(2133)

(2133)

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,

வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி

ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்

திருமாலைக் கைதொழுவர் சென்று.

 

பதவுரை

எண்மர்

அஷ்ட வஸுக்களும்

பதினொருவர்

ஏகாதச ருத்ரர்களும்

ஈர் அறுவர்

த்வாத சாதித்யர்களும்

ஓர் இருவர்

இரட்டையரான அச்விநீ தேவதைகளும்

(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்)

வைகலும்

நாள்தோறும்

வண்ணம் மலர் ஏந்தி

நாநாவர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக்கொண்டு

நண்ணி

(எம்பெருமானைக்) கிட்டி

ஒரு மாலையால்

ஒப்பற்ற புருஷஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு

ஓவாது

இடைவிடாமல்

எப்போதும்

எல்லா வேலைகளிலும்

பரவி

துதிசெய்து

திருமாலை சென்று

திருமகள் கொழுநனைக்கிட்டி

கைதொழுவர்

வணங்குவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடிபணிந்தே சிறப்புற்றிருக்கின்றனரென்கிறார். முதலடியில் முப்பத்துமூன்றுதேவர்களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களெனப்படுகிற அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க.  நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “ இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர். எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச்செய்தது காண்க.

 

English Translation

The eight vasus, the eleven Rudras, the twelve Adityas, the twin Asvins, -they all go with fresh flowers everyday without fail and chant praise, then offer worship with folded hands, to our Lord Tirumal. ‘

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top