யமும் பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது] என்றார் திருமழிசைப்பிரான்; ‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே ‘ கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸக்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது

English Translation

O Large-hearted Lord who saved the elephant in distress! The ash-ridden fire-wielding siva spills the Ganga-dame from his mat-hair.  Do you not bless her with purity by contact with your lotus feet of golden hue?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top