(2177)
திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான், – புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி.
பதவுரை
| என் நெஞ்சமே |
– |
எனது மனமே! |
| அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் |
– |
புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன் |
| செம் கண் மால் கண்டாய் |
– |
புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்; |
| இம்மண் தான் |
– |
இந்தப்பூமியும் |
| மரி கடல் தான் |
– |
அலையெறிகிற கடலும் |
| மாருதம் தான் |
– |
வாயுவும் |
| வான் |
– |
ஆகாசமும் |
| புறம் தான் |
– |
இவை தவிரவுள்ள மஹாந்முதலிய தத்துவங்களும் |
|
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்) |
||
| தானே கண்டாய் |
– |
அந்தத் திருமாலேயாவன்; |
| கடைக்கண் |
– |
முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில் |
|
(இதுவே உண்மையென்பதை) |
||
| திறம்பாது |
– |
தவறாமல் |
| பிடி |
– |
உறுதியாகக்கொள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அந்தோ! சிலர் அநியாயமாக நரகவழி நோக்குகின்றனரே! என்று கீழ்ப்பாட்டில் உலகத்தாரைப்பற்றிக் கவலையுற்ற ஆழ்வார், இப்பாட்டில், அவர்கள் எங்ஙனே கெட்டொழிந்தாலும் ஒழிக; நெஞ்சே! நீ மாத்திரம் ஸர்வநிர்வாஹகன் அப்பெருமானொருவனேயென்று நான் சொல்லுவதில் ஒரு போதும் விப்ரதிபத்தி கொள்ளாமல் இதுவே பரமார்த்த மென்று உறுதிகொண்டிரு-என்று திருவுள்ளத்தை நோக்கி உபதேசிக்கின்றனர்.
English Translation
Evil and good are both manifestations of the Lord. The ocean is he, the wind is he, the sky is he, the space too is he. Therefore worship him to the end. Take note, O Heart!
